w 2

விஜய் பற்றி விசாரித்த முதல்வர்: நிர்வாகிகள் கைகலப்பு

223 0

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான திமுகவில் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என 15,372 பேர் விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். அவர்களுக்கான நேர்காணல் சென்னை அறிவாலயத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளில் புதுச்சேரி தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கிய 116 பேர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

தொடர்ந்து 2-வது நாளான நேற்று தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் தொகுதிகளுக்கான நேர்காணல் அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தியது. இதில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அதனுடன், யாரை வேட்பாளராக தலைமை நியமித்தாலும் அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும். இடம் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் எனவும், பெரும்பாலானவர்களிடம் உங்கள் தொகுதியில் தவெக எவ்வளவு ஓட்டு வாங்கும் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் எம்எல்ஏ.வாக ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) இருக்கிறார். நேற்றைய நேர்காணலில் கிள்ளியூர் தொகுதியை மீண்டும்காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கலாம் என்று ஒருதரப்பினரும், தரக்கூடாது என்று மற்றொரு தரப்பினரும் முதல்வரிடம் தெரிவித்ததாக பேசப்படுகிறது. தொடர்ந்து நேர்காணல் முடிந்து வெளியே வந்த கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகள் இடையே இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது.

ADஇதையடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவர்களை சமதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அறிவாலயம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் விருப்ப மனுக்கள் அளித்தவர்களை நேர்காணலில் பங்கேற்கவிடாமல் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தடுத்துநிறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Related Post

மன்னித்துவிடுங்கள்.. 41 குடும்பத்திடமும் கதறி அழுத விஜய் – மாமல்லபுரத்தில் நடந்தது இதுதான்!

Posted by - அக்டோபர் 27, 2025 0
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் மன்னிப்பு கேட்டு அழுதததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக்…
Gemini Generated Image 80ljk280ljk280lj

இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்!

Posted by - ஏப்ரல் 11, 2026 0
திமுக – அதிமுக கட்சிகளிடையே தொடரும் தாக்குதல் பாணி பிரச்சாரமானது தமிழக தேர்தல் களத்தை 4 முனைப் போட்டி என்ற நிலையில் இருந்து இருமுனைப் போட்டிக்கு நகர்த்தி…

97.37 லட்சம் பேர் பெயர் நீக்கப்பட்டது

Posted by - டிசம்பர் 20, 2025 0
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR) பணிக்குப் பிறகு, மாநில முழுவதும் 97,37,832 பேர் வழக்கமான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் புதிய…

டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

Posted by - செப்டம்பர் 17, 2025 0
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்…
GGG

Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்..

Posted by - ஏப்ரல் 29, 2026 0
Exit Poll Results: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 2021 ஆம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளின்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன