எல்லை மீறி வார்த்தை விடும் போட்டியாளர்களும், ஏமாற்றிய விஜய் சேதுபதியும் | Bigg Boss Tamil 9

214 0

இந்த சீசன் தொடங்கியதில் இருந்து கடந்த வாரம் நடந்த எல்லை மீறல்கள் அளவுக்கு எந்த சீசனிலும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. குறிப்பாக போட்டியாளர்கள் மாறி மாறி வசவுகளால் தாக்கிக் கொண்டது சகிக்க முடியாத அளவுக்கு இருந்தது. அதை விட கொடுமை, இந்த மூன்றாவது வார இறுதியில் விஜய் சேதுபதி அவற்றை மேம்போக்காக கையாண்டதுதான்.திவாகருக்கும், கானா வினோத்துக்கு இடையிலான ‘செல்லமான’ வாக்குவாதங்களும், சின்ன சின்ன சண்டைகளையும் அப்படியே விட்டிருந்தால் இயல்பாக இருந்திருக்கும். அதைக் குறிப்பிட்டு போன வார இறுதியில் பேசிய விஜய் சேதுபதி வெளியே உங்களுடைய நட்பு பயங்கர வைரல் என்று போட்டு உடைத்தது வினையாகிவிட்டது. வேண்டுமென்றே திவாகரை வினோத் சீண்டிக் கொண்டிருப்பது ஓவர் டோஸ் ஆகி ஒருகட்டத்துக்கு மேல் திவாகரைப் போலவே நமக்கும் எரிச்சலை ஏற்படுத்திவிட்டது.மற்றதெல்லாம் கூட ஓகே. ஆனால் திவாகருடைய உருவத்தை வைத்தும், அவருடைய நடையை வைத்தும் கிண்டல் செய்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அதிலும் வினோத்துடன் கம்ருதீனும் சேர்ந்துகொண்டு செய்ததெல்லாம் அநாகரிகத்தின் உச்சம். ‘மரத்துக்கு சேலை கட்டுவது’, ‘பொம்பள பொறுக்கி’ போன்ற வார்த்தைப் பிரயோகம் எல்லாம் இதுவரை எந்த சீசனிலும் கேட்காதது.

இன்னொரு பக்கம் ஜூஸ் கடை டாஸ்க்கின்போது, எப்போதும் திவாகருடனே இருக்கும் பார்வதியும் கூட திவாகரை சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் மோசமாக பேசினார். மற்றவர்களிடம் எகிறினாலும் பார்வதி விஷயத்தில் அடக்கி வாசிக்கும் திவாகரே ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல் பொங்கி எழுந்துவிட்டார்.

இதில் திவாகரும் சளைத்தவரில்லை. யாருடன் சண்டை போட்டாலும் திரும்ப திரும்ப ‘நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை’, ‘என்னுடைய பேக்கிரவுண்ட் தெரியுமா?’ என்றெல்லாம் வார்த்தைகளை விடுகிறார். அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி பேசுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். கம்ரூதீனை வளர்ந்த விதம் குறித்தெல்லாம் பேசுகிறார்.

இது ஒருபுறமென்றால், அதே வார்த்தையை கம்ருதீனும் வாயில்லா பூச்சியான துஷாரிடம் பிரயோகித்தார். அதுவும் வார இறுதியில் விஜய் சேதுபதி இருக்கும்போதே. இதுபோன்ற அநாகரிகமான செயல்கள் இந்த வாரம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. முதல் வாரம் ஆதிரை எழுந்து நிற்கவில்லை என்பதற்காக அவரை ’வைத்துச் செய்த’ விஜய் சேதுபதி, இந்த வாரம் இந்த டாபிக்கை வைத்து சரவெடியாய் வெடிப்பார் என்று பார்த்தால் அந்த எதிர்பார்ப்பு புஸ்வானம் ஆகிவிட்டது.

போட்டியாளர்களிடம் நேரடியாக இந்த வாரம் நீங்கள் நடந்து கொண்ட விதம் மோசம் என்று கூறிய அவர், அவர்களின் வார்த்தை பிரயோகங்களை கேள்வி கேட்காமல் விட்டது ஏமாற்றம். குறிப்பாக ‘பேக்கிரவுண்ட் தெரியுமா?’, ‘வளர்ப்பு’ குறித்தெல்லாம் பேசியதையாவது அவர் கேட்டிருக்க வேண்டும். அல்லது இந்த சீசனுக்கு இதுவே போதும் என்று இருந்துவிட்டாரா என்று தெரியவில்லை. முந்தைய ஒரு சீசனில் வளர்ப்பு குறித்து ஒரு போட்டியாளர் பேசியதை கமல் கடுமையாக கண்டித்ததையும் நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது.

குடும்பத்தோடு நிகழ்ச்சியை பார்க்கமுடியவில்லை என்று ஆடியன்ஸ் கூறியதை போட்டியாளர்களிடம் மேற்கோள் காட்டிப் பேசிய விஜய் சேதுபதி, அநாகரிகமான வார்த்தைகளை தவிர்க்குமாறு அவர்களுக்கு கொஞ்சம் அறிவுறுத்தியிருக்கலாம்.

Related Post

விஜய் சார் அப்படி பண்ணுவாருனு நெனச்சி கூட பாக்கல.. பிக் பாஸ் ஜனனி ஓபன் டாக்

Posted by - நவம்பர் 8, 2023 0
ஜனனி பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜனனி, சமீபத்தில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார். ஓபன்…

படத்தை விட அந்த விஷயத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் அனிருத்.. வாய்யடைந்துபோன பிரபலங்கள்

Posted by - ஆகஸ்ட் 23, 2023 0
அனிருத் மிழ் திரையுலகின் தற்போதைய நம்பர் 1 இசையமைப்பாளர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அனிருத். இவர் இசையில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.…

என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..?அது அது அந்த காலம்….

Posted by - பிப்ரவரி 2, 2024 0
#சிம்_கார்டு_நினைவுகள் : என்னது ஒரு காலத்துல இத்தனை கம்பெனி சிம் கார்டுங்க இருந்துச்சா..? இதெல்லாம் இப்ப எங்க போச்சு..? ஒரு பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடி இந்த சிம்கார்டு…

கோபி – சுதாகரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியது ஏன்.. முதல் முறையாக கூறிய ஈரோடு மகேஷ்

Posted by - ஜூன் 10, 2023 0
கோபி – சுதாகர் Youtube தளத்தில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள் கோபி – சுதாகர். இவர்கள் இருவரின் நகைச்சுவைக்கும் லட்ச கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். Youtubeல்…

நடுரோட்டில் சண்டை, போலீசில் சிக்க வைத்த பாக்யா.. இது தேவையா கோபி?

Posted by - ஆகஸ்ட் 4, 2023 0
பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வருவது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் இங்கிலிஷ் கிளாசில் பாக்யாவுக்கு பழனிச்சாமி நேரில் ப்ரொபோஸ் செய்வதை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன