‘தியாகம் செய்கிறோம்.. சீரியல்னா சும்மாவா?’ வெடித்து பேசிய வாரிசு இயக்குநர்.. ஆதரவும் எதிர்ப்பும்!

462 0

Varisu : வாரிசு படம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று வாரிசு இயக்குநர் வம்சி விமர்சகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அவரது கருத்துக்கு கண்டனங்களையும், ஆதரவையும் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற வாரிசு படம் குடும்ப ரசிகர்களின் ஆதரவால் நல்ல வசூலைப் பெற்றுவருகிறது. இதன் காரணமாக வாரிசு ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துவருவதாக கூறப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய், படக்குழுவினருக்கு சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் விருந்தளித்தார். சமீபத்தில் படத்தின் வெற்றிவிழாவும் கொண்டாடப்பட்டது. வசூலில் வெற்றிப்பெற்றாலும் வாரிசு விமர்சன ரீதியாக அடிவாங்கி வருகிறது. அரைத்த மாவையே இயக்குநர் அரைத்து வைத்திருப்பதாகவும், டிவி சீரியல்போல இருப்பதாகவும் பலரும் கருத்து பதிவிட்டனர். தொடக்கம் முதலே இப்படியான விமர்சனங்களை கேட்டு வரும் இயக்குநர் வம்சி இது குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

பலரும் அவரது கருத்துக்கு கண்டனங்களையும், ஆதரவையும் பதிவிட்டு வருகின்றனர்.அந்த வீடியோவில் பேசும் வம்சி, படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? படக்குழு எவ்வளவு மெனக்கெடுகிறது என்பது தெரியுமா? பலரும் எவ்வளவு கடின உழைப்பை போடுகின்றனர் என தெரியுமா? இதெல்லாம் ஆடியன்ஸின் பொழுதுபோக்குக்காக. இது ஜோக் அல்ல. படம் எடுப்பதற்காக இயக்குநர்கள் பல தியாகங்களை செய்கிறார்கள். சீரியல் மாதிரி இருக்கிறது என்கிறார்கள். ஏன் சீரியலை குறைத்து பேசுகிறீர்கள்? அதுவும்தான் கிரியேட்டிவ் ஜாப். படத்தை ஆராயுங்கள். ஆனால் வேலையை மட்டம் தட்ட வேண்டாம். நான் கமெர்ஷியல் படம்தான் செய்தேன். அது ஆடியன்ஸின் பொழுதுபோக்குக்காக. வாரிசு சிறந்த கமெர்ஷியல் படம் என்றார்

இந்த வீடியோவை ஷேர் செய்து சிலர்அவருக்கு கண்டனங்களை பதிவிட்டுள்ளனர். ”படம் எடுப்பது சேவை மட்டுமல்ல. படம் பார்ப்பவர்களும் பணம் கொடுத்தே கண்டு ரசிக்கின்றனர். கோடிகளில் சம்பளம் வாங்கும் இயக்குநர்களும், நடிகர்களும் தாங்கள் செய்யும் வேலையை தியாகம் அளவுக்கு பேசுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் நல்ல படத்தை மக்கள் வெற்றியடையவே செய்கின்றனர்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.அதேவேளையில் வம்சிக்கு ஆதரவாகவும், சில சினிமா விமர்சகர்களுக்கு எதிராகவும் பதிவிட்டுள்ள இணையவாசிகள் சிலர், ”சினிமா விமர்சனம் என்ற பெயரில் சிலர் யூடியூப் வியூஸ்களுக்காக செய்யப்படும் அரைகுறை விமர்சனமே வம்சியை இப்படி பேச வைத்திருப்பதாகவும், யார் முதலில் கொடுப்பது என்ற அவசரகதியில் படம் குறித்தான தெளிவான விமர்சனம் கொடுக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அனைத்து படங்களையும் உலக சினிமாக்களோடு ஒப்பிட முடியாது என்பதையும், நபருக்கு நபர் ரசனை வேறு என்பதை ரிவியூ செய்யும் நபர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Post

ஆர்வக்கோளாறில் தேவையில்லாத வேலையை பார்க்கும் கூட்டம்.. விஜய் அஜித் பெயரை கெடுக்கிறாங்க

Posted by - டிசம்பர் 8, 2022 0
தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களாக இருக்கும் விஜய், அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களின் திரைப்படங்கள் வெளிவந்தால் அதை திருவிழா…

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய போர் தொழில்.. மூன்று நாட்களில் சென்சேஷனல் வசூல்

Posted by - ஜூன் 12, 2023 0
போர் தொழில் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். நிகிலா…

விஜய் குடும்பம் பிரிய காரண மே விஜய் மனைவி சங்கீதா தானா.?? மனைவி பேச்சை கேட்டு பெற்றோரை விரட்டிய விஜய்.! !வெளியான ஷாக் தகவல்.!!

Posted by - ஜனவரி 18, 2023 0
 தமிழ்   சினிமாவின்   பிரபல   நடி கர்   விஜய் .  இவர்   சமீபத்தில்   நடித்த   வாரிசு   திரைப் படம்   வெளியாகி    மக்கள்   மத்தியில்   நல்ல   வரவேற்பு   பெற்று …

முதல் நாள் GOAT படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - செப்டம்பர் 6, 2024 0
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.இப்படத்தில் விஜய்யுடன்…

லியோ படத்தின் One Line Story இதுதானா?- லீக்கானதா, அதிர்ச்சியில் படக்குழு

Posted by - ஜூலை 27, 2023 0
விஜய்யின் லியோ தரமான படங்களாக இயக்கி இப்போது முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்புகள் கிடைத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். மாநகரம், மாஸ்டர், கைதி,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன