Breaking News Major SBI Announcement

தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? – பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

38 0

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமானால் என்னென்ன சவால்களை எதிர்கொள்ள நேரிடும்?

தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்?

நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் தனது பங்குகளை 75% ஆகக் குறைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் மொத்தமாக 10-க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள் உள்ள நிலையில், பெரும்பாலான ஏழை எளிய மற்றும் நடுத்தர வகுப்பினரின் பணப்புழக்கம் பொதுத்துறை வங்கிகளை சார்ந்துள்ளதை மறுக்க இயலாது. தனியார் மயம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் ஏதும் வெளியாகாத நிலையில், இணையத்தில் உலாவி வரும் தகவல் பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்களை பீதியடையச் செய்துள்ளது. ஏனென்றால் வாடிக்கையாளர்களிடையே பெரும்பாலும் எழும் கேள்வி என்னவென்றால், தற்போது குறிப்பிடத்தக்கத்தக்க பங்குகள் தனியாருக்கு செல்லுமானால் சில காலத்துக்கு பின் முழுப்பங்குகளும் ஏன் கைமாறாது என்பதுதான்.

தனியார் மயமாதலால் ஏற்படும் சவால்கள் என்ன?

மேலும், பிரதமரின் ஜன் தன் யோஜனா, முத்ரா கடன்கள், விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் மானியங்கள் போன்ற அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் பொதுத்துறை வங்கிகள் முக்கிய பங்காற்றி வரும் நிலையில், தனியார் மயமாக்கப்பட்டால் இவற்றின் முக்கியத்துவம் குறைக்கப்படக்கூடும்.
தற்போது பொதுத்துறை வங்கிகள் தங்களின் மொத்தக் கடன் விநியோகத்தில் கணிசமான பகுதியை விவசாயம், சிறு-குறு தொழில்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் கல்விக்காக வழங்குகின்றன. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால், இவ்வகை கடன்களுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டு பெருநிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம்.

சேவைகளுக்கான கட்டணங்கள் உயர வாய்ப்பு

ஏடிஎம் பரிவர்த்தனைகள், எஸ்.எம்.எஸ் விழிப்பூட்டல்கள் மற்றும் பிற அடிப்படை சேவைகளுக்கான கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்படலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எளிமையாக கூற வேண்டுமானால் பொதுத்துறை வங்கிகள் லாபநோக்கமற்று செயல்படும், ஆனால் தனியார் வங்கிகள் முழுக்க முழுக்க லாபத்தையே முழுக்குறிக்கோளாக கொண்டு செயல்படுபவை. இதன் ஐயத்தை போக்க மத்திய அரசு இது குறித்த முழுமையாக விளக்கத்தை அளிக்க வேண்டுமென்பது வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Post

விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து ”உதயசூரியனை” ரசித்த பிரதமர் மோடி!

Posted by - மே 31, 2024 0
கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். நாளை பிற்பகல் வரை தியானம் மேற்கொள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றுள்ளார். கன்னியாகுமரி வந்தடைந்த…

வீடுகளுக்குள் 16 பேர் இருக்கும்போதே 3 மாடி கட்டிடத்தை நவீன எந்திரம் மூலம் தூக்கிய உரிமையாளர்

Posted by - ஜூன் 27, 2023 0
ஐதராபாத்: ஐதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட குத்புலாபூர் சிந்தால் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்தது. பல வீடுகள்…

Jio-க்கு இனி சிக்கல்.. இந்தியாவில் தனது கடையை விரிக்கும் டாப் பணக்காரர் எலான் மஸ்க்

Posted by - நவம்பர் 9, 2024 0
இந்தியாவின் அம்பானியின் ஜியோ நெட்வொர்க் தான் லீடிங்கில் உள்ள நிலையில் அம்மானிக்குப் போட்டியாக எலான் மஸ்க் இந்திய மார்க்கெட்டுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகிறது. இந்தியா மிகப்பெரிய மக்கள்…

ரிலையன்ஸுடன் இணைகிறது டிஸ்னி… 11,500 கோடி ரூபாய் முதலீடு…

Posted by - பிப்ரவரி 29, 2024 0
ரிலையன்ஸுடன் இணைகிறது டிஸ்னி… 11,500 கோடி ரூபாய் முதலீடு… ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னியின் இந்திய ஊடக நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடிவுசெய்துள்ளன. இந்த கூட்டு…

ஆந்திராவில் முதியவர் கிட்னியில் 3 ஆயிரம் கற்கள்- டாக்டர்கள் அதிர்ச்சி

Posted by - மார்ச் 11, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன