கோவை பீளமேட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்றது யார்?- 3 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை

410 0

கோவை:

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜிநகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவருக்கு ஜெகதீஷ்வரி (40) என்ற மனைவியும், கார்த்திகா(16) என்ற மகளும் உள்ளனர். கார்த்திகா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி சக்கரவர்த்தி வேலை விஷயமாக அன்னூருக்கு சென்று விட்டார். அங்கு வேலைகள் இருந்ததால் சில நாட்கள் அங்கேயே தங்கி விட்டார். இதனால் வீட்டில் ஜெகதீஷ்வரியும், அவரது மகளும் மட்டுமே தனியாக இருந்து வந்தனர். அவ்வப்போது சக்கரவர்த்தி போன் செய்து, மனைவி மற்றும் மகளிடம் பேசி வந்தார்.Murder under Indian Penal Code: All you need to know about it

ஜெகதீஷ்வரி தினமும் தனது மகளை பள்ளியில் கொண்டு விடுவதும், பள்ளி முடிந்த பின்னர் திரும்ப சென்று அழைத்து வருவதும் வழக்கம். அதன்படி நேற்றும் மகளை காலையில் பள்ளியில் கொண்டு விட்டு வந்தார். பின்னர் வீட்டில் அவர் மட்டும் இருந்தார். காலை 11.30 மணிக்கு ஜெகதீஷ்வரிக்கு, அவரது கணவர் சக்கரவர்த்தி போன் செய்து பேசினார். பின்னர் மதியமும் சக்கரவர்த்தி போன் செய்தார். ஆனால் ஜெகதீஷ்வரி எடுக்கவில்லை. அவர் வேலையாக இருக்கலாம் என நினைத்து சக்கரவர்த்தி தனது வேலையில் மூழ்கி விட்டார். இந்த நிலையில் தினமும் தன்னை அழைத்து செல்ல பள்ளிக்கு வரும் தாய், நேற்று நீண்ட நேரமாகியும் வராததால் ஜெகதீஷ்வரியின் மகள் கார்த்திகா நடந்தே வீட்டிற்கு வந்து விட்டார்.

அப்போது வீடு திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சியான கார்த்திகா வீட்டிற்குள் சென்று அம்மாவை தேடினார். எங்கும் அவர் இல்லை. கடைசியாக அவரது அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு அறையில் உள்ள கட்டிலில் ஜெகதீஷ்வரி பிணமாக கிடந்தார். இதை பார்த்ததும் கார்த்திகா கதறி அழுதபடி வெளியில் ஓடி வந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் சென்று பார்த்தனர். இதற்கிடையே இந்த தகவல் அறிந்து சக்கவரத்தியும் அன்னூரில் இருந்து வீட்டிற்கு விரைந்து வந்து மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஜெகதீஷ்வரியின் உடலை பார்வையிட்டனர்.

அப்போது அவரது கழுத்தில் இறுக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தது. வீட்டில் இருந்த செயின் உள்பட 5 ¾ பவுன் நகைகளும் மாயமாகி இருந்தது. இதனால் இவர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து, ஜெகதீஷ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்த கைரேகைகள் பதிவு செய்தனர். மேலும் சக்கரவர்த்தியின் வீட்டிற்கு வந்தது யார்? என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது தெரியவில்லை. மர்மநபர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சண்முகம் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசாருக்கு இந்த கொலையானது நகைக்காக தான் நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்ற சந்தேகமும் இருக்கிறது. எனவே போலீசார் அந்த கோணத்திலும் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். மேலும் இறந்த ஜெகதீஷ்வரியின் செல்போனையும் பறிமுதல் செய்து, அவர் யார், யாருடன் பேசியுள்ளார். கடைசியாக யாரிடம் பேசியுள்ளார் என்பதை பார்த்து, அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த தகவல்களையும் சேகரிக்கும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு, நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

சிபிஎஸ்இ பள்ளிகள் கையெழுத்து கேட்கும்; பெற்றோர் போடாதீங்க! எச்சரிக்கும் அன்பில் மகேஸ்

Posted by - மே 2, 2025 0
சிபிஎஸ்இ பள்ளிகளின் ஃபெயில் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிபிஎஸ்இ 5ஆம்…

மழை மேகங்கள் நகரும் ரூட் இதுதான்… இந்த மாவட்டங்களில் கனமழை… வெதர்மேன் எச்சரிக்கை

Posted by - ஜனவரி 8, 2024 0
டெல்டாவில் இருந்து மழை மேகங்கள், விழுப்புரம் நோக்கி நகர்ந்து வருவதால்,  அடுத்த சில மணி நேரத்துக்கு தென் சென்னையின் புறநகர் பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்டவற்றில்…

துணிவு இருந்தால்… – அஜித் படத்துக்கு ஆதரவாக மாறிய கருணாநிதி ட்வீட்- கொண்டாடும் ரசிகர்கள்

Posted by - ஜனவரி 9, 2023 0
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட் ஒன்றை அஜித் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர் துணிவு படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன்கள்…

ஏசி வாங்க பட்ஜெட் இல்லையா? கோடையை சமாளிக்க குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஏசிக்களின் பட்டியல் இதோ.

Posted by - மே 2, 2024 0
MarQ FKAC103SFAA  : இந்த ஏசியின் விலை வெறும் 18,888 மட்டுமே. இந்த 3 ஸ்டார் ரேட்டட் ஏசிக்கு 230 வி 50 ஹெர்ட்ஸ் மின்சாரம் தேவைப்படும். இந்த…

மாநகர பஸ்களில் அடுத்தடுத்த நிறுத்தங்களின் பெயரை அறிவிக்கும் வசதி- உதயநிதி தொடங்கி வைத்து பயணம்….

Posted by - நவம்பர் 26, 2022 0
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, போக்குவரத்துத்துறை செயலாளர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன