மக்களவை தேர்தல் எதிரொலி… ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படுகிறதா? – பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

326 0

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயேதான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டியுடன் தொடங்கவுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்டிருந்த ஐபிஎல் அட்டவணை முழுமையாக இல்லாமல் ஏப்ரல் 7ஆம் தேதி வரையிலான போட்டிகளுக்கு மட்டுமே இருந்தது.

நாடு முழுவதும் தேர்தல் நடைபெறுவதால், மீதமுள்ள போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படலாம் எனவும், தேர்தல் தேதி வெளியானவுடன் அதற்கேற்றவாறு தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் இருவேறு தகவல்கள் பரவின.

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தேர்தல் நடைபெற்றாலும், அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெறும் என ஜெய் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால், முழுமையான போட்டி அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

பாவம் விட்டுருங்கயா..! ஸ்டோக்ஸ் & கோவை வெச்சு செய்யும் இந்தியர்கள் – ”பேஸ்பால் காணோமாம்”

Posted by - ஜூலை 28, 2025 0
பென் ஸ்டோக்ஸின் ட்ரா பரிந்துரையை ஜடேஜா நிராகரித்ததை மையப்படுத்தி, இங்கிலாந்து அணியை விமர்சித்து ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட்…

ஜடேஜாவை தூக்கிவைத்து கொண்டாடிய தோனி… வைரலாகும் புகைப்படம்

Posted by - மே 30, 2023 0
கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டபோது, அதனை பவுண்டரியாக மாற்றி ஜடேஜா அணியை வெற்றி பெற வைத்தார் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10…
messi

Lionel Messi: போதும்பா முடிச்சுக்கலாம்..! சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் அதிரி புதிரி சாதனைகள் – முழு லிஸ்ட்

Posted by - செப்டம்பர் 1, 2026 0
Lionel Messi Records: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அர்ஜெண்டினாவில் லயோனல் மெஸ்ஸி படைத்துள்ள வரலாற்று சாதனைகள் சிலவற்றை இங்கே அறியலாம். Lionel…

நான் ஃபினிஷர் தான்டா..! தோனியின் 5 வருட காத்திருப்பு, மூச்சு விடும் சென்னை – ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மாற்றம் என்ன?

Posted by - ஏப்ரல் 15, 2025 0
தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி…

நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி… மரண மாஸ் வீடியோ

Posted by - மார்ச் 24, 2025 0
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ் தோனி எப்போது பேட்டிங் வருவார் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர். இளம் விக்கெட் கீப்பர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன