பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,

250 0

அன்று நீதிமன்றம் ஏறி அயோத்தி ராமர் கோயிலுக்காக நீதி கேட்டோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது” என அனுராக் தாகூர் கூறினார்.

சனாதன தர்மத்திற்கு எதிராக இந்தியாவில் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்ததற்கு திமுக எம்.பி., ராணி ஸ்ரீ குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லி வரை எதிரொலித்த திருப்பரங்குன்றம் விவகாரம் 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பின்புறம் உள்ள மலை மீது உச்சியின் ஒருபுறம் காசி விஸ்வநாதர் ஆலயமும், மறுபுறம் இஸ்லாமிய தர்காவும் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் மலை உச்சியில் தர்காவுக்கு தீபத்தூண் அமைந்திருப்பதாக சொல்லப்படும் இடத்தில் திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் அனுமதி அளித்த நிலையில் மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு விடலாம் என கருதி தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கப்படவில்லை. இரண்டு முறை உத்தரவிட்டும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தும் தமிழ்நாடு அரசு அனுமதியளிக்கவில்லை. இதுதொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. அதேசமயம் இந்த விவகாரம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.

தமிழ்நாட்டை சாட்டிய அமைச்சர் அனுராக் தாக்கூர் 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து இந்தியா கூட்டணி சார்பில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை மாற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவம் மக்களவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் திமுக – பாஜக எம்.பி.,க்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் மத்திய பாஜக அமைச்சர் அனுராக் தாகூர் நேற்று (டிசம்பர் 12) மக்களவையில் உரையாற்றினார். அப்போது திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசும்போது திமுக அரசை கடுமையாக சாடினார். அதாவது, “இந்தியாவில் ஒரு மாநில அரசு சனாதன தர்மத்திற்கு எதிராக செயல்படுகிறது. நீதிமன்றம் அனுமதி கொடுத்தும் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்காமல் ஏன் தடுக்கிறார்கள்?. அன்று நீதிமன்றம் ஏறி அயோத்தி ராமர் கோயிலுக்காக நீதி கேட்டோம். இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்கள் நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது” என கூறினார்.

பதிலடி கொடுத்த திமுக எம்.பி., 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்காசி தொகுதி திமுக எம்.பி.,யான ராணி ஸ்ரீகுமார், “எங்களுடைய திமுக அரசு மக்கள் அமைதியாக மற்றும் சுதந்திரமாக வழிபாட்டு முறையை பின்பற்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தமிழ் கடவுளான முருகனை எப்படி வழிபட வேண்டும் என்று தமிழ் மக்களாகிய எங்களுக்கு யாரும் கற்றுத்தர வேண்டாம். அனைத்து சமூக மக்களும் தமிழ்நாட்டில் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். சில மதவாத சக்திகள் பொய் தகவல்களை பரப்பி அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் கலவரம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதனை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே மதவாத சக்திகளை எதிர்த்து தமிழ்நாடு போராடும், அதில் வெல்லும்” என தெரிவித்துள்ளார்.

Related Post

கொரோனாவால் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு: மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

Posted by - ஏப்ரல் 26, 2023 0
சிம்லா : கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன. இந்த…

மாணவியை காதலிப்பதில் தகராறு: தேர்வு அறையில் 9-ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய சக மாணவன்

Posted by - ஏப்ரல் 21, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், ராஜமகேந்திராவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி சாய் பிரசாத்(வயது14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் உதயசங்கர்…

தொடர் வீழ்ச்சிக்கு பிறகு மீளும் பங்குச்சந்தைகள்….. முதலீட்டாளர்கள் அதிக லாபம் ஈட்ட எந்த பங்கை வாங்கலாம்…

Posted by - ஆகஸ்ட் 7, 2024 0
அமெரிக்காவில் சாத்தியமான பொருளாதார மந்தநிலை, மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதட்டங்கள் உள்ளிட்ட காரணங்களினால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3 நாட்களாக பெரும் வீழ்ச்சி அடைந்தன. இந்த…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான தகுதி நீக்க நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும் மாநிலத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம்சாட்டுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். வாக்கு திருட்டால் தான் தேர்தலில் நேருவும், இந்திரா காந்தியும் வெற்றி பெற்றதாக அவர் விமர்சித்தார். சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலில் பெரும்பாலான மக்கள் வல்லபாய் பட்டேலுக்கு வாக்களித்தும், நேருதான் பிரதமர் ஆனதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Posted by - டிசம்பர் 11, 2025 0
நாடாளுமன்றத்தின் மக்களவையில் S.I.R மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தான் தோல்வியடையும்…
Breaking News Major SBI Announcement

தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? – பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Posted by - அக்டோபர் 24, 2026 0
பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமானால் என்னென்ன சவால்களை எதிர்கொள்ள நேரிடும்? தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன