சொதப்பிக்கொண்டு வரும் பிக் பாஸ்.. தேசிய கொடியை மறைத்ததற்கான காரணம் இதுதான்?

232 0

#bbtamil8 #biggbosstamil #biggbosstamil8 #sivakarthikeyan #vijaysethupathi #bb8 #vijaytv #tamilnews #indianflag

 

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று வாரங்களிலேயே ஏகப்பட்ட குளறுபடிகளை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கடந்த ஏழு சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல் தற்போது இல்லாததால் விஜய் டிவி இந்த பொறுப்பை விஜய் சேதுபதியிடம் ஒப்படைத்தது. ஆனால் விஜய் சேதுபதி என்னதான் எதார்த்தத்தை சுட்டிக்காட்டினாலும் அனுபவ ரீதியாகவும், போட்டியாளர்களின் தன்மையை சோதிக்கும் அளவிற்கு கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்வது போல் தெரிகிறது.இந்த சூழ்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் அமரன் படத்தின் பிரமோஷனுக்காக சிவகார்த்திகேயன் போயிருக்கிறார். பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஏதாவது ஒரு படத்தின் ப்ரோமோஷன்கள் பண்ண வேண்டும் என்றால் செலிப்ரட்டிகள் உள்ளே போவது வழக்கம்தான். அந்த மாதிரி இந்த முறை அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் போயிருக்கிறார்.

போனதும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை சந்தித்து பேசி அமரன் படத்தையும் அதனுடைய முக்கியத்துவம் என்ன என்பதையும் விளக்கும் விதமாக மறைந்த முன்னாள் வீரர் முகுந்த் வரதராஜன் பற்றி சில விஷயங்களை சொல்லி இப்படத்தின் ட்ரெய்லர் போட்டு காட்டப்பட்டிருக்கிறது. இப்படி பேசி முடித்த நிலையில் கடைசியாக அங்கு இருக்கும் போட்டியாளர்களுக்கு தேசியக்கொடி பொருத்தப்பட்டு பேட்ஜ் கொடுக்கப்பட்டு அதை அனைவரும் அணிந்து கொண்டார்கள்.

அதே மாதிரி சிவகார்த்திகேயனும் அந்த பேட்ஜ் அணிந்து மரியாதை செலுத்தினார். ஆனால் அப்படி காட்டும் போது அந்த தேசியக்கொடி பிளர் செய்யப்பட்டிருக்கிறது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் குழம்பிப்போய் ஏன் தேசியக் கொடியை மறைக்க வேண்டும், ஏன் பிளர் பண்ணியிருக்கிறார்கள் என்று பல கேள்விகள் எழும்பி வந்தது. இதற்கு விளக்கம் சொல்லும் விதமாக விஜய் சேதுபதி இன்று பதில் சொல்வாரா என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இந்த வீட்டில் ஏன் தேசியக் கொடி மறைக்கப்பட்டதற்கான காரணங்கள் என்னவென்று வெளியாயிருக்கிறது. அதாவது தேசிய கொடியை, குடியரசு மற்றும் சுதந்திர நாட்கள் தவிர்த்து பிற நாட்களில் வணிகம் மற்றும் இதர நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. அத்துடன் தேசிய கொடியின் வடிவத்தை மாற்றவும் கிடையாது.

அதனால் நேற்று வட்ட வடிவமாக இருந்த கொடியை பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எந்தவித முன் யோசனை எதுவும் இல்லாமல் பிக் பாஸ் டீம் ஆர்வக்கோளாறில் அவசரமாக கொடியை கொடுத்து அனுப்பி விட்டார்கள். பின்பு அதை மறைப்பதற்காக பிளர் பண்ணியிருக்கிறார்கள்.

ஒருவேளை அப்படி பிளர் பண்ணாமல் விட்டிருந்தால் இதுவே மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்திருக்கும். அத்துடன் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இருவருமே இந்த பிரச்சினையில் சிக்கி இருப்பார்கள். நல்லவேளை இரண்டு பேருமே எஸ்கேப் ஆகி தேவையில்லாத கொடி அவமதிப்பு பிரச்சனையிலிருந்து தப்பித்து விட்டார்கள்.அதுமட்டுமில்லாமல் கமல் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்திருந்தால் இந்த மாதிரி தவறுகள் நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. ஏனென்றால் அவருக்கு தெரியாத விஷயங்களை கிடையாது. அதனால் கமல் இல்லாமல் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சொதப்பிக் கொண்டு வருகிறது. இன்று விஜய் சேதுபதி இதற்கு என்ன விளக்கம் கொடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Post

நரம்பு நோய்களுக்கு எதிரி…..

Posted by - பிப்ரவரி 15, 2024 0
மாதுளம் பழத்தில் உள்ள எக்கச்சக்கமான ஆரோக்கிய நலன்கள் மற்றும் சிறந்த ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக அது சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆரோக்கியமான உணவுகள் பற்றி எக்கச்சக்கமான…

ஆர்வம் காட்டும் விஜய்.. முதல் ஆளாக கை கொடுத்த கீர்த்தி சுரேஷ்

Posted by - ஏப்ரல் 3, 2023 0
கோலிவுட்டின் மாஸ் நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் ஒவ்வொரு படங்களையும் அவருடைய ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது விஜய் வாரிசு தொடர்ந்து…

விடுதலை படத்தில் நடித்த ஜி.வி. பிரகாஷ் தங்கையா இது! கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க

Posted by - மே 18, 2023 0
பவானி ஸ்ரீ வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை பவானி ஸ்ரீ. இவர் பிரபல…

பிக் பாஸ் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. அப்போ சீரியல்? ரசிகர்கள் ஷாக்

Posted by - செப்டம்பர் 21, 2023 0
விஜய் டிவியில் வரும் அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக பிக் பாஸ் 7ம் சீசன் தொடங்க இருக்கிறது. வழக்கம்போல கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். முன்பு…
w

தமிழகத்தில் சைபர் மோசடிக்கு உதவிய 837 பேர் கைது: 48 மணி நேரம் சிறப்பு அதிரடி நடவடிக்கை

Posted by - ஆகஸ்ட் 10, 2026 0
சென்னை: தமிழகம் முழுவதும் மேற்கொண்ட 48 மணி நேர சிறப்பு அதிரடி நடவடிக்கையில், சைபர் மோசடியில் தொடர்புடைய 837 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 204…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன