நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் மரணம்

261 0

நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்திநகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் மரணம் உடல்நலக் குறைவால் காலமானார். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சென்னை: தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி (67), திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி. இயக்குநரும், நடிகருமான விசு மூலம் தமிழ் திரையுலகில் இவர் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய முதல் படம் பூந்தோட்டம். பிரபல நகைச்சுவை நடிகர்களான விவேக் மற்றும் வடிவேல் அணியில் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமான காமெடியனாக அறியப்பட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் உட்பட பல திரை நட்சத்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவர் சொந்த ஊரில் வசித்து வந்த நிலையில், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்றிரவு 8.30 மணியளவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரில் இன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Post

திரைப்படங்கள் வெளியீட்டில் உதயநிதி தலையீடு… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - ஜனவரி 21, 2023 0
தமிழ்நாடு போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அரியலூர் பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று…

எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி

Posted by - நவம்பர் 30, 2022 0
ரச்சிதாவை விமர்சித்த ஜனனி விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரச்சிதா பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் இதற்கு முன்பு சீரியல்களில் நடிக்கும் போது…

2026-ல் கப்பு முக்கியம் பிகிலு.. அரசியல் என்ட்ரி பற்றி மறைமுகமாக சொன்னாரா விஜய்?

Posted by - நவம்பர் 2, 2023 0
லியோ விஜய் அரசியலுகு வர போகிறார் என நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து…

பிரமாண்டமான தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா.. இதன் விலை எத்தனை கோடி தெரியுமா

Posted by - ஆகஸ்ட் 23, 2024 0
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா…

பெட்ரோலுடன் கலந்த தண்ணீர்.. வாகனங்கள் பழுதானதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..

Posted by - ஆகஸ்ட் 27, 2024 0
நீண்ட காலமாகவே பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது, தரமான பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகி விடுவதாக தெரிவிக்கின்றனர்.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன