ரசிகர்களை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் – நடிகர் அஜித் குமார்

207 0

ரசிகர்களின் அன்பை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

சினிமாத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அஜித் குமார், தனது ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், எந்த பின்புலமோ, யாருடைய சிபாரிசோ இல்லாமல் தான் சினிமா துறைக்குள் நுழைந்ததாக தெரிவித்துள்ள அஜித் குமார்,  எண்ணில் அடங்காத வெற்றிகளையும், தோல்விகளையும் சினிமா துறையில் பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறை தனது வெற்றி மீது சந்தேகம் கொள்ளும்போதும் ரசிகர்களின் அன்பும், ஆதரவுமே தன்னை மீண்டு வர செய்துள்ளதாகவும், ரசிகர்களின் அன்புக்கு என்றும் உண்மையாகவும், உறுதுணையாகவும் இருப்பேன் என்றும் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் தனது ரசிகர்கள் மட்டுமே என தெரிவித்துள்ள அவர், ரசிகர்களின் அன்பை தனது சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

33 ஆண்டுகால சினிமாத் துறையில் தனக்கு ஊக்கமளித்து, உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள நடிகர் அஜித் குமார்,  தனக்கு பத்ம பூஷன் விருது வழங்கி தனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்திய குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அரசுக்கு அதற்காக நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Post

எவ்ளோ சிகரெட் பாக்கெட் அடித்தேன் என்று கணக்கே இல்லை..ரஜினிகாந்த் பேச்சு

Posted by - ஜனவரி 27, 2023 0
இந்திய சினிமாவின் முக்கிய பிரபலமாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.  #rajinikanth #thalaivar #superstar #rajini #thalapathy #superstarrajinikanth…

நீச்சல் உடையில் சமந்தா..HD படங்கள்…

Posted by - பிப்ரவரி 24, 2024 0
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டு வர சிகிச்சை எடுத்து வரும் நிலையில் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். அந்த நேரத்தில் ஆன்மீகம்,…

அர்ஜுனுக்கு முன் 3 நடிகர்களை முதல்வன் படத்தில் நடிக்க வைக்க அணுகியுள்ள ஷங்கர்- யார் யார் தெரியுமா?

Posted by - பிப்ரவரி 2, 2024 0
முதல்வன் படம் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்கள் அனைத்துமே மக்களிடம் நல்ல ரீச் பெறும். அப்படி 1999ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான்…

பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!

Posted by - ஜனவரி 10, 2025 0
பொங்கலுக்கு இத்தனை படங்களா வருது? பெரிய லிஸ்ட்டா இருக்கே!இந்த பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன படங்கள் வருதுன்னு தெரிஞ்சுக்க ரசிகர்கள் ஆர்வமா இருப்பாங்க. அவங்க எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி…

குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படம்.. ஹீரோயின் யார் தெரியுமா?

Posted by - செப்டம்பர் 28, 2024 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5ம் சீசனில் நடுவராக இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் சமையல் துறையில் பிரபலம் என்பதால் குக் வித் கோமாளி…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன