Generated Image January 01 2026 12 01PM

பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி

144 0

அரசு ஊழியர்கள் கோரிக்கை

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு அரசு ஊழியர்கள், நிதி ஆலோசக அதிகாரிகள் என பல கட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது,

இதனையடுத்து தமிழக அரசு ஓய்வூதியம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது. இதனையடுத்து உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசுஊழியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்தது.  இதனையடுத்து அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகிய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையாத காரணத்தால் வருகிற ஜனவரி 6ஆம் தேதி காலைவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. இந்த நிலையில்  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஓய்வூதியம் தொடர்பாக முழு அறிக்கையும் முதலமச்சர் ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து  

பழைய ஓய்வூதிய திட்டம்- நாளை முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தோடு அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு இன்று தலைமைசெயல்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போட்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகி அமிர்தகுமார், தங்களது கோரிக்கைகளை அமைச்சர்கள் குழுவிடம் தெரிவித்தார். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகும், நாளை பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சர்கள் குழு வாக்குறுதி கொடுத்துள்ளதாக தெரிவித்தார். 

Related Post

மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் – என்னென்ன?

Posted by - டிசம்பர் 5, 2025 0
தொகுதிப் பங்கீடு குறித்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தமிழக காங்கிரஸ் குழு 3 நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடக்கிறது. அதற்கான…
sd

ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?

Posted by - மார்ச் 30, 2026 0
தமிழ்நாடு பாஜகவில் தலைவராக இருந்தபோது அண்ணாமலை எடுத்த நடவடிக்கைகளின் விளைவாகவே தற்போது அவர் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுகிறது. Annamalai BJP TN Election 2026: கோவை வந்திருந்த பிரதமர் மோடியை…

ஓபிஎஸ்-ஐ எப்படியாவது சமாதானப்படுத்துங்க.. அதிமுக – பாஜக கூட்டணி துடிப்பது ஏன்?

Posted by - ஆகஸ்ட் 4, 2025 0
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்குள் அழைத்து வர அதிமுக – பாஜக தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழக அரசியல் நாளுக்கு…
Generated Image January 23 2026 11 16AM

வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?

Posted by - மார்ச் 23, 2026 0
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில், பிரதான கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு…
dmk mks

“குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்” – தவெக மீது ஸ்டாலின் தாக்கு

Posted by - மே 25, 2026 0
சென்னை: “தவெக குதிரை வேகத்தில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. இதன்மூலம், ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டு இருக்கிறார்கள்,” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன