காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!

275 0

காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!

பரபரப்பான அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார்.

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை இன்று நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது தன்னை ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்து அவர் கடிதம் ஒன்றையும் அளித்துள்ளார் .

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் கூறியதாவது :

15 ஆண்டுகளுக்கு முன்பாக நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கட்சியிலிருந்து விலகிவிட்டேன். மீண்டும் கட்சியில் இணைவதற்காக கடிதம் கொடுத்திருந்தேன்.

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட பிரதமர் மோடி நாட்டுக்காக எதையும் செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் எதையாவது பேசி ஒரு குழப்பத்தை உண்டாக்குகிறார் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்

Related Post

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Posted by - பிப்ரவரி 14, 2024 0
FEATURED அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை…

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் 44 பேர் கைது

Posted by - நவம்பர் 9, 2023 0
புதுடெல்லி: வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை, ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்துள்ளனர். அவர்களுக்கு இந்தியாவை சேர்ந்தவர்களை…

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து – திமுக அறிவிப்பு

Posted by - ஜூன் 3, 2023 0
கலைஞரின் 100-ஆவது பிறந்தநாள் தொடர்பாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் – பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை…
ripbagyaraj 1

தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!

Posted by - ஜூன் 27, 2026 0
தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு பாக்ய்ராஜ் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச் செய்துள்ளது திரைக்கதை மன்னர்…

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து தீவிர விசாரணை – திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்!

Posted by - அக்டோபர் 12, 2024 0
ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தண்டவாளத்தில் சரக்கு ரயில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன