நீங்க கையால சாப்பிடுறதுக்கு பின்னாடி இவ்வளவு அறிவியல் காரணங்கள் இருக்கா? இனிமே ஸ்பூனை யூஸே பண்ணாதீங்க!

338 0

இன்றைய நவநாகரீக உலகில், கைகளால் சாப்பிடுவது கெளவுரவ குறைச்சலாகவும், ஸ்பூன் மற்றும் முட்கரண்டியில் சாப்பிடுவது ஸ்டைலாகவும் நாகரீகமாகவும் கருத்தப்படுகிறது. உண்மையில், இவை நமக்கு தவறாக கற்பிக்கப்பட்டிருக்கின்றன.

பண்டைய காலம் முதல் இன்று வரை நாம் பின்பற்றி வரும் பாரம்பரிய முறைகள் மிகவும் பிரபலமானதாகவும், பல நன்மைகள் நிறைந்ததாகவும் இருக்கிறது. அப்படியொரு பாரம்பரிய முறை கைகளால் உணவை சாப்பிடுவது. நம் முன்னோர்கள் முதல் இன்றுவரை பலர் கைகளால் உணவை சாப்பிடுவதற்கு காரணம் உள்ளது.

நீங்கள் கைகளால் சாப்பிடும்போது, உணவை ரசித்தும், முழுமனதுடனும் சாப்பிடலாம். மேலும், இவை குடல் மற்றும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் பல்வேறு நன்மை வழங்குகிறது. கையால் உண்பதன் பின்னால் உள்ள அறிவியல் காரணம் மற்றும் நன்மைகள் என்னெவென்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.நீங்க கையால சாப்பிடுறதுக்கு பின்னாடி இவ்வளவு அறிவியல் காரணங்கள் இருக்கா? இனிமே  ஸ்பூனை யூஸே பண்ணாதீங்க! | Scientific Reason Behind Eating With Hands And  Benefits In ...

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

ஆயுர்வேதத்தின்படி, ஒவ்வொரு விரலுக்கும் சில ஆன்மீக முக்கியத்துவம் உள்ளது. இது உணவு மற்றும் செரிமானத்தை பாதிக்கிறது. கட்டைவிரல் அக்னி (நெருப்பு), ஆள்காட்டி விரல் வருணன் (காற்று), நடுவிரல் ஆகாஷ் (ஆகாயம்), மோதிர விரல் பிருத்வி (பூமி), மற்றும் சுண்டு விரல் ஜலம் (நீர்) ஆகியவற்றுடன் இணைக்கிறது. கைகளால் உண்ணும் போது, ஒவ்வொரு விரலும் குறிக்கும் உறுப்பைக் கொண்டுவருவதாகவும், அவை உள் உடல் செயல்பாட்டை முழுவதுமாகச் சமநிலைப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. இது உங்களுக்கு முழுமை உணர்வை அளிப்பதோடு, நீங்கள் சாப்பிடும் உணவை சரியாக ஜீரணிக்கும்

நிபுணர்கள் கூறுவது

சுகாசன தோரணையில் கைகளால் சாப்பிடுவது சிறந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சுகாசன தோரணை என்பது தரையில் சம்மனங்கால் போட்டு அமர்ந்திருக்கும் நிலையில் சாப்பிடுவது. பாரம்பரிய முறைப்படி இப்படி சாப்பிடுவது, உங்கள் உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. இது வயிற்றில் உள்ள செரிமான நெருப்புக்கு உணவு பிரசாதமாக அமையும். எனவே, நீங்கள் உண்ணும் உணவை உங்கள் கைகளால் எடுத்து சாப்பிட வேண்டும், பிரசாதம் இதயப்பூர்வமாக இருக்க வேண்டும்.

அறிவியல் காரணங்கள்

அறிவியலின் படி, கைகளால் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் கைகளில் தீங்கு விளைவிக்காத பாக்டீரியாக்கள் உள்ளன. அதேபோல, சுற்றுச்சூழலில் உள்ள பல்வேறு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன. மற்றவர்கள் பயன்படுத்திய ஸ்பூனை நீங்கள் பயன்படுத்தாமல், எப்போதும் கைகளால் சாப்பிடுங்கள்.

அதிகரித்த இரத்த ஓட்டம்

கைகளால் சாப்பிடுவது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஒரு வகையான தசை பயிற்சி என்று கூறப்படுகிறது. ஆதலால், இனிமேல் தவறாமல் கைகளால் எடுத்து சாப்பிடத் தொடங்குங்கள்.

வெப்பநிலை சென்சார்

நம் கைகளால் உணவை உண்ணும்போது, ​​நரம்பு முனைகள் உணவின் வெப்பநிலையை உணரும். நாம் என்ன சாப்பிடப் போகிறோம், உணவு எவ்வளவு சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்கிறது என்பதற்கு ஏற்ப உங்கள் மூளையைத் தயார்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது. ஆயுர்வேதக் கண்ணோட்டத்தில், உணவைத் தொடுவதன் மூலம், குறிப்பிட்ட உணவை ஜீரணிக்க தேவையான நொதிகள் மற்றும் செரிமான சாறுகளைத் தயாரிக்க நரம்புகள் உடலுக்கு செய்தியை அனுப்புகின்றன. இதனால், நீங்கள் சாப்பிடும் உணவு சரியாக ஜீரணிக்கப் படுகிறது.

அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படும்

நாம் கைகளால் சாப்பிடும்போது, பொதுவாக மெதுவாகதான் சாப்பிடுவோம். இதனால், அதிகமாகவோ அல்லது வேகமாகவோ சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. மேலும், இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது.

Related Post

இந்த விழாவுக்கு அசுரன் பட டயலாக் முக்கிய காரணம் – மேடையில் விஜய் அதிரடி

Posted by - ஜூன் 17, 2023 0
மாணவர்களை சந்திக்கும் நிகழ்வில் நடிகர் விஜய் தனுஷின் அசுரன் பட வசனத்தை மேற்கோள்காட்டினார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று…
Generated Image November 27 2025 6 06PM

தஞ்சாவூரில் ஆசிரியை படுகொலை! தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை;அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Posted by - நவம்பர் 27, 2025 0
தமிழ்நாட்டில் படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடக்கின்றன. தஞ்சாவூரில் திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை கொடூரமாக வெட்டிக்…

பசிக்கு சாப்பாடு போட்டவரையே துடிதுடிக்க கொன்ற வாலிபர்கள்- போலீசில் வாக்குமூலம்

Posted by - மார்ச் 30, 2023 0
கோவை: கோவை அன்னூர் அடுத்த கரைப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது60). விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து…

சென்னை பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் வெள்ளத்தில் மூழ்க என்ன காரணம்? ஞாயிறு இரவு நடந்தது என்ன?

Posted by - டிசம்பர் 8, 2023 0
சென்னை: சென்னை பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் கீழ்கட்டளை பகுதிகள் வெள்ளத்தில் சிக்க என்ன காரணம் , ஞாயிறு இரவு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.. ஞாயிறு அன்று காலை…

சென்னை வெள்ளமும் அரசியலும்… பொய் சொன்னவர்கள் மீது வழக்கு தொடருங்கள்… உச்சநீதிமன்ற வழக்கறிஞர் R.கிருஷ்ணமூர்த்தி

Posted by - டிசம்பர் 7, 2023 0
சென்னை: உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் அதிகாரிகள்,அரசியல்வாதிகள் மீது வழக்கு தொடுக்க அழைப்புவிடுத்துள்ளார். இன்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.R.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வெளியிட்ட…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன