நெல்லையில் ராகுல்… மதுரையில் அமித்ஷா… தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் தேசிய கட்சி தலைவர்கள்..!

245 0

இரவு 7 மணிக்கு செட்டிபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராகுல்காந்தி கூட்டாக பரப்புரை

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று பரப்புரை மேற்கொள்ள வருகை தருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அதன்படி, ஏப்ரல் 4, 5 ஆம் தேதிகளில் மதுரை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அமித் ஷா பரப்புரை மேற்கொள் திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.மீண்டும், மாலை 6.10 க்கு மதுரை விமான நிலையம் வரவுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, மாலை 6:20 மணிக்கு மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து வாகன பேரணி நடத்த இருக்கிறார். பெரியார் பேருந்து நிலையத்தில் தொடங்கும் பேரணி, நகைக்கடை பஜார் வழியாகச் சென்று இரவு 7.05 மணிக்கு மதுரை விளக்குத்தூணில் நிறைவடைகிறது. இதையடுத்து, இரவு 7:15 மணிக்கு மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அமித் ஷா செல்லவுள்ளார்.

நெல்லையில் ராகுல் இன்று பரப்புரை

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் இன்று தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். மாலை 3:50 மணிக்கு நெல்லைக்கு வர இருக்கும் ராகுல் காந்தி, மாலை 4 மணிக்கு, நெல்லை பெல் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

ராகுல், மு.க. ஸ்டாலின் ஒரே மேடையில் பரப்புரை

அங்கிருந்து கோவை புறப்படும் ராகுல் காந்தி, செட்டிபாளையத்தில், இரவு 7 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து கூட்டாக பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். கோவை திமுக வேட்பாளர் ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளனர். ராகுல் பரப்புரையை யொட்டி 2,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Post

Actor Dhanush

Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?

Posted by - ஆகஸ்ட் 4, 2026 0
’’பாஜக-வை கொள்கை எதிரி என பிரகடனப்படுத்தி விஜய் தமிழ்நாட்டில் ஆட்சியையே பிடித்திருக்கும் நிலையில், தனுசை பாஜகவில் இணைத்து விஜய்க்கு எதிராக களமிறக்க பாஜக திட்டமிட்டு வருகிறது” மன்றத்திற்கு…
Generated Image January 05 2026 11 52AM

இன்று பள்ளிகள் திறப்பு.. போராட்ட களத்தில் இடைநிலை ஆசியர்கள்

Posted by - ஜனவரி 5, 2026 0
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். TN Govt Teachers Protest: சம வேலைக்கு…

’’நான் நிலம் வாங்கியது உண்மைதான்.. விரைவில் இன்னொரு நிறுவனம்’’- அண்ணாமலை பரபர விளக்கம்!

Posted by - செப்டம்பர் 12, 2025 0
இந்த நிலத்தை நான், என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன்.- அண்ணாமலை இயற்கை விவசாய நிலம் வாங்கியது உண்மை என்று…
wert

திமுக மாணவரணி செயலாளர் மாற்றம் – காரணம் என்ன ?

Posted by - மார்ச் 15, 2026 0
நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக இருந்த வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, 2021ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக செய்தி தொடர்பு இணை…

முதலமைச்சர் ஆவேன் என என்றுமே நினைக்கவில்லை… எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

Posted by - ஆகஸ்ட் 27, 2025 0
முதலமைச்சராக பொறுப்பேற்பேன் என்று நான் ஒரு முறை கூட கருதியதில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக-வின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன