உதயநிதி பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

269 0

உதயநிதி அமைச்சரானால் திமுக ஆட்சியில் நடைபெறும் ஒட்டுமொத்த ஊழலுக்கும் தலைவராவார் – ஈபிஎஸ்

உதயநிதி அமைச்சராகவுள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில் நாளை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியானது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நாளை காலை 9:30 மணிக்கு அவர் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி, உதயநிதி அமைச்சராவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும் அவர் அமைச்சரானால் திமுக ஆட்சியில் நடைபெறும் ஒட்டுமொத்த ஊழலுக்கும் தலைவராவார் என தெரிவித்தார்.

Related Post

Gemini Generated Image 1mc9ek1mc9ek1mc9

கர்மா சும்மா விடுமா? – உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!

Posted by - ஏப்ரல் 7, 2026 0
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என…

“உனக்கு என்ன பிரச்சினை, போடா!” – சீமானின் ஆவேசப் பேச்சு: கொலை மிரட்டல் வழக்குப் பதிவு!

Posted by - நவம்பர் 24, 2025 0
10 நாட்களில் 5 கோடி பேருக்கு SIR படிவங்களைக் கொடுக்க முடியுமென்றால், ஜாதி வாரி கணக்கெடுப்பு  நடத்த முடியாதா? – சீமான் கேள்வி புதுச்சேரி: கொளத்தூர் தொகுதியில்…

டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

Posted by - செப்டம்பர் 17, 2025 0
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்…

தவமா? சரித்திரமே கிடையாது: மீண்டும் கெடுத்துவிட்ட அண்ணாமலை? செம டென்ஷனில் இபிஎஸ்!

Posted by - மார்ச் 8, 2025 0
எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்தது கிடையாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம்…
we

இன்று அரசு அதிகாரிகள் கட்டாயம் அலுவலகத்திற்கு வரனும்

Posted by - மார்ச் 14, 2026 0
திமுக அரசின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடையும் சூழ்நிலையில், விடுமுறை நாளான இன்று முக்கிய அரசுத் துறை அதிகாரிகளை பணியாற்ற மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். திமுக அரசின்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன