ஒமைக்ரான் போட்ட குட்டிகள்: தமிழகத்தில் பரவியுள்ள 2 புதிய கொரோனா வைரஸ்

369 0

சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் முற்றிலும் இல்லை என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் புதிது புதிதாக அவதாரம் எடுத்து அது தனது வேலையை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை தமிழக பொது சுகாதாரத்துறை ஆய்வில் கண்டுபிடித்து உள்ளது. உருமாறி உருமாறி வரும் வைரசை கண்டுபிடிப்பதற்காக மரபணு பரிசோதனை நிலையம் தமிழக அரசு சார்பில் ரூ.4 கோடி செலவில் கொரோனா காலத்தில் அமைக்கப்பட்டது.

இதனால் புது புது வைரஸ்கள் அவ்வப்போது அடையாளம் காணப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒமைக்ரானில் இருந்து 2 வகை புதிய வைரஸ்கள் உருவாகி இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர். இது கொரோனா வைரசை போல் வீரியமிக்கது அல்ல. ரொம்ப சாதுவாகத்தான் இருக்கிறது. இது தாக்குபவர்கள் உடல்வலி, காய்ச்சல் என்று ஓரிரு நாட்கள் புரட்டி எடுத்து விடுகிறது. ஆபத்து எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.ஒமைக்ரான் வைரசின் துணை வைரசான பிஏ.2.75 வைரஸ்: புதிய வகை வைரஸ்களால் ஆபத்தா?  | BA.2.75 virus subvirus of omicron virus
இந்த புதுவகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றி அதிகாரி கூறியதாவது:- கொரோனா வைரஸ் தொற்று பற்றி கண்டுபிடிக்க வெறும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே போதுமானதல்ல. அது எந்த வகை வைரஸ் என்பதை கண்டுபிடிக்க மரபணு பரிசோதனை அவசியம். கொரோனா நெருக்கடி காலத்தில் உடனுக்குடன் கண்டுபிடித்து கட்டுப்படுத்துவதற்காக இந்த ஆய்வகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இந்த மாதிரி ஆய்வகம் இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். 2021-ல் ஒமைக்ரான் வகை வைரஸ் பரவியதை கண்டுபிடித்தது. நைஜீரிய நாட்டு பயணியிடம் இருந்து நமது நாட்டுக்குள் வந்தது உறுதி செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் மட்டும்தான் இந்த வகை இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில் ‘கிளஸ்டர்’ உருவானது. அதை கண்டுபிடித்ததால் வேகமாக கட்டுப்படுத்த முடிந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எக்ஸ்.பி.பி. என்ற வகை வைரசை கண்டுபிடித்தோம். இது இரண்டு வகையான ஒமைக்ரான் வைரஸ் சேர்ந்து உருவாவது. எனவே இது வீரியம் மிகுந்ததாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் வரை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. இந்த வகை வைரஸ் தாக்கியதில் 2 மற்றும் 3 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 81 சதவீதம் பேர். எனவே நாம் எடுத்துக் கொண்ட கொரோனா தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியம் குறைந்து இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது.

இன்புளூயன்சா வந்த பிறகு அது முற்றிலுமாக ஒழியவில்லை. பருவ காலங்களில் வரத்தான் செய்கிறது. எனவே வெளிநாடுகளில் அதில் இருந்து தப்பிக்க தடுப்பூசி கண்டுபிடித்து செலுத்திக் கொள்கிறார்கள். அதே போல் இனி கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகள் தயாரிக்கும் போது தற்போது எந்த வகை வைரஸ் சுற்றிக் கொண்டிருக்கிறதோ அதில் இருந்து தயாரிக்க வேண்டும். இந்த மாதிரி அடுத்தகட்ட ஆய்வுக்கு நாம் கண்டுபிடித்து இருக்கும் வைரஸ் மற்றும் அது தொடர்பான தரவுகள் கைகொடுக்கும் என்றார். தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை உலக அளவில் பிரபலமான ‘லான்செட்’ மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது.

Related Post

aqwertyujkl

TVK VCK Alliance: சல்லிசல்லியாகும் திமுக கூட்டணி.! விசிக-வை கூட்டணிக்கு அழைத்த விஜய்.? வருவாரா திருமா.?

Posted by - மே 6, 2026 0
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு ஏற்கனவே காங்., சிபிஐ கட்சிளுக்கு அழைப்பு விடுத்த விஜய், விசிக தலைவர் திருமாவளவனுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால், திமுக கூட்டணியில்…

ரூ.1000 மகளிர் உரிமை தொகை மேல்முறையீடு.. இணையதளம் முடக்கம்.. தவிக்கும் பெண்கள்!

Posted by - செப்டம்பர் 22, 2023 0
 மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இணையதளம் முடங்கியுள்ளதால் விண்ணப்பதாரர்கள்…

மருத்துவ குணம் மிகுந்த நீலகிரி பூண்டுக்கு அமோக கிராக்கி: கிலோ ரூ.140-க்கு கொள்முதல்

Posted by - ஜூலை 4, 2023 0
அரவேணு: கோத்தகிரி அருகே கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூண்டுகளை பயிரிட்டு வருகின்றனர். நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக…

ஸ்ரீபெரும்புதூர் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 2வது நாளாக ஐடி ரெய்டு

Posted by - செப்டம்பர் 28, 2023 0
சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆவடி, சிப்காட் பகுதிகளில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக…
tntet

TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு

Posted by - ஜூலை 8, 2026 0
அரசின் முடிவை வரும் ஜூலை 24ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்; அதுவரை டெட் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது- சென்னை உயர் நீதிமன்றம். டெட் எனப்படும் ஆசிரியர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன