காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன் தாக்கப்பட்ட விவசாயி!

208 0

கோவையில் நடைபெற்ற ஆனைமலை – நல்லாறு திட்ட கோரிக்கை மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூரை அடுத்த செஞ்சேரிபுத்தூர் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆனைமலை – நல்லாறு திட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மாநாட்டின் தீர்மானங்களை வாசித்தபோது குறுக்கிட்ட விவசாயி ஒருவர், மதுபோதையில் தீர்மான நகலைக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு தீர்மான நகல் வழங்க மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர்,
“ஆனைமலை – நல்லாறு திட்டத்திற்காக உண்மையாகவே போராடினீர்களா? சத்தியம் செய்யுங்கள்” எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவரைப் பிடித்து அப்புறப்படுத்திய நிலையில், அங்கு வந்த மற்றொரு நபர் மதுபோதையில் இருந்த விவசாயியை கடுமையாக தாக்கினார். பின்னர் அவர்களை அங்கிருந்த போலீசார் அப்புறப்படுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்கப்பட்டவர் விவசாயியான சுரேஷ் என்பதும், அவரை தாக்கிய நபர் சுரேஷின் சகோதரர் என்பதும் தெரியவந்தது.

Related Post

“நான் இப்படி செய்வனோ..?” – ஜி.கே.மணி உருக்கம்

Posted by - மே 17, 2025 0
45 ஆண்டுகாலமாக இருக்கிறேன். ஒரு சின்ன உயிருக்கு கூட தீங்கு விளைவிக்க நினைக்க மாட்டேன். ஜி.கே.மணி இப்படி செய்வாரா என நீங்களும் உங்கள் மனசாட்சி தொட்டு கேட்டுக்…

’34 நாட்கள், 10 ஆயிரம் கி.மீ, 100 தொகுதிகள்’ மாஸ் காட்டும் எடப்பாடி பழனிசாமி..!

Posted by - ஆகஸ்ட் 19, 2025 0
‘காசு கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள என்று பல்வேறு விமர்சனங்கள் எடப்பாடி பழனிசாமி பயணம் குறித்து எழுந்தாலும் அவரின் இந்த சுற்றுப்பயணம் அதிமுகவிற்கு புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது’‘மக்களை காப்போம்,…

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் வாக்குரிமை: திருமாவளவன் எச்சரிக்கை! ஸ்டாலின் நடவடிக்கை தேவை!

Posted by - ஆகஸ்ட் 2, 2025 0
எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும் – திருமாவளவன் விழுப்புரம்: வடமாநிலத்தவர்களை தமிழ்நாட்டில் வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின அரசியல் தலைவர்களாக…
aidmk

டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.?

Posted by - ஜூன் 26, 2026 0
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளின் மாவட்ட செயலாளர்கள் பதவி பறிக்கப்பட்டு தற்போது டம்மியான பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த எஸ்.பி.வேலுமணி டீம் இன்று காலை…

“அண்ணாமலையை சும்மா விடுவோமா…? – உதயநிதி ஸ்டாலின்

Posted by - ஏப்ரல் 18, 2023 0
அண்ணாமலை மீது தானும் மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. DMK Files என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து பட்டியலை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன