தளபதி 68 பாடல் ரெடி.. கான்ஜூரிங் கண்ணப்பனில் வெளியான அப்டேட்

346 0

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.என்ன நண்பா ரெடியா...' - தளபதி 68 படத்திலும் பாடும் விஜய்? | nakkheeran
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் புரொமோ வீடியோவில், “மியூசிக் டாக்டர் யுவன் சங்கர் ராஜாவிடம் காதல் தோல்வி அடைந்த ஒருவர் பாட்டு கேட்க வருகிறார். தொடர்ந்து அம்மா மீது பாசம் இல்லை என ஒருவர் வைத்தியம் பார்க்க வருகிறார். அவர்களுக்கு சில பாடல்களை பரிந்துரை செய்த மியூசிக் டாக்டர் யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக சதீஷ் வரும் போது அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.

தனக்கு தூக்கம் வராமல் இருக்க ஒரு பாடல் வேண்டும் என்றும் தூக்கம் வந்தால் கனவில் நடப்பதெல்லாம் நிஜத்திலும் நடக்கிறது என்று கூறுகிறார். இதனை அடுத்து அவருக்கும் ஒரு பாட்டு கொடுக்கிறார். இதனை அடுத்து அவர் எழுந்து செல்லும் போது அனிருத் பாடல் ஒலிக்கிறது. அர்ச்சனா கல்பாத்தி மேடம் தான் கால் செய்தார்கள், ‘தளபதி 68’ படத்தின் பாடலையும் கேட்டு வரச் சொன்னார்கள் என்று கேட்க, அதற்கு யுவன் சங்கர் ராஜா வெளியில வெங்கட் பிரபு வெயிட் பண்ணுகிறார், அவரிடம் நான் சொல்லி கொள்கிறேன்” என்று கூறுவதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. இதன் மூலம் ‘தளபதி 68’ முதல் பாடல் ரெடியாகிவிட்டதாகவும் இந்த பாடலை அனிருத் பாடவுள்ளதாகவும் ரசிகர்கள் உற்சாகமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் இன்று வெளியாகவுள்ளது.


Related Post

dorothy

Dorothy Movie Review: டோரதி எப்படி இருக்கு? இந்த கதையை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா?

Posted by - செப்டம்பர் 26, 2026 0
Dorothy Movie Review: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் இசையில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில்…

சினிமாவுக்கு போடும் அஸ்திவாரம்.. டாப் ஹீரோவுடன் திடீர் மீட்டிங் போட்ட சச்சினின் வைரல் புகைப்படம்

Posted by - பிப்ரவரி 16, 2023 0
கிரிக்கெட்டில் மிகப்பெரும் ஜாம்பவானாக இருக்கும் சச்சினுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை பெருமைப்படுத்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சினுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இப்படி புகழின்…

நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு- பிரகாஷ் ராஜ் கண்டனம்

Posted by - செப்டம்பர் 29, 2023 0
பெங்களூரு: பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் ‘சித்தா’. இந்த படத்தை நடிகர் சித்தார்த் தன்னுடைய…

தேடி அலையும் கதாபாத்திரங்கள் வரவில்லை என்பதுதான் கஷ்டம்- விக்ரம்

Posted by - நவம்பர் 2, 2023 0
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர்.…
arulvaan

அருள்வான் திரை விமர்சனம்: கல்வியின் சக்தியை மனதைத் தொடும் வகையில் சொல்லும் அருள்நிதியின் ‘அருள்வான்’ – பார்க்க வேண்டிய படமா?

Posted by - ஜூலை 18, 2026 0
Arulvaan Movie Review in Tamil | Pixeltamil.com தமிழ் சினிமாவில் சமூகப் பொறுப்புடன் உருவாகும் படங்கள் அவ்வப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வரிசையில் இயக்குநர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன