அரசியல் கட்சிகளின் புது ஆயுதம்..

212 0

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த இந்தியாவாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக என்ற பாரம்பரியம் மிக்க கட்சிகளுடன் சேர்ந்து புதிய கட்சியாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த அரசியல் களத்தில் போட்டியாக குதித்திருப்பதே ஆகும்.

சமூக வலைதளங்கள்:

இணையதள வளர்ச்சியின் எதிரொலி தொழில்துறை, மருத்துவத்துறை, விஞ்ஞானம் என பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது போல, அரசியலிலும் இணையதள வளர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் தலைமுறை வாக்காளர்கள், இணையளதத்தை பயன்படுத்துபவர்களையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கு தோதாக அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்களை தீவிரமாக பயன்படுத்தி வருகிறது.

ஏனென்றால், தேர்தல் பரப்புரைக்கு சமூக வலைதளம் சிறந்த இடமாக அரசியல் கட்சிகள் கருதுகின்றனர். ஆனால், இதை அரசியல் கட்சிகள் வேறு கோணத்தில் கையாண்டு வருகின்றனர். அதாவது, சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது கட்சியின் கொள்கைககள், செயல்பாடுகள், நிலைப்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்று நற்பெயர் பெற்றுக் காெள்வதற்கான முக்கியத்துவம் குறைவாக உள்ளது.

அவதூறும், விமர்சனங்களும்:

அதற்கு பதிலாக, தங்களது போட்டி கட்சி மீதான விமர்சனங்களையே அதிகளவில் கொண்டு செல்வதில் ஆர்வமாக உள்ளனர். சில சமயங்களில் அந்த கட்சிகள் மீது அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுமட்டுமின்றி, அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் சாதாரண பயனாளர்கள் போல பல ஆயிரக்கணக்கான கணக்குகளை அரசியல் கட்சிகள் சில உருவாக்கி வைத்துள்ளன.

அந்த கணக்குகள் மூலமாக, தங்களது கட்சிக்கு எதிராகவோ, தங்களது கட்சியை விமர்சித்தோ சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பதிவிடப்பட்டால் அந்த பதிவிட்டவரை மிக கடுமையான விமர்சனம் செய்வதையே இந்த கணக்குகள் மூலம் வேலையாக வைத்துள்ளனர். சில சமயங்களில் இந்த கணக்குகள் மூலமாக தங்களுக்கு எதிராக கருத்துக்களையோ, செய்திகளையோ பதிவிடுபவர்களை தகாத வார்த்தைகளால் ஏளனமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

சைபர் மிரட்டல்:

இதுபோன்ற தொடர் விமர்சனங்களால் தங்கள் கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட நெட்டிசன்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால், நெட்டிசன்கள் பலரும் அதுபோன்ற எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் கவலை கொள்ளாமல் தொடர்ந்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆரோக்கிய அரசியலை பலரும் வலியுறுத்தி வந்தாலும், அதன் வளர்ச்சியை காட்டிலும் அவதூறு அரசியல் அந்த காலம் முதல் இருந்து கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கிறது. தற்போது அது சமூக வலைதளங்களிலும் உக்கிரமாக இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பிரதான கட்சி ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் இதுபோன்ற சைபர் தாக்குதல்களில் தேர்தல் வரை தீவிரமாக இருப்பார்கள் என்று கூறலாம். அடுத்த 10 மாதங்களில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகள் எந்தளவு இருக்கிறதோ, அதைவிட பன்மடங்கு அதிகமாக தங்களது எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனங்களும், அவதூறுகளும், சரமாரி விமர்சனங்களும் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Related Post

திமுக, அதிமுகவை விட அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தவெக! மணி வார்த்தை பொய் ஆகுமா?

Posted by - அக்டோபர் 7, 2024 0
திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகளைவிட புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தவெக கட்சிக்கு அதிகளவு உறுப்பினர்கள் இருப்பதாக பிரபல ஜர்னலிஸ்ட் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில்  தளபதி விஜயின் வருகை…

ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை – நடிகர் அஜித் உருக்கம்!

Posted by - ஜனவரி 14, 2025 0
“எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை. இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது”…
health

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா? இந்த 6 பழமும் நீரிழிவு நோயாளி சாப்பிடலாம்.. என்ன பாருங்க

Posted by - டிசம்பர் 2, 2023 0
சென்னை: சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கள், பழங்கள், பருப்புகள் என்னென்ன தெரியுமா? எந்தெந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும்? ஆரஞ்சு பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?…
RK

அனல் பறக்கும் தமிழக அரசியல்: விஜய்க்கு சிக்கல்! பதவியேற்பை நிறுத்த ஆளுநருக்கு அவசர மெயில்!

Posted by - மே 6, 2026 0
#TNPolitics #BreakingNewsTamil #GovernorDecision #DMK #CongressMLA #TamilNaduNews #PoliticalDrama #ViralNewsTamil #Pixeltamil   தமிழக அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. நாளை விஜய்…
vijaykanth

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்… பொதுமக்கள் அஞ்சலி… மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம்

Posted by - டிசம்பர் 29, 2023 0
தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன