அதிரடியாக கட்சியை அறிவிக்கும் விஜய்.. விசுவாசிகளுக்கு வைத்த முக்கியமான வேண்டுகோள்

262 0

சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்ட மாதிரி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த விஜய்யை சில அரசியல் தலைவர்கள் சீண்டியதன் பேரில் அவரது பார்வை படிப்படியாக அரசியலுக்கு திரும்பியது.

அரசியலில் தனது வருகை சாதாரணமாக இருக்கக் கூடாது என்று செம்மையாக பல திட்டங்களை வகுத்து இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வருகிறார் விஜய். கடந்த சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு நடிகர்களாக வரிசையில் நின்று வாக்களிக்க, இவரோ யாரும் எதிர்பாராத அளவு சைக்கிளில் வந்து  வாக்களித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவது, தொகுதி வாரியாக நூலகம் அமைப்பது, மழை திட்ட உதவி, வெள்ள நிவாரண பணி என அரசியலுக்கான அச்சாரத்தை பலமாக போட்டார் விஜய்.  இந்நிலையில் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக மாறிவிடுவாரோ என்று எண்ணிக்  கொண்டிருந்தனர் ரசிகர்கள்.கடந்த ஆண்டு இதை உறுதி செய்யாத வகையில் வாரிசு,லியோ என வெற்றி படங்களை கொடுத்து விட்டு அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் G.O.A.T படத்திலும் இணைந்தார் தளபதி.  என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார் சினிமாவா? அரசியலா? என்று ரசிகர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கிறார் விஜய்.G.O.A.T படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் விஜய் 69 காண இயக்குனர் தேர்வு, தயாரிப்பு நிறுவனம் என ஒவ்வொன்றையும் கவனமாக தேர்வு செய்து வருபவர், தனது அரசியலையும் விட்டுவிடாமல் கமுக்கமாக  சென்னையை அடுத்த பனையூரில் நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனையிலும் ஈடுபட்டு உள்ளார்.

தென் மாவட்டங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து வருகின்ற லோக்சபா தேர்தலில் போட்டியிடுமாறு தனது அரசியல் கட்சியை பதிவு  செய்யலாமா அல்லது  கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாமா போன்ற பல்வேறு ஆலோசனைகளை நடத்தியுள்ளார் தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறப்போவது உறுதியாகியுள்ளது. தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் “நல்லவர்களுக்கு ஓட்டளியுங்கள்” என்று மக்களிடம் கூறுமாறு நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளாராம்.  “வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகிறான்! தளபதி தளபதி நீயே எங்கள் தளபதி!” என ரசிகர்கள் குதூகலிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

Related Post

வெண்டைக்காய்.. சர்க்கரை நோயாளி வெறும் வயிற்றில் இதை குடிச்சாலே போதும்.. வெண்டையின் ஆச்சரிய மருத்துவம்

Posted by - ஜனவரி 2, 2024 0
சென்னை: வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை சிறப்பாக செயல்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்ற பல நன்மைகள் உள்ளது என்றாலும், வெண்டைக்காயை எப்படி சமைக்க வேண்டும் தெரியுமா? புரோட்டீன்,…

எல்லா பக்கமும் அணை கட்டிய ஈபிஎஸ்.. தவிக்கும் செங்கோட்டையன் – பதறியடித்து நோ சொல்ல காரணம் என்ன?

Posted by - செப்டம்பர் 26, 2025 0
அதிமுகவின் முழு அதிகாரமிக்க தலைமையாக எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து இருப்பதால், போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் செய்வதறியாமல் தவித்து வருகிறாராம். எடப்பாடி பழனிசாமியை மேலும் பகைத்துக் கொள்ள வேண்டாம்…
dfghj

கருணாநிதி சூழ்ச்சி..ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு..

Posted by - மார்ச் 3, 2026 0
பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை சொத்து குவிப்பு வழக்கில் இணைத்து விட்டார்…
tvk vs dmk

TVK Vs DMK: கூச்சமே இல்லையா..! கிழிந்து தொங்கும் திமுகவின் பொய் முதலீட்டு மூட்டைகள் – தவெக பதிலடி

Posted by - மே 20, 2026 0
TVK Vs DMK: ராயல் என்ஃபீல்ட் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றது தொடர்பாக, திமுகவினர் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தவெகவினர் கடுமையாக விமர்சித்து…

“அட கடவுளே” நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில்.. AK-க்கு என்னாச்சு..? நாளை Birthday வாச்சே..!

Posted by - ஏப்ரல் 30, 2025 0
பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு அப்பலோ மருத்துவமனைக்கு சென்றிருக்கும் அஜித்குமாருக்கு என்ன…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன