திருமாவளவனுக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்படுகிறார் – விசிக குற்றச்சாட்டால் திமுக கூட்டணியில் சலசலப்பு

147 0

சென்னை: ​திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திமுக கூட்​ட​ணி​யில் இருந்து சில கட்​சிகள் வெளி​யேறி​னாலும், அதற்கு ஈடாக பாமகவை கூட்​ட​ணி​யில் இணைப்​ப​தற்​கான நடவடிக்​கையை தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை மூலம் திமுக செய்து வரு​வ​தாக கூறப்​படு​கிறது. இதையொட்​டி, பாமக நிறு​வனர் ராம​தாஸை சந்​தித்த பிறகு , “2011-ம் ஆண்டு போல் விசிக​வும், பாமக​வும் ஒரே கூட்​ட​ணி​யில் இருக்க வேண்​டும்” என செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​திருந்​தார்.செல்​வப்​பெருந்​தகை​யின் கருத்தை கடுமை​யாக விமர்​சித்து தனி​யார் தொலைக்​காட்சி விவாத நிகழ்ச்​சி​யில் விசிக துணை பொதுச் செய​லா​ளர் வன்​னியரசு பேசி​ய​தாவது: காங்​கிரஸ் கட்​சிக்கு அதிக தொகு​தி​களை ஒதுக்​கு​கின்​றனர். தமிழகத்​தில் காங்​கிரஸ் வலிமை​யாகவா இருக்​கிறது. எங்​களுக்கு அதிக தொகு​தி​களை ஒதுக்க வேண்​டும் என கூறுகிறோம். நான் கூட்​டணி கட்​சியை குறைத்து மதிப்​பிட​வில்​லை.அதே​நேரம், காங்​கிரஸின் வலிமை குறித்து தமிழகத்​தில் கருத்​துகணிப்பு நடத்​தி​னால் உண்மை தெரிய​வரும். தமிழகத்​தில் காங்​கிரஸுக்கு என்ன இருக்​கிறது? அகில இந்​திய அளவில் ராகுல்​காந்தி என்​னும் தலை​வர் சிறப்​பாக செயல்​படு​கிறார். அதன் தொடர்ச்​சி​யாகவே காங்​கிரஸை பார்க்க வேண்​டி​யிருக்​கிறது. விசிக​வுக்கு செல்​வப்​பெருந்​தகை தலை​வர் இல்​லை. இன்று அவர் ஒரு கட்​சி​யில் இருப்​பார், நாளை ஒரு கட்​சிக்கு செல்​வார். இது​தான் அவருடைய கடந்த கால வரலாறு. விசிக குறித்து பேச அவருக்கு தார்​மீக உரிமை இல்​லை. பாஜக, பாமகவோடு சேர மாட்​டோம் என விசிக தலை​வர் தெளி​வாக கூறிய நிலை​யில், பாமகவோடு சேருங்​கள் என சொல்​வது அவர் வேலை​யல்ல. பாஜக​வும், காங்​கிரஸும் சேர வேண்​டும் என நாங்​கள் சொன்​னால் அவர் ஏற்​றுக் கொள்​வா​ரா. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

இதன் தொடர்ச்​சி​யாக காங்​கிரஸார் சமூக வலைதள பதிவு​களில், “2014 மக்​கள​வைத் தேர்​தலில் தனித்து களம் கண்ட காங்​கிரஸ் கட்​சி​யின் வாக்கு சதவீதம் 4.37. அதே​நேரத்​தில் மக்​கள் நல கூட்​டணி என்ற பெயரில் விசிக​வின் வாக்கு சதவீதம் 0.77. யார் வலிமை என்று இப்​போது புரி​கிற​தா. வன்​னியரசின் இந்த பேச்சை முதலிலேயே கட்​சித் தலை​வர் தடுத்து நிறுத்த வேண்​டும்” என கண்​டனக் குரல்​களை எழுப்பி வரு​கின்​றனர்.

விசிக​வில் இருந்து கருத்து வேறு​பாட்​டால் வெளி​யேறிய செல்​வப்​பெருந்​தகை, காங்​கிரஸ் தலை​வ​ரான பிறகே திரு​மாவளவனை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் பேசிய செல்​வப்​பெருந்​தகை, “2024 மக்​கள​வைத் தேர்​தலில் திரு​மாவளவனை வெற்றி பெறச் செய்ய காங்​கிரஸ் தொண்​டர்கள உழைப்​பார்​கள்” என தெரி​வித்​திருந்​தார். ஏற்​கெனவே கட்​சி​யில் இருந்​து, காங்​கிரஸ் கட்​சிக்கு தலை​வ​ராக செல்​வப்​பெருந்​தகை வந்​த​தில் எவ்​வித சங்​கட​மும் இல்லை என விசிக பொதுச்​செய​லா​ளர் துரை.ரவிக்​கு​மாரும் தெரி​வித்​திருந்​தார்.

இவ்​வாறு இரு தரப்​பினரும் இணக்​க​மாகி ஓராண்டே ஆன நிலை​யில், தற்​போது வெடித்​துள்ள மோதல் எங்கு வரை செல்​லும் என்​பதை பொறுத்​திருந்தே பார்க்​க வேண்​டும்​ என அரசி​யல்​ நோக்​கர்​கள்​ கூறுகின்​றனர்​.

Related Post

தவெகவை முடக்க முயற்சி செய்தனர்; அவர்களின் எண்ணம் ஈடேறாது: சிடிஆர் நிர்மல் குமார்

Posted by - அக்டோபர் 29, 2025 0
சென்னை: “தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது. மக்கள் விஜய் மீது 100% நம்பிக்கை வைத்துள்ளனர்” என அக்கட்சியின் இணை…
dde800be b0e8 45e5 8221 2027574a9450

Anbil Mahesh Case : ‘அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு’ காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

Posted by - செப்டம்பர் 16, 2026 0
திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து அதிரடி காட்டியிருக்கிறது தவெக அரசு.  இன்று காலை முதல்…

”களத்திற்கே வராத தற்குறி தளபதி” விஜயை கடுமையாக விமர்சித்த திமுக அமைச்சர் சேகர்பாபு

Posted by - டிசம்பர் 7, 2024 0
Minister SekarBabu: ”களத்திற்கே வராத தற்குறி” தான் விஜய் என திமுக அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். Minister SekarBabu: வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்…
CM Vijay 4

CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!

Posted by - ஜூலை 30, 2026 0
தொடர்ச்சியாக விஜய் ஆய்வு செய்வது இணையத்தில் எதிர்கருத்துகளையும் பெற்று வருகிறது. ரீல்ஸ் போடவும், போட்டோஷூட் எடுக்கவும் அவர் இந்த ஆய்வை பயன்படுத்திக் கொள்கிறார் என சகட்டுமேனிக்கு விமர்சனத்தை…
edapadi palanisamy

EPS Statement: “அதிமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவை, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும்“ இபிஎஸ் அறிக்கை

Posted by - மே 5, 2026 0
TN Election Results 2026: சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டும் வெற்றிப்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன