மிரட்டிய ஷர்தூல்.. சுழலில் அசத்திய வருண்.. பெங்களூருவை பந்தாடிய கொல்கத்தா

452 0

IPL 2023 : பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் களைக்கட்டியுள்ளது. தற்போது லீக் சுற்றுப்போட்டிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆரம்பத்தில் பெங்களூரு அணியின் கை சற்று ஓங்கி இருந்தது. கொல்கத்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அந்த அணி ஒரு கட்டத்தில் 150 ரன்களை எட்டுமா என்பதே சந்தேகமாக இருந்தது. நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் 57 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த அதிரடி மன்னன் ரஸல் முதல் பந்திலே டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்ததால் கொல்கத்தா ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அப்போது கொல்கத்தா அணி 11.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அதன்பின்னர் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் மிரட்டலான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். சிக்ஸர், பவுண்டரிகளாக ஷர்துல் தாக்கூர் விரட்ட ரன்ரேட்டும் பின்னர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. ஈடன் கார்டனில் கொல்கத்தா ரசிகர்கள் உற்சாகமாகினர். அதிரடியாக ஆடிய ஷர்துல் 29 பந்துகளில் 68 ரன்களை குவித்தார். இதன்காரணமாக கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் விராட் கோலி மற்றும் கேப்டன் டூ பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. பெரிய இன்னிங்ஸை ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுனில் நரேன் சுழலில் கோலி விக்கெட்டை பறிக்கொடுத்தார். அதன்பின்னர் அந்த அணிக்கு இறங்குமுகம்தான். அடுத்த ஓவரிலே டூபிளிசஸ் விக்கெட்டை வருண் காலி செய்தார். கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

முடிவில் பெங்களூரு அணி 17 . 4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளும், சுயாஷ் சர்மா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.

Related Post

ஹாரி புரூக் அபார சதம்: பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்…

Posted by - ஏப்ரல் 15, 2023 0
ஹாரி புரூக் 55 பந்துகளில் சதமடித்து, இந்த ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில்,…

சாம்பியன்ஸ் ட்ராபி – பேட்டிங், பவுலிங்கில் அசத்திய வீரர்கள் – யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை?

Posted by - மார்ச் 10, 2025 0
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை சேர்த்த வீரர்கள் குறித்து ந்த தொகுப்பில் அறியலாம். ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் வெற்றி பெற்ற இந்தியா…

அகமதாபாத்தில் இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வெதர் மேன் சொன்ன வானிலை தகவலால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - மே 29, 2023 0
16 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை நிலவரங்கள் கூறும் நிலையில் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 16-ஆவது ஐபிஎல்…

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் – ரோகித் சர்மா சாதனை

Posted by - டிசம்பர் 8, 2022 0
இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என…

ஜடேஜாவை தூக்கிவைத்து கொண்டாடிய தோனி… வைரலாகும் புகைப்படம்

Posted by - மே 30, 2023 0
கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டபோது, அதனை பவுண்டரியாக மாற்றி ஜடேஜா அணியை வெற்றி பெற வைத்தார் ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன