“நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க” மதுரை கலெக்டருக்கு பறந்த புகார்

326 0

நடிகர் சூரியின் அம்மன் உணவகம் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட கூடுதலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் புகார் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள நடிகர் சூரியின் குடும்பத்தினரின் உணவகமான அம்மன் உணவகத்தில் பெருச்சாளி, கரப்பான் பூச்சி இருக்கும் செப்டிங்டேங்க் அருகே உணவு தயாரித்து சுகாதாரமற்ற நிலையில் செயல்படுவதாக கூறி உணவகத்திற்கு சீல்வைக்க கோரி வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் அளித்ததாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது.

மதுரையில் இயங்கும் உணவகம்
மதுரையை சேர்ந்த பிரபல நடிகர் சூரியின் குடும்பத்தினருக்கு சொந்தமான உணவகமான அம்மன் உணவகம். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. பொதுப்பணி துறை ஒப்பந்தம் மூலம் கடந்த ஜூன் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொதுப்பணி துறையினரால்  434 சதுரடி பரப்பு மட்டுமே அம்மன் உணவகம் செயல்பட அனுமதி வழங்கபட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அம்மன் உணவக நிர்வாகத்தினர் செவிலியர் விடுதியில் கழிவுநீர் தொட்டி அமைந்திலுள்ள இடத்தில் விதிமுறைகளை மீறி கூடுதலாக 350 சதுரடிக்கு நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தும், 360 சதுர அடி திறந்தவெளி ஆக்கிரமிப்பும் செய்துள்ளதாக கூறி வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான முத்துக்குமார் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
புகார் மனு
அந்த மனுவில் அம்மன் உணவகத்தின் அருகே அமைந்துள்ள 10க்கும் மேற்பட்ட கழிவுநீர் தேங்கும் செப்டிக் டேங்க்குகளின் நடுவேதான் காய்கறிகள் வெட்டுதல், உணவு சமைத்தல், உணவு பொருட்களை பாக்கெட் போட்டு பேக்கிங் செய்தல் போன்ற பணிகள் இரவு பகலாக நடந்து வருவதாகவும், பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் வசிக்கும் இடமாக அந்த இடம் அமைந்துள்ளது என கூறியும், செவிலியர் விடுதியின் ஜன்னல்கள் முழுவதையும் மறைத்து  மினரல் வாட்டர் கேன்கள் நிறைந்த அட்டை பெட்டிகளை அடுக்கி வைத்திருப்பதால் அங்கு தங்கியிருக்கும் செவிலியர் மற்றும் செவிலிய ஆசிரியைகள் ஜன்னலை திறக்க முடியாமல்  எப்பொழுதும் மூடியே வைத்துள்ளனர்.
இதனால் அங்கு தங்கியுள்ள செவிலிய மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், அம்மன் உணவகத்தின் அருகில் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவும், பிரசவ வார்டும் உள்ளது. இதனால்  கழிவு நீர் தொட்டிகளின் நடுவிலும், பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்திலும் சுகாதாரமில்லாமலும், தரமற்ற வகையிலும் தயாரித்து சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் நோய் தொற்று உருவாகும் நிலை உள்ளது எனவும்,
சீல் வைக்க வேண்டும்
இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக பொதுப்பணி துறையின் ஒப்பந்த முறைகளை மீறி முழு ஆக்கிரமிப்பு செய்தும், சுகாதாரமற்ற முறையிலும் தரமற்ற வகையில் உணவுகளை தயாரித்து கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் அம்மன் உணவகத்தில் அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்து சீல் வைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நடிகர் சூரியின் உணவகமான அம்மன் உணவகம் சுகாதரமற்ற முறையில் இருப்பதாகவும் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் கூறி உணவகத்திற்கு சீல் வைக்க கூறி சமூக ஆர்வலர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இது குறித்து பேசிய சமூக ஆர்வலர் முத்துக்குமார்…,” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன்’ என்றார்.

Related Post

“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!

Posted by - ஜனவரி 29, 2025 0
பிரபாகரனிடம் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள். நீங்கள் வைத்திருப்பது பெரியார் எனும் வெங்காயம். என் தலைவன் பிரபாகரன் கையில் இருப்பது வெடிகுண்டு. பிரபாகரன் கொடுத்த வெடிகுண்டை வைத்திருக்கிறேன் எனவும்…
45

உங்கள் கனவில் முருகன் வந்தாரா? அப்போ இதுதான் அர்த்தம் பக்தர்களே!

Posted by - நவம்பர் 11, 2025 0
முருகப்பெருமான் உங்கள் கனவில் தோன்றினால் அதற்கு என்ன அர்த்தம்? என்பதை கீழே விரிவாக காணலாம். தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். தைப்பூசம், கார்த்திகை…

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.2½ லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அதிகாரி மீது வழக்குப்பதிவு

Posted by - நவம்பர் 4, 2023 0
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையில் போலீசார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு…

தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் – ஈபிஎஸ் விளாசல்..!!

Posted by - செப்டம்பர் 3, 2024 0
தமிழ்நாட்டின் அவலநிலையை மறைக்கவே இந்த கார் ரேஸ் பந்தயம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஈபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது…

ஒரே சாய்ஸ் அதிமுக கூட்டணி தான்…தவெக நிர்வாகிகளிடம் விஜய் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.?

Posted by - ஏப்ரல் 26, 2025 0
அதிமுகவிடம் ஓவராக டிமாண்ட் செய்து, கூட்டணியை கோட்டைவிட்டு விட்டதாக தவெக நிர்வாகிகளிடம் விஜய் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் யார் என்று தெரியுமா.? உங்க பேச்சை எல்லாம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன