முதல் நாளே ஹிட் அடித்த பிரீமியர் எனர்ஜிஸ் ஐபிஓ…. ரூ.450 முதலீடு செய்திருந்தால் ரூ.990 கிடைத்திருக்கும்… ஒரே நாளில் 120% லாபம்..

243 0

பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள்  பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன. முதல் நாள் பங்கின் விலை 120 சதவிகிதம் பிரீமியம் விலையில் வர்த்தகத்தை தொடங்கியது. அதாவது ரூ.450க்கு வாங்கிய பங்கின் விலை 990 ரூபாயாக அதிகரித்தது. அதுவே பிஎஸ்இ சந்தையில் ரூ.991 என்ற விலை பட்டியலிடப்பட்டுள்ளது.

அதுவே க்ரே மார்க்கெட்டில் இந்த பங்கின் விலை 100% பிரீமியத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன. இது அதிகாரப்பூர்வமான சந்தை கிடையாது.

பிரீமியர் எனர்ஜிஸின் ஐபிஓ முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான முதலீட்டை பெற்றுள்ளது. நிறுவனம் சாராத முதலீட்டாளர்களின் முதலீடு சந்தா விகிதம் 74 மடங்கு அதிகமாக இருந்தது.

இந்த ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதி ஹைதராபாத்தில் 4 ஜிகாவாட் சோலார் பிவி டாப்கான் செல் மற்றும் 4 ஜிகாவாட் சோலார் பிவி டாப்கான் மாட்யூல் உற்பத்தி வசதியை நிறுவுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் , துணை நிறுவனமான பிரிமியர் எனர்ஜிஸ் குளோபலில் முதலீடு செய்ய நிகர வருமானத்தைப் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மீதமுள்ள நிதி பொது நிறுவன நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

பிரீமியர் எனர்ஜிஸ் 2023-24ம் நிதியாண்டின் இறுதியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய ஒருங்கிணைந்த நிறுவனமாக இருந்தது. செல் உற்பத்திக்கான வருடாந்திர நிறுவப்பட்ட திறன் 2 GW மற்றும் தொகுதி உற்பத்தி 4.13 GW ஆகும். 2023-24ம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கு சூரிய மின்கலங்களை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய இந்திய நிறுவனமாகவும் இது உள்ளது.

நிறுவனம் ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஐந்து உற்பத்தி வசதிகளை வைத்துள்ளது. மேலும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எட்டு துணை நிறுவனங்கள் மூலம் செயல்பாடுகளை நடத்துகிறது.

புதிய 4 GW TOPCon சோலார் செல் லைன் உட்பட, நிறுவனத்தின் கணிசமான முதலீடுகள், மற்றும் மூலதனத்தின் மீதான அதன் மேம்பட்ட வருமானம் 2022ம் நிதியாண்டில் 3.6% ஆக இருந்து. 2023-24ம் நிதியாண்டில் 25.6% ஆக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மிகவும் வலுவாக உள்ளது.இந்தியாவின் மாட்யூல் உற்பத்தி திறன் 2024 நிதியாண்டில் தோராயமாக 72 ஜிகாவாட்டை எட்டியது. தற்போதைய சூரிய மின்கல உற்பத்தி திறன் 8.1 ஜிகாவாட் ஆகும். இது எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனத்தின் செயல்பாடுகளின் வருவாய், 2020-21ம் நிதியண்டில் முதல் 2022-23 வரை 42.71% என்ற கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் இருந்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் வருவாய் 120% அதிகரித்து ரூ.3,143 கோடியாக இருந்தது. 24ஆம் நிதியாண்டில் ரூ.231 கோடி லாபம் ஈட்டியது. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டு ரூ.13.3 கோடி நஷ்டம் அடைந்திருந்தது.

Related Post

உ.பி: ஒரே மருத்துவமனையில் 60 கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு – ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு

Posted by - ஆகஸ்ட் 7, 2023 0
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லாலா ரஜபத் ராய் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக வரும் பெண்களில் எச்.ஐ.வி. எனப்படும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது…

ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!

Posted by - ஜூலை 17, 2025 0
இதன்மூலம் சுமார் 36 கோடி ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்ட் பயனர்கள், இலவசமாக Perplexity வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏர்டெல் பயனாளர்களுக்கு 1 ஆண்டுக்கு செயற்கை நுண்ணறிவு…

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ – யாருக்கும் பாதிப்பில்லை என மந்திரி டுவீட்

Posted by - ஜூன் 15, 2023 0
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3சி…

இந்தியாவில் 6 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்தது

Posted by - பிப்ரவரி 21, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 14-ந்தேதி பாதிப்பு 74 ஆக…

இந்திய பெருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது: ஐ.நா. தகவல்

Posted by - ஜனவரி 6, 2024 0
2023-ம் ஆண்டில் உலகளாவிய சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு, உலகின் அதிவேக வளர்ச்சி விகிதத்துடன் பொருளாதாரமாகத் தொடர்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 2024-ல் 6.2 சதவீதமாக…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன