குளிர்கால நோய்களிலிருந்து உடலை தற்காத்துக்கொள்ள நாம் செய்யக்கூடாதவை என்னென்ன? பார்க்கலாம்..குளிர்காலம் வந்தாலே கூடவே தொற்று நோய்களும் வந்துவிடுகின்றன. அதுவும் விட்டு விட்டு மழை பெய்யும் அக்டோபர், நவம்பர் என்றால், சொல்லவே வேண்டாம். இதுபோன்ற நேரத்தில் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.குடிப்பதற்கு மட்டுமன்றி, குளிப்பதற்கும் வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துங்கள். அதிக சூடு இருந்தால், அது சருமத்தில் வெடிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துங்கள்.காரமான அல்லது அதிகம் மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். குளிர்பானங்கள், பழச்சாறுகள், நீர்ச்சத்துள்ள காய்கறிகளைத் தவிர்க்கலாம். பழச்சாறு நன்மை என்பதற்காக குடிப்பவர்கள், நேரடியாக பழமாகவே சாப்பிட்டு வரலாம்.கடைகளில் சமைக்கப்படும் உணவுகள், எந்த அளவிற்கு சுகாதாரமான முறையில் சமைக்கப்பட்டிருக்கும் என்பது தெரியாது என்பதால், முடிந்தவரை அவற்றை தவிர்க்கவும். குறிப்பாக துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.தண்ணீர் உட்பட ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் ஃப்ரிட்ஜில் அதன் வெப்ப அளவு மிகக்குறைவாக இருக்கும். அது உடலுக்குள் அப்படியே செல்கையில், உடலின் வெப்ப அளவை பாதிக்கக்கூடும்.ஏற்கெனவே ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற மூச்சுக்குழாய் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், அதிகாலையிலோ இரவு பனிக்காத்திலோ நேரத்துக்குப் பிறகோ நடைப்பயிற்சி செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம்.மூச்சுப்பயிற்சி, நடைப்பயிற்சி உட்பட ஏதேனுமொரு உடற்பயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்வது நல்லது.பனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும் என்பதால், அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டியிருக்கும். அதுபோன்ற நேரத்தில், சிறுநீர் கழித்த பின்னர் கை, கால்களை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். போலவே சிறுநீர் வரும்போது அடக்கி வைக்காதீர்கள். அது சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரகக் கல் என பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்
- Home
- Trending Tamil
- சீசனல் நோய்களில் இருந்து தப்பிக்கணுமா? நீங்கள் செய்யவே கூடாத 7 விஷயங்கள் இவைதான்!
Related Post
முத்துவை காலி செய்ய நடக்கும் சதி.. பிக்பாஸ் டைட்டிலை வைத்து மாஸ்டர் பிளான் போடும் விஜய் டிவி
பிக்பாஸ் நிகழ்ச்சி இதோ அதோ என இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த சீசன் டைட்டிலை யார் பெற வேண்டும் என்பதையும் மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் விஜய்…
சப்பாத்திக்கு அருமையான காஷ்மீரி மட்டன் குருமா
முஸ்லீம்கள் நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள். சூடான சாதத்துடன் சாப்பிடவும் இந்த ரெசிபி சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள்: மட்டன் – அரை கிலோ வரமிளகாய்…
டாப் ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. பரிதாபமான நிலையில் கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் அதிக அளவில் ஆசைப்படுவது முன்னணி ஹீரோயினாக வலம் வர வேண்டும் என்பதுதான். அதற்காகவே அவர்கள் முயற்சி செய்து டாப் ஹீரோக்களுடன்…
நடிகர் விஷால் உடல் இப்படி ஆக குடிபோதை தான் காரணமா.. அவரே சொன்ன பதில்
நடிகர் விஷால் மதகஜராஜா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தபோது மேடையில் நடுக்கத்துடன் இருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அவருக்கு வைரல் fever இருந்தது தான் அந்த நடுக்கத்துக்கு காரணம்…
Pimples Treatment – வீட்டிலேயே சரியாகும் Simple Remedies…
✔ Effective Remedies: • Neem Paste:பாக்டீரியா infection-ஐ நிறுத்தி pimples reduce ஆகும். • Aloe Vera Gel:Redness, swelling, marks குறையும். • Turmeric…
Categories
- Sports (86)
- TN Political Zone (361)
- Trending Tamil (716)
- Uncategorized (1)
- Viral Social (18)
- அரசியல் (279)
- இந்தியா (483)
- உலகம் (176)
- சினிமா (863)
- தமிழ்நாடு (1,204)
Recent Posts
- CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை – நிர்மல்குமார்

- Anbil Mahesh Arrest: ரூ.100 கோடி லஞ்சம்: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

- DMK:அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! – எதற்காக தெரியுமா?

- தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? – பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

- TN Weather News: விடாது கொட்டும் மழை – 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் – சென்னை? தமிழக வானிலை அறிக்கை
