நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிக்கன் வெஜிடபிள் சூப்

267 0

காய்கறிகள், சிக்கன் சேர்த்து செய்யும் சூப் உடலுக்கு நன்மை அளிக்கிறது. இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிக்கன் வெஜிடபிள் சூப் | Chicken  Vegetable Soup

தேவையான பொருட்கள் :

சிக்கன் – கால் கிலோ

வெங்காயம் – 1

காளான் – 1 கப்

கேரட் – 3

பீன்ஸ் – 3

கோஸ் – சிறிய துண்டு

தனி மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி

பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு,மிளகு தூள், கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு

வெண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை :

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி வேகவைத்து கொள்ளவும். பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை கொரகொரப்பாக தட்டி வைக்கவும். கொத்தமல்லி, வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் தட்டி வைத்த பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டை போட்டு வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் காய்கறிகள், காளான் சேர்த்து வதக்கவும். இதற்கு தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி காய்கறிகளை வேக விடவும்.

இப்போது வேக வைத்த சிக்கனை சேர்த்து கொள்வதோடு உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்க வேண்டும்.

காய்கறிகள் மற்றும் சிக்கன் வெந்துள்ளதா? என சரிபார்த்துவிட்டு சிக்கன் வெஜிடபிள் சூப்பை பரிமாறலாம்.

Related Post

மதியம் சாப்பிட்டவுடன் தூக்கம் வருதா..? இந்த பிரச்சனைதான் காரணம்..!

Posted by - மார்ச் 14, 2023 0
இந்த ஃபுட் கோமா அதிகரித்தது ஒர்க் ஃபிரம் ஹோமில்தான் என்று கூறப்படுகிறது. நமது உணவுப் பழக்கம் அதிகரித்தது முதல் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே திருப்பிப் போட்டுவிட்டது.…

என்னை பிக்பாஸ் 7 வீட்டிற்குள் மீண்டும் அனுப்பினால்-அதிரடியாக பதிவு போட்ட பிரதீப்

Posted by - நவம்பர் 10, 2023 0
பிக்பாஸ் 7 கடந்த அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் தொடங்கியது தமிழ் சின்னத்திரையின் பெரிய பட்ஜெட் ஷோ பிக்பாஸ் 7. மக்களுக்கு…

படுத்தபடி நடிகை சமந்தா கொடுத்த கிளாமர் போஸ்.. காட்டு தீ போல் பரவும் புகைப்படம்

Posted by - மே 31, 2023 0
சமந்தா இந்தியளவில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்தது. வரலாற்று கதையில் சமந்தா நடித்திருந்தால், இப்படத்தின் மீது…

மணமணக்கும்… கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா

Posted by - செப்டம்பர் 4, 2023 0
இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசிக்க தொடங்கிவிட்டீர்களா? நீங்கள் எப்போதும் வித்தியாசமான சுவையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சமைத்து கொடுக்க விரும்புவீர்களா? உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன