“கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கக்கூடாது” – நிர்வாகிகளுக்கு தி.மு.க தலைமை எச்சரிக்கை!

338 0

 நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்

திமுக பொதுக்கூட்டங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைமை எச்சரித்துள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது ஒரு சிலர், முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைத்திருப்பது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.அதை தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் – மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

Related Post

Generated Image February 10 2026 10 38AM

விஜய் முதலமைச்சர் ஆவாரா?

Posted by - பிப்ரவரி 10, 2026 0
நடிகர் விஜய் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கிய பிறகு, அவரை பற்றிய பேச்சு தேசிய அளவிலும் வர தொடங்கி இருக்கிறது. அவரது கடைசி படமான…
Generated Image January 19 2026 11 05AM

திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?

Posted by - ஜனவரி 19, 2026 0
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணையவுள்ளார். 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒரே மேடையில் கை…
tvk vijay 3

TTV Dhinakaran: ”விஜயின் இமேஜை உடைக்கணும்” போலி கடிதம் கொடுத்ததா தவெக? – டிடிவி தினகரனின் புகரால் பரபரப்பு

Posted by - மே 9, 2026 0
TTV Dhinakaran TVK Vijay: தவெக தலைவர் விஜயின் இமேஜை உடைக்கும் வகையில், அவர் குதிரை பேரம் நடத்துவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். TTV…
Generated Image February 26 2026 12 55PM

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!

Posted by - பிப்ரவரி 26, 2026 0
அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி; அதிரடியாக அறிவித்த அமைச்சர் கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அண்ணா பல்கலை. தற்காலிக…
Tamil Breaking News Portrait Graphic

Anbil Mahesh Arrest: ரூ.100 கோடி லஞ்சம்: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

Posted by - அக்டோபர் 26, 2026 0
ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைதுதனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தர ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன