”சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்கவேண்டும்..” – தவெக தலைவர் விஜய்

235 0

இன்று நடைபெற்ற நடப்பாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம் பேசுபொருளான நிலையில், சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

2025-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்க பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்க, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அனைத்து மரியாதைக்கும் பின் பேரவைக்குள் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி சிறிது நேரத்திலேயே அவையிலிருந்து வேகவேகமாக வெளியேறினார்.இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து சில நிமிடங்களில் விளக்கமொன்று அளிக்கப்பட்டது. அதில், ”இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் அவர்கள் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடமும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் தேசிய கீதத்திற்கு மரியாதை கிடைக்காத இடத்தில் உறுப்பினராக இருக்க கூடாது என்பதற்காகவே ஆளுநர் வெளியேறினார்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.ஆனால் அதற்கு பதலளித்த பேரவை முன்னவர் துரைமுருகன், ”தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது குறித்து ஏற்கனவே ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டிருப்பதாகவும், சட்டப்பேரவை மரபின் படி நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடப்படுவது பின்பற்றப்படுகிறது” என்று விளக்கமளித்தார்.

சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்க வேண்டும்..

சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறிய சம்பவம் குறித்து பேசியிருக்கும் தவெக தலைவர் விஜய், சட்டப்பேரவை கூட்டத்தில் மக்களின் பிரச்னைகளே விவாதிக்கப்பட வேண்டும் என்றும், ஆளுநர் தமிழக சட்டப்பேரவையின் மரபை காக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விஜய், “தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.

Related Post

Tasmac Digital Stock Order

Tasmac Digital Stock Order : டோட்டலா மாறும் டாஸ்மாக்.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் மதுப்பிரியர்களுக்கு குஷி தான்- செம பிளான்

Posted by - ஆகஸ்ட் 30, 2026 0
Tasmac New Digital Stock Order System : டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கேட்கும் மதுபானங்கள் கிடைக்காத நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மதுப்பிரியர்கள் விரும்புப்…

அலப்பறை கிளப்புறோம்.. புஷ்பா 2 படத்தில் என்ட்ரி கொடுத்த தளபதி விஜய்

Posted by - டிசம்பர் 6, 2024 0
புஷ்பா 2 படம் இன்று ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தில் முழுக்க முழ அல்லு அர்ஜுன் ஷோவாக உள்ளது. ஆனால் பட ரிலீசுக்கு முன்பு…
Generated Image November 22 2025 6 06PM

ஊர் எல்லையில் கிடந்த சடலம்!! “காதல் தோல்வியால் உயிரைவிட்ட இளம்பெண்..” காத்திருந்து பழிவாங்கிய தாய் மாமன்..!

Posted by - நவம்பர் 22, 2025 0
மீஞ்சூர் அருகே நிபந்தனை ஜாமீனில் வந்த இளைஞரை  சரமாரியாக வெட்டி கொன்ற வழக்கில் 4-பேர் கைது. மேலும் ஒருவருக்கு வலைவீச்சு. அக்கா மகளை காதலித்து திருமணம் செய்யாததால்…

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

Posted by - பிப்ரவரி 10, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்  தொடங்கியது. தமிழக சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த  ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்​கியது.…

இரணியல் அருகே 3 ஆண்டுகளாக 3 மகன்களை வீட்டில் அடைத்து வைத்த பெற்றோர்

Posted by - மார்ச் 31, 2023 0
திங்கள்சந்தை : இரணியல் அருகே உள்ள ஆத்திவிளை ஊராட்சி வார்டு உறுப்பினர் பெல்சி நேற்று காலையில் ஊராட்சி அலுவலக ஊழியருடன் கானாங்குளத்தங்கரை பகுதியில் வரி வசூல் செய்ய…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன