Generated Image November 17 2025 11 29AM

‘கன்டென்ட்’ கொடுத்தும் எவிக்‌ஷன்… திவாகரின் திடீர் வெளியேற்றம் உணர்த்துவது என்ன

252 0

இந்த பிக்பாஸ் சீசனின் அதிக கன்டென்ட் கொடுத்த போட்டியாளர்களில் ஒருவரான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் வெளியேற்றம் யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது.

போன வாரம் பிரவீனின் வெளியேற்றம் ஆடியன்ஸுக்கு ஏமாற்றம் தந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அவர் மிக ஆக்டிவ் ஆன போட்டியாளராகவும், டாஸ்க்குகளில் தொடர்ந்து முனைப்புடன் ஆடக் கூடியவராகவும் இருந்தார். வெளியேறும்போது அவருடைய அழுகை காண்பவரையும் கலங்கச் செய்வதாக இருந்தது. இந்த வாரமும் யாருமே எதிர்பார்க்காத வகையில் வாட்டர்மெலன் திவாகர் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனால், இது ஆடியன்ஸுக்கு எந்தவித அதிர்ச்சியையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை.காரணம், இவருடைய ஆட்டமே தனி ரகமாக இருந்தது. ரீல்ஸ் மூலம் பிரபலமாகி இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர் உள்ளேயும் அதை மட்டுமே அதிகளவில் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு கேமராவாகப் போய் நடித்துக் காட்டுவது மட்டுமே அவருடைய பிரதான வேலையாக இருந்தது. கடைசி வாரத்தில் அந்த கேமராக்களே கடுப்பாகி முகத்தை திருப்பிக் கொண்டதையும் பார்க்க முடிந்தது.இன்னொன்று பார்வதியுடன் சேர்ந்து அவர் மற்றவர்களிடம் நடந்து கொண்ட விதம் ஏற்றுக் கொள்ளவே முடியாதது. குறிப்பாக கடைசி சில நாட்களில், ஆரோரா சாதாரணமாக அட்டையை அடுக்கியதை, ‘ஆபாசம்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டி எவ்வளவு டேமேஜ் செய்ய முடியுமோ அவ்வளவு டேமேஜ் செய்ய முயன்றார். ஆனால் வார இறுதியில் முதல் வேளையாக அந்த அபத்தமான குற்றச்சாட்டை சுக்குநூறாக உடைத்தார் விஜய் சேதுபதி.

திவாகரிடம் இருந்த இன்னொரு பெரிய சிக்கல், தன்னிடம் சாதாரணமாக ஒரு பிரச்சினை குறித்து பேச வருபவர்களை வார்த்தைகளால் காயப்படுத்துவதையும், அவர்களை பார்த்து ‘மரியாதை கெட்டுவிடும்’ என்று சொல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார். ‘என்னிடம் பேச உனக்கு தகுதி / தராதரம்’ இல்லை என்று திவாகர் சொல்லாத ஆளே இந்த சீசனில் இல்லை என்னும் அளவுக்கு ஒவ்வொரு முறையும் போட்டியாளர்கள் தாண்டி விஜய் சேதுபதியே கண்டித்த பிறகும் தொடர்ந்து அந்த வார்த்தைகளை பயன்படுத்தி வந்தார்.

மற்றொன்று 24 மணி நேர ஒளிபரப்பில் ஒருமுறை திவ்யா தன்னிடம் திவாகர் மறைமுகமாக சில கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்ததாக குறிப்பிட்டார். அதாவது ‘மதுரையில் நீங்கள் எந்த பகுதி’, ‘நீங்களும் நானும் சொந்தக்காரர்களாக இருக்க வாய்ப்புள்ளது’ போன்ற கேள்விகளை கேட்டது குறித்து திவ்யா கண்டிப்புடன் அதனை திவாகரிடமே தெரிவித்தார். நாகரிகம் கருதி அந்தக் காட்சிகள் தினசரி எபிசோடில் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

‘கானா’ வினோத்தையும் அவர் தொடர்ந்து அநாகரிகமான வார்த்தைகளால், மட்டம் தட்டும் முறையில் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாக இருந்தது. கடந்த வாரம் நடந்த ‘ராஜா ராணி’ டாஸ்க்கின் போது ‘மியூட்’ போடும் அளவுக்கு தகாத வார்த்தை ஒன்றை சொல்லி திட்டினார். இதற்கு முக்கியமான காரணம் வினோத் தான். சும்மா இருக்கும் திவாகரை தொடர்ந்து வம்பிழுத்துக் கொண்டே இருப்பதையும் அவர் விடவில்லை.

எனினும் பார்வதியுடன் சேர்ந்து தொடர்ந்து ப்ரோமோக்களில் இடம்பிடித்தவர் திவாகர் மட்டுமே. என்னதான் ஓட்டுக்கள் அடிப்படையில் எவிக்‌ஷன் என்றாலும் கூட, சேனல் நிர்வாகத்தை பொறுத்தவரை தங்களுக்கு யாரால் அதிக கன்டென்ட் கிடைக்கிறது என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள். சமூக வலைதளங்களில் வெளியாகும் அதிகாரபூர்வமற்ற ஓட்டுப் பட்டியலிலும் கூட திவாகர் கீழே இல்லை. சுபிக்‌ஷா, ரம்யாவை விட அதிக ஓட்டுகளே வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

எனினும் இதையெல்லாம் தாண்டி திவாகர் வெளியேற்றப்பட்டதற்கு காரணம், அவருடைய நடவடிக்கை, அவர் விடும் வார்த்தைகளுமாகத்தான் இருந்திருக்க வேண்டும். திவாகரின் இந்த வெளியேற்றம், வார இறுதியில் கிடைக்கும் கைதட்டல்கள் நமக்கு எந்த பலனும் தராது, அதிக ஓட்டு வாங்கினாலும் நாகரிகமாக நடந்து கொண்டால்தான் போட்டியில் நீடிக்க முடியும் என்ற எச்சரிக்கை உணர்வை மற்ற போட்டியாளர்களுக்கு கொடுத்திருக்க வாய்ப்புள்ளது.

முதல் வாரத்தில் இருந்தே திவாகரை வைத்து கன்டென்ட் தேற்றிக் கொண்டிருந்த பார்வதி, கானா வினோத் போன்ற போட்டியாளர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் பிக்பாஸ் பார்வையாளர்களின் முக்கிய கேள்வியாக இருக்கிறது.

Related Post

வெற்றிலையின் 10 அற்புத நன்மைகள் தெரியமா?

Posted by - ஜூலை 5, 2024 0
கடுமையான காரம் போன்ற சுவையை கொண்டிருக்கும் வெற்றிலையை பாக்கு, சுண்ணாம்பு சரியான விகிதத்தில் சேர்த்து போடும் போது நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய…

இந்த பிரச்சனை இருப்பவர்கள் காளான் சாப்பிடுவதை தவிர்பது நல்லது : எப்போது ஆபத்தாக மாறும்..?

Posted by - டிசம்பர் 28, 2022 0
காளான் என்பது பூஞ்சை வகையைச் சார்ந்த உணவுப் பொருளாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிர்ம்பியுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். சைவ உணவு உண்பவர்களின் முதன்மையான உணவுத்…

இந்த ஜூஸை குடித்தால் 1 மாதத்தில் தொப்பை குறையும்…

Posted by - மார்ச் 18, 2023 0
தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் எளிதில் கழிவுகள் வெளியேறும், கொழுப்பும் கரையும். வெள்ளரிக்காய் ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் – 1 எலுமிச்சை…
ChatGPT Image Jan 2 2026 07 51 32 PM

Bigg Boss 9 வீட்டில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது!

Posted by - ஜனவரி 3, 2026 0
‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்கின் போது கம்ருதீன் மற்றும் பாரு இடையே ஏற்பட்ட மோதல் பார்வையாளர்களிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. மேலும் சாண்ட்ராவை காரிலிருந்து தள்ளிய சம்பவம்…

Bigg Boss 7 Analysis: புயலால் எலிமினேஷன் இல்லை… நிக்சனை காப்பாற்றும் முயற்சியா?

Posted by - டிசம்பர் 7, 2023 0
மிக்ஜாம் புயல் சென்னையை கபளீகரம் செய்துவிட்டதால் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருக்க முடியாது என்பதை காரணமாக வைத்து இந்த வார எலிமினேஷனை ரத்து செய்துள்ளது பிக்பாஸ் குழு. நாமினேட்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன