adb75d42 d8e0 41c7 9476 f9058e8f3e96 1

“ஆபாச அமைச்சர் ஆதவ் அர்ஜூனா” .! அந்தப்புர பேச்சை சுட்டிக்காட்டி வெளுத்து வாங்கிய திமுக

117 0

தவெக நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் செய்யும் ஆபாச பாலியல் கொடூரங்களை தடுக்க வழி தேடாமல், எங்களைக் கேலி செய்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள்  என்று நாடகமாடுவதை முதலில் நிறுத்துங்கள் என திமுக பதிலடி கொடுத்துள்ளது.

திமுக- தவெக இடையே தொடரும் வார்த்தை போர்

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், தினந்தோளும் திமுக- தவெகவிற்கு இடையே வார்த்தை மோதல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இரு தரப்பும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தாராபுரத்தில் நடைபெற்ற பிர்ச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமாவை விம்சிக்கும் வகையில் பெட்டி பாமா, பல்டி பாமா என கூறி சர்ச்சையான வார்த்தையை தெரிவித்திருந்தார். இதற்கு தவெக அமைச்சர்கள் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் ஆணையத்திலும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா புகார் அளித்திருந்தார்.

ஆதவ் அர்ஜூனாவிற்கு திமுக பதிலடி

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், அந்தப்புரத்தில் இரவில் அதிக வேலை இருக்கும் என்று பேசிய ஆபாச அமைச்சரே,  நீங்க கம்ப்ளைண்ட் குடுக்கும்பொழுது உங்க பேச்சுக்கும் சேர்த்து ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்தீங்களா?  நேற்றிலிருந்து வாய்கிழிய நியாயம் பேசும் அமைச்சர்கள் எல்லாம் உங்கள் ஆபாச அர்ஜுனா பேசியபோது  வாய்மூடிக் கடந்து சென்றீர்கள் தானே ?

நாடகமாடுவதை நிறுத்துங்கள்- திமுக

 

நாடகமாடுவதை நிறுத்துங்கள்- திமுக

இதுவே எதிர்த்தரப்பிலிருந்து  யாராவது பனையூர் அந்தப்புரத்தைப் பற்றி ஆபாச அர்ஜுனா  கேட்ட அதே  கேள்வியை எழுப்பியிருந்தால் மெளனமாகக் கடந்து செல்வீர்களா?  தவெக நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் செய்யும் ஆபாச பாலியல் கொடூரங்களை தடுக்க வழி தேடாமல், எங்களைக் கேலி செய்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள்  என்று நாடகமாடுவதை முதலில் நிறுத்துங்கள். மக்களும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி உங்களைக் கேலி செய்யவில்லை. கேள்விதான் கேட்கிறார்கள். கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஓடும்போதுதான் நீங்கள் உண்மையில்  கேலிப்பொருள் ஆகிறீர்கள் என திமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது.

Related Post

vijay cm

TVK Vijay: எதுக்குயா தவெக? திமுக, அதிமுகவே ஆண்டுட்டு போலாமே..! தூயசக்தி பிராண்டை இழக்கும் CM விஜய்?

Posted by - மே 26, 2026 0
TVK Vijay: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசியல் நிலைப்பாடுகளை கண்டு, இதற்கு திமுக மற்றும் அதிமுகவே தமிழ்நாட்டை ஆளலாமே என நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.TVK…

நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி

Posted by - பிப்ரவரி 17, 2025 0
இந்தி திணிப்பை திமுக எதிர்க்கிற இலட்சணம் இதுதானா?” என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. PM SHRI திட்டத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசின் கடித்தத்தை வெளியிட்டு அதிமுக…

“ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு” கொதிக்கும் உதயநிதி!

Posted by - மார்ச் 3, 2025 0
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் பற்றவைத்த சுயமரியாதை நெருப்பு இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல பரவியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை,…
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

DMK TVK: ”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” – இறங்கி அடிக்கும் TVK

Posted by - ஜூன் 18, 2026 0
DMK TVK: திமுகவினரை போன்று அரசு சொத்துகளை கொள்ளையடித்து, பொய்களை கண்மூடித்தனமாக பரப்பமாட்டோம் என தவெகவினர் கடுமையாக பதிலடி தந்து வருகின்றனர். DMK TVK: முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை…
Generated Image November 04 2025 4 27PM

சேலம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது தாக்குதல்: கண்ணாடி உடைப்பு

Posted by - நவம்பர் 4, 2025 0
சேலம்: வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் எம்எல்ஏ அருளின் கார் சேதமடைந்தது. சேலம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன