சென்னையில் 4 லட்சம் பேருக்கு உணவு வினியோகம் தொடருகிறது: மாநகராட்சி ஆணையர் தகவல்

454 0

சென்னை:

சென்னையில் பெய்த கனமழை பாதிப்பில் 4-வது நாளாக இன்னும் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுகள் வினியோகிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

சென்னையில் சில தாழ்வான பகுதிகளில் மண்டலம் வாரியாக 369 பாயிண்ட்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதை அகற்றி வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு 25 பாயிண்ட் அளவில் மழைநீர் வடிகிறது. எங்களுக்கு சவாலாக உள்ள பகுதியாக பள்ளிக்கரணை, பெருங்குடி, பெரும்பாக்கம் பகுதிகள் உள்ளன. CHENNAI: Street to street road side food There is a risk of hotels  closing...! | சென்னை: தெருவுக்கு தெரு முளைக்கும் கையேந்திபவன்கள்...!  ஓட்டல்கள் மூடப்படும் அபாயம்...!

சென்னைக்குள் ராயபுரம், பட்டாளம், புளியந்தோப்பு, மணலி, சடையங்குப்பம், கொரட்டூர், பெரம்பூர், ஜமாலியா பகுதிகள் உள்ளன.

சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்ற சென்னை மாநகராட்சி எல்லையில் 955 மோட்டார்கள் இயங்கி கொண்டிருக்கிறது. வெளி மாவட்டங்கள் மற்றும் புதிதாக வாங்கப்பட்ட 90 மோட்டார்களும் நீரை அப்புறப்படுத்தி வருகின்றன. இதில் அதிக உந்துதிறன் கொண்ட 52 மோட்டார்கள், 100 எச்.பி.மோட்டார்கள், 50 எச்.பி. மோட்டார்களும் இயங்கி கொண்டிருக்கிறது.

தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் ஒரு வேளைக்கு 4 லட்சம் பேர்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள், நிவாரண முகாம்களில் தினமும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. நிவாரண முகாம்கள் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உணவு வினியோகம் செய்து வருகிறோம்.

15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 85 சதவீத இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. மற்ற பகுதிகளில் தண்ணீரை வடிய வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

தமிழ்நாட்டில் மீண்டும் உயரும் மின் கட்டணம்…? ஷாக்கில் பொதுமக்கள்..!

Posted by - ஜூன் 6, 2023 0
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு 9 மாதங்களே ஆகும் நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த…

உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி – ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”

Posted by - மே 26, 2025 0
டெல்லிக்கு போனதாக புலம்பியது போதும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் கதறுவதை தமிழ்நாடே ரசிப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…
tn

CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?

Posted by - ஆகஸ்ட் 8, 2026 0
DMK and AIADMK boycotted : முதலமைச்சர் விஜய் தலைமையிலான திமுக எம்பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளது. அந்த வகையில் மொத்தமுள்ள…

10 அமைச்சர்களின் துறை மாற்றம்.. எந்த அமைச்சர் என்ன துறை?

Posted by - டிசம்பர் 14, 2022 0
Tamilnadu Ministers department | 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு…

“மயிலாடுதுறையில் நான் போட்டியிடவில்லை” – பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் கூறியது என்ன? – MaKa Stalin

Posted by - மார்ச் 25, 2024 0
 PMK Candidate: சிலர் 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என கனவு காணுகிறார்கள் என மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குற்றம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன