கனவுக்கன்னி டூ வில்லி.. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நாயகி சிம்ரன்.!

413 0
 90களில் பிறந்த குழந்தைகளுக்கு கனவு கன்னி என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வரும் நடிகை சிம்ரனின் பிறந்தநாளான இன்று அவரது திரை வாழ்க்கையை திரும்பி பார்க்கலாம்.சிலையைப் போன்ற உடலமைப்பு, குழந்தை போன்ற முகம், அசுரத்தனமான நடிப்பு என தமிழ் சினிமா அதுவரை பார்த்திராத புதுவித கலவை நடிகை சிம்ரன். பாலிவுட்டில் நடிக்க தொடங்கி, தென்னிந்திய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க, வி ஐ பி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் நடிகை சிம்ரன். முதல் திரைப்படத்திலேயே யார் இந்த நடிகை என ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைக்க, தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் சிம்ரனை ஒப்பந்தம் செய்ய படை எடுத்தனர்.நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி என 90களில் இறுதியில் சிம்ரன் நடித்த எல்லா திரைப்படங்களும் வெற்றி திரைப்படம் ஆக புதிய நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகை என தனது வெற்றி கொடியை பறக்க விட்டார் சிம்ரன். நடிகர்களுக்கு பாடல்கள் ஹிட் அடிப்பது போல சிம்ரன் தோன்றும் பாடல்கள் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் அடிக்க சிம்ரனுக்காகவே திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை தமிழ் சினிமாவில் அதிகரிக்க தொடங்கியது. நாயகியாக தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி எடுத்து இருப்பார் சிம்ரன். உடனிருந்த நலம் விரும்பிகள் வேண்டாம் என தடுத்தும் தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க சிம்ரன் எடுத்த இந்த விஷபரிட்சைக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பே கிடைத்தது. சிம்ரனின் வில்லி கதாபாத்திரம் அவரது கேரியரை பாதிக்காமல் அவருக்கான திரைப்படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியது.நாயகியாக தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி எடுத்து இருப்பார் சிம்ரன். உடனிருந்த நலம் விரும்பிகள் வேண்டாம் என தடுத்தும் தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க சிம்ரன் எடுத்த இந்த விஷபரிட்சைக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பே கிடைத்தது. சிம்ரனின் வில்லி கதாபாத்திரம் அவரது கேரியரை பாதிக்காமல் அவருக்கான திரைப்படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியது.வில்லியாக நடித்தது மட்டுமல்லாமல் மேலும் பல இலக்கணங்களையும் உடைத்து இருக்கிறார் சிம்ரன். வேறொரு நடிகை நடிக்கும் திரைப்படத்தில் ஒரு பாடலில் ஆட பெரும்பாலானோர் தயங்கிய நிலையில் அதையும் முதலில் செய்து காட்டியவர் சிம்ரன். யூத் திரைப்படத்தில் இவர் தோன்றி ஆட்டம் போட்ட ஆல்தோட்ட பூபதி இன்றும் பலரின் ப்ளே லிஸ்டில் இன்றும் ஃபேவரைட் பாடலாக இருந்து வருகிறது.ஒவ்வொரு நடிகருக்கும் தனது திரை வாழ்கையில் காலத்தால் மறக்க முடியாத திரைப்படமாக ஒரு திரைப்படம் அமையும். அதுபோல சிம்ரனுக்கு அமைந்த திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டால். மணிரத்தினம் இயக்கத்தில் மாதவனுடன் சிம்ரன் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படம் சிம்ரனுக்காகவே எழுதப்பட்ட கதை போல கச்சிதமாக அவருக்கு பொருந்தி போக விருதுகள் சிம்ரனை துரத்த தொடங்கின.கமலஹாசன், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் ஆஸ்தான நாயகியாக விளங்கிய சிம்ரனுக்கு சந்திரமுகி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு நழுவி போனதன் காரணமாக ரஜினிகாந்துடன் நடிக்க முடியாமல் போனது. பின்னர் பேட்ட திரைப்படத்தில் நடித்து இந்த கணக்கையும் நேர் செய்து கொண்டார் சிம்ரன்.திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த போதும் தனது இடத்தை மீட்டெடுக்க முடியாமல் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய சிம்ரனுக்கு வெற்றி கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் வாரணம் ஆயிரம் திரைப்படம் சிம்ரனுக்கு இரண்டாவது இன்னிங்ஸின் துவக்கமாக அமைந்தது. தொடர்ந்து பாவ கதைகள், மகான் என கலக்கிக் கொண்டிருக்கும் சிம்ரனின் பெயர் 90களில் பிறந்த குழந்தைக்கு என்றுமே கனவுகளை மீட்டுத் தரும் ஒரு பெயர்.

Related Post

மூக்குத்தி அம்மன் பார்ட் 2 – இம்முறை அம்மனாக நயன்தாரா கிடையாதாம்..?

Posted by - ஜூன் 1, 2024 0
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் செம் வைரலாக வலம் வருகிறது. தமிழ் சினிமாவில்…

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கிறாரா லேடி சூப்பர்ஸ்டார்.. இயக்குனர் யார் தெரியுமா

Posted by - மார்ச் 21, 2023 0
பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும், கடந்த ஆண்டு வெளிவந்த லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் கலக்கியவர் பிரதீப் ரங்கநாதன். சுமார் ரூ. 90…

திருமணம் ஏன் செய்து கொள்ளவில்லை..? நடிகை ஸ்ருதிஹாசன் பதில்..!

Posted by - டிசம்பர் 28, 2024 0
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தான் தற்போதுவரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். பாடகர், இசையமைப்பாளர் மற்றும்…

சைலென்ட்டாக சாதித்த லோ பட்ஜெட் படங்கள்.. இன்றளவும் கெத்து காட்டும் தினேஷ்

Posted by - அக்டோபர் 26, 2024 0
முன்பு போல இல்லாமல் தற்போதெல்லாம் ரசிகர் மனநிலை மாறிவிட்டது.  முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படத்தை மட்டுமே தியேட்டர் சென்று பார்ப்பார்கள்.  சின்ன பட்ஜெட் படங்கள், நல்ல படங்களாகவே…

வாரிசு உண்மையில் 200 கோடி வசூல் செய்ததா? இல்லை பொய் கணக்கா

Posted by - ஜனவரி 19, 2023 0
வாரிசு விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பலரும் நடித்திருந்தனர். மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும்,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன