“தனித்தே ஆட்சி“, அண்ணாமலைக்கு பதிலடி; தவெக கூட்டணி குறித்து சூசக பதில் – என்ன சொன்னார் இபிஎஸ்.?

223 0

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், ஆட்சி அதிகாரம் குறித்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தவெக கூட்டணி குறித்து சூசக பதிலை கூறியுள்ளார். அவர் என்ன சொன்னார் தெரியுமா.?

சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. கூட்டணிகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், தற்போது பேசுபொருளாக உள்ளது அதிமுக கூட்டயி குறித்த தகவல்கள் தான். இந்நிலையில், கூட்டணி ஆட்சி குறித்து நேற்று அண்ணாமலை கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தவெக கூட்டணி குறித்த கேள்விக்கும் சூசக பதிலை அளித்துள்ளார். அவர் பேசிய விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

“அதிமுக தனித்தே ஆட்சி – அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி“

சென்னையில் நேற்று பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால், கூட்டணி ஆட்சிதான் அமைக்கப்படும் என்ற உறுதிபடக் கூறினார். அதிமுக – பாஜக கூட்டணியை அமைத்தது அமித் ஷா தான் என்றும், அவர் சொல்வது போலத்தான் ஆட்சியும் நடக்கும் என்று கூறிய அண்ணாமலை, கூட்டணி ஆட்சிதான் என்பதை பல முறை அமித் ஷா தெரிவித்துவிட்டதாகவும் விளக்கமளித்தார்.

மேலும், அமித் ஷா சொன்னதை தான் மாற்றிக் கூற இயலாது என்றும், அவ்வாறு செய்தால், தான் பாஜக தொண்டனாக, தலைவனாக இருப்பதில் எந்த அர்த்தமுமில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார். அதனால், தலைவர் கூறியதற்கு வலு சேர்ப்பதே தன்னுடை பணி என்றும், அதனால், கூட்டணி ஆட்சி என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த சூழலில், அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால், அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என்றும், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தான் சொல்வதே இறுதியான முடிவு என்றும் ஏற்னவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காகவே பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறியுள்ளார். அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்றும், அதே சமயம், அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறி, தன்னுடைய தனித்தே ஆட்சி என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்.

தவெக உடன் கூட்டணியா? – இபிஎஸ் பதில் என்ன.?

தொடர்ந்து, தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்வி எடப்பாடி பழனிசாமியிடம் எழுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிரமாண்ட கட்சி ஒன்று அதிமுக உடன் இணைய உள்ளதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், இந்த கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்துள்ள அவர், தேர்தல் உத்தி மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது என்று சூசகமாக பதிலளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, விஜய் இறங்கி வந்தால், பாஜக உடன் கூட்டணியை முறித்துவிட்டு, தவெக உடன் இணைவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆக, இந்த கேள்விகளுக்கு அவர் நேரடியாக மறுப்பு தெரிவித்து பதிலளிக்காததால், பல சந்தேகங்களும், எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.

மேலும், நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளை கூட்டணியில் சேர்த்துக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளையும் வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Related Post

election 2026

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23ல் ஒரே கட்டமாக தேர்தல்: மே.4ல் வாக்கு எண்ணிக்கை

Posted by - மார்ச் 15, 2026 0
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை…

லிஸ்டை ரெடி பண்ணுங்க.. விஜய் போட்ட ஆர்டர்.. திமுகவிற்கு எதிராக இதுதான் வியூகம்

Posted by - ஜூலை 8, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்திற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சினைகளை பட்டியல் எடுக்க கூறியுள்ளார். தமிழக அரசியல் களம்…
Gemini Generated Image 1mc9ek1mc9ek1mc9

கர்மா சும்மா விடுமா? – உலகத்தில் முதல் முறை.. திருமாவை சாடிய மோகன் ஜி!

Posted by - ஏப்ரல் 7, 2026 0
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் ஏனாம் தொகுதிகளில் தான் அறிவித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என…

ஓபிஎஸ்-ஐ எப்படியாவது சமாதானப்படுத்துங்க.. அதிமுக – பாஜக கூட்டணி துடிப்பது ஏன்?

Posted by - ஆகஸ்ட் 4, 2025 0
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்குள் அழைத்து வர அதிமுக – பாஜக தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக அரசியல் நாளுக்கு…

புதுசேரியில் திமுக ஆட்சி : ’ஸ்டாலின் பேசியதில் தவறில்லை…’ – நாராயணசாமி கொடுத்த விளக்கம்!

Posted by - டிசம்பர் 13, 2022 0
Puducherry News : புதுச்சேரியில் திமுக ஆட்சி என கட்சியினரை உற்சாகப்படுத்த தமிழகக. முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி முன்னாள்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன