”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு

249 0

Seeman On Vijay: தவெக தலைவர் விஜய்க்கு எதற்கு X,Y பிரிவு பாதுகாப்பு என, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Seeman On Vijay: சொந்த சாதியே தன்னை ஒதுக்கிவிட்டதாக, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு எதுக்கு பாதுகாப்பு?

காமராஜரின் பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை அடுத்த பம்மலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது, “ஒன்னுமே இல்லை, கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்லை. Z பிரிவு, Y பிரிவு  பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சிரிக்காதீர்கள், சத்தியத்தின் மகன் நான் சத்தியம் தான் பேசுவேன். ஒன்னுமே இல்லாத நபர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு அப்படி துப்பாக்கி, இப்படி துப்பாக்கி என வழங்குகிறார்கள்.

அரசு பணத்தை வீணடிக்க வேண்டாம் என போலீஸ் பாதுகாப்பையே ரத்து செய்து ஒரே ஒரு வாகனத்திகல் பயணித்தவர் காமராஜர். அப்படி ஒரு தலைவன் வாழ்ந்தான் என்றால் நம்பமுடிகிறதா? வாழ்ந்தான் அவரை போன்றே இன்னொரு தலைவன் வாழ்வான். அது அவர் பேரன் சீமான் தான். வேறு யாராலும் வாழ முடியாது.

நாட்டுக்கே நான் தான் பாதுகாப்பு:

சிலர் கேட்கலாம், சீமான் உங்களுக்கு நிறைய மிரட்டல்கள் இருக்கின்றன, உங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென வலியுறுத்துவார்கள். டேய், நாட்டுக்கே நான் தான் பாதுகாப்பு, எனக்கு எதுக்குடா பாதுகாப்பு. ஒரு தலைவன் தன் உயிருக்கு பயந்தால், அவன் எப்படி மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பான். உயிருக்கு பயப்படுபவன் எப்படி நாட்டிற்கு தலைவன் ஆக முடியும். நாட்டிற்காக உயிரையே கொடுக்க துணிந்தவர் தான் எங்கள் தாத்தன் காமராஜர். வேறு யார் அப்படி இருந்தார்கள்? எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அவரது புகழை பாடிக்கொண்டே இருக்கலாம்.

”சொந்த சாதியே நிராகரித்துவிட்டது” – சீமான்

இப்படியெல்லாம் பேசுவதால் எனது சொந்தக்காரர்கள் ஓட்டு போட்டுவிடமாட்டார்கள். இந்தியாவிலேயே ஒரு அரசியல் தலைவன் சொந்த சாதியாலேயே நிராகரிக்கப்பட்ட ஒரே தலைவன் சீமான் மட்டும் தான். எனது சாதிக்காரர்கள் யாருமே போடாமல், 36 லட்சம் வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக வந்து நிற்கிறேன். காமராஜருக்கு உண்மையான பேரனாக இருந்து ஒருவனாவது உழைக்க வேண்டும் என்றே எனது சாதிக்காரர்களே என்னை புறந்தள்ளிவிட்டனர்.” என பேசினார்.

விஜய் மீது தீவிர அட்டாக்:

ஒன்னும் இல்லாதவனுக்கு Z பிரிவு, Y பிரிவு பாதுகாப்பு என சீமான் குறிப்பிட்டது, தமிழக வெற்றிக் கழக தலைவர் மீதான மறைமுக தாக்குதலே என கூறப்படுகிறது. விஜய் மீதான விமர்சனங்களை தவிர்த்து வந்த சீமான், அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகே மீண்டும் காட்டமாக விமர்சித்து வருகிறார் என நெட்டிசன்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். விஜயால் தனது இருப்பு பாதிக்கப்படும் என கருதி, திமுகவுடன் இணைந்து சீமான் பணியாற்றுவதாகவும் தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Related Post

Generated Image January 08 2026 10 50AM

ஜனநாயகன் பிரச்னை – காங்கிரஸ் அட்டாக்

Posted by - ஜனவரி 8, 2026 0
ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சார படங்கள் என போற்றப்படுவது ஏன்? என விஜயின் ஜனநாயகன் பட விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. தணிக்கை குழுவும் பாஜகவால் ஆயுதமாக…

இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும்

Posted by - ஜனவரி 3, 2026 0
TN Govt TAPS Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.…
fgdf

2026 தமிழ்நாடு அரசியல் ‘திக் திக்’: தவெக எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா? தளபதியை தடுக்க கைகோர்க்கும் திமுக – அதிமுக!

Posted by - மே 8, 2026 0
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழகமே பரபரப்பின் உச்சியில் இருக்கும் நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களையும் மக்களையும் ஒரே நேரத்தில் குழப்பத்திலும்,…
sd

ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?

Posted by - மார்ச் 30, 2026 0
தமிழ்நாடு பாஜகவில் தலைவராக இருந்தபோது அண்ணாமலை எடுத்த நடவடிக்கைகளின் விளைவாகவே தற்போது அவர் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுகிறது. Annamalai BJP TN Election 2026: கோவை வந்திருந்த பிரதமர் மோடியை…
nda

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி: மேட்ரிஸ் – ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

Posted by - மார்ச் 16, 2026 0
தமிழக அரசி​யல் களம் குறித்து கருத்​துக் கணிப்பு வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் திமுக கூட்​ட​ணியை பின்​னுக்​குத் தள்​ளி, தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ)…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன