போலீஸ் போட்ட 33 நிபந்தனைகள்.. திராவிட கட்சிகளுக்கு சவால் விட்டு சரித்திரம் படைப்பாரா TVK விஜய்?

252 0

சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த விஜய், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இக்கட்சியின் கொடியும், கொடிப்பாடலும் சமீபத்தில் அவரே வெளியிட்டார். கொடி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் பேசிய விஜய், ‘நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முதல் மாநாடு நடைபெறும்’ என்று தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் கூறியிருந்தார்.

ஏற்கனவே மாநாடு செப்டம்பரில் நடக்கவிருந்த நிலையில் அனுமதி கிடைக்காத தால் நடக்கவில்லை. எனவே தேதி தள்ளிப்போனது. அதன்படி, வரும் அக்டோபர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடக்கும் என்று விஜய் அறிவித்திருந்தார். இந்த மாநாட்டில், தவெகவின் கொள்கைகள், அக்கட்சியின் திட்டங்கள், அதைச் செயல்படுத்தும் கொள்கை தலைவர்கள் உள்ளிட்டவர்களை அறிமுகம் செய்யும் நோக்கில், இந்த முதல் மாநாடு நடைபெறவுள்ளது என்று விஜய் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை கிராமத்தில் வரும் அக்டோபர் 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு முதல் மாநாடு நடக்கவுள்ளது. இம்மா நாட்டை சிறப்புடன் கொண்டாட தொண்டர்களும், நிர்வாகிகளும், ரசிகர்களும் காத்திருக்கின்றனர். முதல் மாநாடு கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில் இதற்கு அக்கட்சிப் பொ.செ., புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார்., இதற்கு பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை ஏழுப்பியதுடன், அனுமதி வழங்கியது.

ஆனால் குறிப்பிட்ட தேதியில் மாநாடு நடக்கவில்லை. இந்த நிலையில், தவெக முதல் மாநாடு நடத்துவதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு, 33 நிபந்தனைகளில் இருந்து சிலவற்றிற்கு தளர்வுகள் அளிக்க வேண்டுமென கேட்டு மனு அளித்திருந்த நிலையில்,காவல் துணை கண்காணிப்பாளார் நந்தகுமார் 17 நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளார்.

இதனால் தான் விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களை, ”மது அருந்திவிட்டு மாநாட்டிற்கு வரக் கூடாது, பெண்களுக்கும், பெண் காலவர்களுக்கு பாதுகாப்பு, அதிகாரிகளை மதிக்க வேண்டும், இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்” உள்ளிட்ட பல அறிவுரைகளை உத்தரவாக பிறப்பித்து அவற்றை கடைப்பிடிக்க வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் முதல் மாநாட்டு தேதி தள்ளிப்போன நிலையில் தற்போது அனுமதி கிடைத்துள்ளதால் தவெக தொண்டர்களும், நிர்வாகிகளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

இது தவெகவுக்கு மட்டுமல்ல விஜய்யும் முதல் அரசியல் மாநாடு என்பதால் அவர் மீது அனைத்துக் கட்சிகளின் கண்களும் வட்டமிட்டு வருகின்றன. ஏற்கனவே விஜயின் அரசியல் வருகை திராவிட கட்சிகளுக்கு சவாலாக இருக்கும் எனவும், திராவிட கட்சிகள் குறிப்பாக திமுக கலக்கத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்களும், ஊடகவியலாளர்களும் கூறிய நிலையில், இம்முதல் மாநாட்டை ஆடியோ நிகழ்ச்சி மாதிரி இல்லாமல் அரசியல் நிகழ்ச்சியாக விஜய் எப்படி நடத்த திட்டமிட்டிருக்கிறார்…அதில் தன்னை அரசியல்வாதி என்று நிரூபிப்பாரா??? மற்ற கட்சிகளிடம் இருந்து அது எவ்விதத்தில் வேறுபடும்? அம்மாநாட்டில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் அவரது பேச்சுகள் அது மக்களிடமும், நிர்வாகிகளிடமும் எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Post

தமிழ்நாட்டில் உக்கிரமாகப் போகும் போர்.. ஸ்கெட்ச் போடும் அரசியல் கட்சிகள்.. எல்லாம் ஓட்டுக்குத்தான்

Posted by - மே 14, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைதளங்கள் மூலமாக பரப்புரைகளை தீவிரப்படுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல்…

விவசாயிகள் எதிர்ப்பை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்ப்பு..

Posted by - டிசம்பர் 28, 2022 0
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஆலோசனையில்…

10 அமைச்சர்களின் துறை மாற்றம்.. எந்த அமைச்சர் என்ன துறை?

Posted by - டிசம்பர் 14, 2022 0
Tamilnadu Ministers department | 10 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் 10 அமைச்சர்களின் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு…

கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Posted by - மே 17, 2023 0
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதலமைச்சர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப முதலமைச்சர் உத்தரவு தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

இனி இவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Posted by - மார்ச் 16, 2024 0
அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும்  மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் புதிய…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன