அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?

251 0

ஆதவ் அர்ஜுனா அதிமுகவை கிண்டலடித்த வீடியோ வைரலான நிலையில், அதற்கு பதிலடி எங்கிருந்து வந்துள்ளது தெரியுமா.? சீமானிடமிருந்து. ஆம், அவர் ஆதவ் அர்ஜுனா குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு செல்ல தயாராக இல்லை என்று, ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ தற்போது பரவி வரும் நிலையில், ஆதவ் குறித்த ஒரு முக்கிய தகவலை சீமான் வெளியிட்டுள்ளார். அது என்ன என்று பார்க்கலாமா.?

அதிமுக-தவெக-நாதக-வை இணைக்க முயன்ற ஆதவ் அர்ஜுனா

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் விசிக-விலிருந்து விலகிய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் ஆதவ் அர்ஜுனா. இதையடுத்து, அவருக்கு உடனடியாக தவெகவின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனால் உற்சாகமடைந்த ஆதவ், தவெக, அதிமுக உடன் எப்படியாவது  கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்று பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், இரு கட்சியின் தலைவர்களுக்கும் இடையே கன்டிஷன்கள் ஒத்து வராததால், கூட்டணி அமைக்கும் ஆதவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனிடையே, நாம் தமிழர் கட்சியையும் அதிமுக கூட்டணியில் இணைக்க முயன்றுள்ளார் ஆதவ் அர்ஜுனா, ஆனால் அவரது அந்த முயற்சியும் கைகூடவில்லை. அதன் பிறகு தவெக பரபரப்பாகிவிட, அங்கு வேலைகளை கவணிக்க ஆரம்பித்து விட்டார்.

அதிமுக-வை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா

இப்படிப்பட்ட சூழலில், தவெகவில் தேர்தலை நோக்கிய பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம், அதிமுக குறித்து கிண்டலாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரத் தயாராக இல்லை என்று அவர் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

மேலும், அண்ணாமலையாவது 10 பேரை கூட வைத்துக்கொண்டு, தேர்தலில் நின்று 18 சதவீத ஓட்டு வாங்கினார் என்றும், ஆனால் எடப்பாடி பழனிசாமியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை என்றும் ஆதவ் அர்ஜூனா பேசியதாக அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்த சீமான் கூறியது என்ன.?

இந்த நிலையில், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “புறணி பேசுவதற்கெல்லாம் நாங்கள் கருத்து சொல்ல முடியுமா? இதே ஆதவ் அர்ஜுனா தான், அதிமுக கூட்டணிக்கு வந்தால் என்னை துணை முதலமைச்சர் ஆக்குகிறேன் என்று கூறினார், அதற்கு என்ன செய்வது?” என சிரித்தபடி ஒரே போடாக போட்டுள்ளார்.

Related Post

தினமும் ‘இத்தனை’ படிக்கட்டுகள் ஏறுனா போதுமாம்… உங்களுக்கு மாரடைப்பே வராதாம் தெரியுமா?

Posted by - அக்டோபர் 28, 2023 0
தினமும் படிக்கட்டுகளில் ஏறுவதை உங்கள் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக மாற்றுங்கள். ஒருநாளைக்கு 50 படிக்கட்டுகளுக்கு மேல் ஏறுவது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஒரு…
hair care

தலைக்கு அடிக்கடி குளிக்கலான என்னென்ன ஆபத்துகள் ஏற்படும் தெரியுமா? இனிமே இந்த தப்ப பண்ணாதீங்க…!

Posted by - டிசம்பர் 4, 2023 0
நல்ல ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பது என்பது உங்கள் உடலை தினமும் சுத்தப்படுத்துவது மட்டுமல்ல. அதில் உங்கள் தலைமுடியை சுத்தமாக வைத்திருப்பதும் அடங்கும். நீங்கள் நல்ல முடி…

வெயில் அதிகமா இருக்கா..? வருகிறது மழை..

Posted by - ஏப்ரல் 19, 2023 0
தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி…

மிரளப் போகும் கோவை! களத்தில் இறங்கும் விஜய்! என்ன ப்ளான்? சம்பவம் லோடிங்!

Posted by - ஏப்ரல் 26, 2025 0
கோவையில் இன்றும் நாளையும் என 2 நாட்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெற உள்ளது. கோவையில் இன்றும் நாளையும் என 2 நாட்கள்…

இந்தமுறை கார்.. வாரம் ஒரு சர்ச்சை.. விளம்பரம் தேடுகிறாரா டிடிஎப் வாசன்.? தியேட்டர் வாசலில் நடந்தது என்ன?

Posted by - ஜனவரி 3, 2023 0
TTF Vasan : நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் வாசன். சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத காரில் பயணித்து போக்குவரத்து…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன