உலகை அச்சுறுத்தும் புதிய கொரோனா உள்ளிட்ட 8 வைரஸ்கள்: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

395 0

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனாவால் லட்சக்கணக்கான வீடுகளில் மரண ஓலம் கேட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

2-வது அலை, 3-வது அலை என அலை அலையாய் வந்து அச்சுறுத்திய கொரோனா பின்னர் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. எனினும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா குறித்த அச்சம் மக்களிடம் இன்னமும் உள்ளது.இந்தியாவில் புதிய வகை உருமாற்ற கரோனா வைரஸ் எதுவும் இல்லை: மத்திய  சுகாதாரத்துறை | No case of new Covid variant in India so far: Report -  hindutamil.in

இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவலை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தெற்கு சீனாவில் அமைந்துள்ள வெப்பமண்டல தீவான ஹைனானில் இதுவரை கண்டிராத 8 வைரஸ்களை சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வை சீன மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இந்த வைரஸ் இனங்கள் பெருகினால் மனிதர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு காரணமான சார்ஸ்-கோவி-2 உடன் தொடர்புடைய வைரசும் இதில் அடங்கும். 341 வகையான பூச்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட 682 மாதிரிகளில் இந்த வைரஸ்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறும்போது “ஹைனானில் வசிக்கும் கொறித்துண்ணி பூச்சிகளிடமிருந்து 700-க்கும் மேற்பட்ட மாதிரிகளை நாங்கள் ஆய்வு செய்தோம், மேலும் 8 வைரஸ்களைக் கண்டறிந்தோம். வைரஸ்களில் ஒன்று, கொரோனா வைரஸின் அதே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ்கள் கொறித்துண்ணி பூச்சிகளில் காணப்பட்டன, இந்த வைரஸ் எப்போதாவது பரவத்தொடங்கினால் மனிதர்களை அதிகமாக பாதிக்கும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில், ஒன்று கோவிஎச்.எம்.யு-1 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டது. இது கொரோனாவுக்கு காரணமான அதே குழுவைச் சேர்ந்தது. கூடுதலாக, பல புதிய நோய்க்கிருமிகள் வெவ்வேறு வைரஸ் வகைகளில் கண்டறியப்பட்டன.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வைரஸ்களில் மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற வைரஸ்களுடன் தொடர்புடைய இரண்டு புதிய பூச்சி வைரஸ்கள், ஒரு புதிய ஆஸ்ட்ரோவைரஸ், இது வயிற்றுப் பூச்சிகள் போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்துவதாக அறியப்படு கிறது. 2 புதிய பார்வோ வைரஸ்கள், இது காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். 2 புதிய பாப்பிலோமா வைரஸ்கள், அவை பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் மனிதர்களில் சில புற்றுநோய்கள் போன்ற நிலைமைகளுடன் தொடர்புடைய வைரஸ்கள். ராட்சத எலி மற்றும் சிக்கிம் எலி ஆகிய 2 எலி இனங்களில் புதிய பூச்சி வைரஸ்கள் மற்றும் பார்வோ வைரஸ்கள் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Related Post

image 5

எங்களால் இன்னும் 6 மாதங்களுக்கு போரை தீவிரமாக நடத்த முடியும்: ஈரான் அறிவிப்பு

Posted by - மார்ச் 8, 2026 0
தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக 6 மாதங்களுக்கு தங்களால் ஒரு தீவிரமான போரை நடத்த முடியும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல்…

Extra-Marital Affair | பெண்கள் ஏன் திருமணத்தை கடந்த உறவைத் தேர்வு செய்கிறார்கள்? – 5 காரணங்கள்.!

Posted by - டிசம்பர் 3, 2022 0
தன் கணவருடன் பாலியல் உறவு மிக மிக கொடுமையாக இருந்ததுதான் ஒரே காரணம் என்று ஒரு பெண் தெரிவித்திருக்கிறார். பல முறை முயற்சி செய்தும் கூட, அந்த…

புத்தாண்டு 2026 : புதிய தொடக்கம், புதிய நம்பிக்கை

Posted by - டிசம்பர் 31, 2025 0
2026 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் புதிய எதிர்பார்ப்புகளும், வளர்ச்சிக்கான கனவுகளும் கொண்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டின் அனுபவங்களை பாடமாக கொண்டு, முன்னேற்றம், அமைதி மற்றும் நம்பிக்கை…

ஓடும் காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய அமெரிக்க நபர்

Posted by - ஏப்ரல் 15, 2023 0
அமெரிக்காவை சேர்ந்த நபர் கோலின் தேவிஸ் மெக்கர்தி (38). இவர், கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவு அங்குள்ள நெடுஞ்சாலை அருகில் தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது…

கிரீஸ் நாட்டில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 29 பேர் பலி- 85 பேர் படுகாயம்

Posted by - மார்ச் 1, 2023 0
கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று 350 பயணிகளுடன் ரெயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன