தொண்டை வலியுடன் ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கும் நோயாளிகள்

284 0

சென்னை:

தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பருவ காலத்தில் பரவும் வழக்கமான வைரஸ் பாதிப்புதான் இது என்றாலும், முன் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.Sore Throats: Symptoms, Causes, and Treatments to Know |  TravelpharmTravelpharm

பகல் வேளைகளில் அதீத வெப்பம் மற்றும் மாலை வேளைகளில் மழைப்பொழிவு என தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பருவ நிலையில் மாற்றங்கள் காணப்படுகின்றன. இதன் எதிர்விளைவாக குழந்தைகள், முதியவர்கள், பெண்களுக்கு கடுமையான தொண்டை வலி, உடல் அசதி, காய்ச்சல் மற்றும் சளி பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிகிறது.

அதன் தொடா்ச்சியாக மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக வரு ரின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படத் தொடங்கி 3 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், தற்போது காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்று பரவி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடா்பாக நோய்த் தொற்றியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டா் அப்துல் கபூா் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதேவேளையில், சூழலியல் மாற்றங்களால் பரவும் வைரஸ் தொற்றுகள் ஆங்காங்கே பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன

அனைத்து வயதினருக்கும் தொண்டை வலி, உடல் சோர்வு மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பெரும்பாலானோர் அதற்கு டாக்டர்களை நாடுவதில்லை. 3-ல் இருந்து 5 நாட்களுக்குள் அந்த பாதிப்புகள் குணமாகிவிடுவதே அதற்கு காரணம்.

எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவா்களுக்கு தீவிர தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது. அவா்களுக்கு பாராசிட்டமால் மற்றும் வைட்டமின் மருந்துகளையே பெரும்பாலும் பரிந்துரைக்கிறோம். வழக்கமான வைரஸ் தொற்று இது என்பதால் ஆன்டிபயோடிக், ஆன்டி வைரல் மருந்துகள் இதற்கு தேவையில்லை. வெது வெதுப்பான நீரில் உப்பு அல்லது கிருமித் தொற்று நீக்க மருந்துகளைக் கலந்து கொப்பளித்தால் போதுமானது. காய்ச்சிய தண்ணீரைப் குடிப்பதும், கைகளை சோப்பால் அடிக்கடி கழுவுவதும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

சென்னையில் வீடுகளுக்கு முன் நோ பார்க்கிங் போர்டு வைத்ததால் நடவடிக்கை – நீதிமன்றம் உத்தரவு

Posted by - செப்டம்பர் 10, 2024 0
சென்னை நகரில் வீடுகளின் முன் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் மற்றும் தடுப்புகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை…

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34 லட்சம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Posted by - மே 28, 2023 0
இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து…

தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால் அடுத்த மாதமே பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிவிடும்: ராமதாஸ்

Posted by - ஏப்ரல் 8, 2024 0
சென்னை: இந்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தினால், அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

கோவில்:நாச்சியார்கோவில் அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில்….

Posted by - ஜூன் 5, 2024 0
திருவிழா: வைகாசி அமாவாசையைத் தொடர்ந்து நாச்சியார்கோவிலில் ஆகாச மாரியம்மனுக்குப் பதிமூன்று நாட்களுக்குத் திருவிழா நடைபெறுகிறது. தினம் தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன்  அருளாசி வழங்குகிறாள். தல சிறப்பு:…

’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!

Posted by - ஏப்ரல் 21, 2025 0
எல்லோரும் தேர்தலுக்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாசிச பாஜக அரசு சாதுரியமாகக் காய் நகர்த்தி வருகிறது. இதனை நாம் எதிர்த்தே ஆக வேண்டும்- விசிக. திமுகவை மட்டுமே…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன