ஆந்திராவில் களை எடுக்கும் போது விவசாய நிலத்தில் கிடைத்த வைர கற்கள் லட்சாதிபதியான பெண் கூலி தொழிலாளி

282 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம், ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் துக்கிலி மண்டலம் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது தேன் நிறத்திலான கல் ஒன்று கிடைத்தது. அதை எடுத்த பெண் அங்குள்ள நகை கடைக்கு சென்று பரிசோதித்தார். அப்போது வைரக்கல் என தெரிய வந்தது.Andhra Pradesh: Woman finds Diamond while working in the farm at Jonnagiri  of Kurnool

வயல் வெளியில் கிடைத்த வைரத்தை நகை வியாபாரி ரூ.25 லட்சத்திற்கு வாங்கினார். வயல்வெளியில் வைரம் கிடைத்த தகவல் அந்த ஊர் முழுவதும் பரவியது. இதனால் ஆண்கள், பெண்கள் என போட்டி போட்டுக் கொண்டு வயல்களில் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஊர் மக்கள் அனைவரும் போட்டி போட்டு வயலில் வைரத்தை தேடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஊர் மக்கள் அனைவரும் வயல்வெளியில் வைரத்தை தேடியதால் கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த தகவல் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் பரவியது. இந்நிலையில் பக்கத்து ஊரான மத நாதபுரத்தை சேர்ந்த விவசாயி தனது குடும்பத்தினருடன் அவரது வயல்வெளியில் வைரத்தை தேடினார். அவருக்கு 2 வைரக்கல் கிடைத்தது. தொடர்ந்து பொதுமக்கள் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Post

திருப்பதிக்கு போறீங்களா? 99 சதவீதம் பேர் செய்யும் தவறு! பெருமாளே சொல்லியும் பாலோ செய்யாத பக்தர்கள்

Posted by - டிசம்பர் 26, 2023 0
திருப்பதி: திருப்பதியில் 99 சதவீத பக்தர்கள் செய்யும் தவறுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.…

பெங்களூரு: ஒரே நாளில் 1,344 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

Posted by - ஜூன் 9, 2023 0
பெங்களூரு கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் அதிகளவில் வேலை விஷயமாக குடியிருந்து வருகிறார்கள். இதனால் தலைநகரில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்ற…

ஆந்திராவில் முதியவர் கிட்னியில் 3 ஆயிரம் கற்கள்- டாக்டர்கள் அதிர்ச்சி

Posted by - மார்ச் 11, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனை…
Gemini Generated Image 5h9m255h9m255h9m

அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!

Posted by - ஏப்ரல் 1, 2026 0
வங்கியின் வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமலே வங்கியை மாற்றிக்கொள்ளும் வசதியை விரைவில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன