பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததுடன், சாட்சியங்களிடம் விசாரணை நடத்தினர்.
சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்துகொண்டது தொடர்பாக திமுக இளைஞரணி நிர்வாகிகள் 2 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
விருகம்பாக்கத்தில் கடந்த 31-ம் தேதி இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தவறாக நடந்துகொண்டதாக திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்ததுடன், சாட்சியங்களிடம் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவுசெய்யப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டனர். மேலும், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதுடன், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
Related Post
பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் அலட்சியபடுத்திய தமிழக அரசு…பொங்கி எழுந்த இடைநிலை ஆசிரியர்கள்…
சென்னை: ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி அடுத்தகட்டமாக இன்று (பிப்.29) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009…
வெயில் அதிகமா இருக்கா..? வருகிறது மழை..
தமிழ்நாடு, புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி…
2026-ல் கப்பு முக்கியம் பிகிலு.. அரசியல் என்ட்ரி பற்றி மறைமுகமாக சொன்னாரா விஜய்?
லியோ விஜய் அரசியலுகு வர போகிறார் என நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து…
சென்னையில் வெள்ளம் தேங்கியதற்கு காரணமே இதுதான்.. விளாசிய நீதிமன்றம்! மாநகராட்சி மீது சாடல்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த வெள்ள பாதிப்புகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கியமானவை என…
கும்பகோணம் மேற்கு காவல் நிலையம் இந்தியாவில் முன்மாதிரி கல்விக்கூடமாக மாறியது
கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு. ரமேஷ் தனது முயற்சியால் நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உருவாக்கி, காவல் நிலையத்தை மாணவர்களுக்கு முன்னேற்றக் கூடமாக மாற்றியுள்ளார்.…
Categories
- Sports (86)
- TN Political Zone (361)
- Trending Tamil (716)
- Uncategorized (1)
- Viral Social (18)
- அரசியல் (279)
- இந்தியா (483)
- உலகம் (176)
- சினிமா (863)
- தமிழ்நாடு (1,204)
Recent Posts
- CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை – நிர்மல்குமார்

- Anbil Mahesh Arrest: ரூ.100 கோடி லஞ்சம்: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது!

- DMK:அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! – எதற்காக தெரியுமா?

- தனியார் மயமாகும் 4 பொதுத்துறை வங்கிகள்? – பேரதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

- TN Weather News: விடாது கொட்டும் மழை – 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் – சென்னை? தமிழக வானிலை அறிக்கை
