’விஜய் பேசிய இடத்தில் கூட்டத்தை போட்ட திமுக’ ஒரே நாளில் திரண்ட 25 ஆயிரம் பேர் – திருவாரூர்ன்னா சும்மாவா?

192 0

‘விஜய் பிரச்சாரம் செய்த திருவாரூர் தெற்கு வீதியில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேரை கூட்டி அடுத்த நாளே கூட்டத்தை போட்டு மாஸ் காட்டியிருக்கிறது திமுக’

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருவாரூரில் சனிக்கிழமை பிரச்சாரம் செய்த நிலையில், அவர் பிரச்சாரம் செய்த அதே திருவாரூர் தெற்கு வீதியில் அடுத்த நாளான ஞாயிற்றுக் கிழமை மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் ஒரு பொதுக்கூட்டத்தை உடனடியாக ஏற்பாடு செய்தார். அவர் ஏற்பாடு செய்த அந்த பொதுக்கூட்டத்திற்கு ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் திரண்டனர்.

விஜய்க்கு திமுக என்பது யார் ? என காட்டிய திருவாரூர் கூட்டம்

நாகை, திருவாரூர் என்று இரு மாவட்டங்களில் சனிக்கிழமை பிரச்சாரம் செய்தார் விஜய். அவர் பரப்புரையின்போது திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்ததோடு, தனக்கு கூடிய கூட்டத்தை பார்த்து பலருக்கு அச்சம் வந்துள்ளதாக பேசினார். அவர் பேசிய இடம் திருவாரூர் என்பதால், திருவாரூர் திமுகவின் பலம் என்ன என்பதை ஒரே நாளில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அக்கட்சி மாவட்டச் செயலாலர், விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் ஒரே நாளில் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் திரண்டு ஆரவாரம் செய்தனர். அப்போது பலரும் இதுதான் திமுகவின் பலமே என்றும் இப்படி ஒரு கூட்டத்தை ஒரே நாளில் விஜயால் கூட்ட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஓரணியில் தமிழ்நாடு உறுதியேற்பு கூட்டம்

திமுகவின் முக்கியமான முன்னெடுப்பான ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் அடுத்தக் கட்டமான தமிழ்நாட்டை தலைகுனியவிடமாட்டேன் என்ற உறுதியேற்பு கூட்டங்கள் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றனர். திருவாரூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

விஜயை சீண்டிய கே.என்.நேரு

இந்த கூட்டத்தில் பேசிய திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, ’நான் பூண்டி கலைவாணனை அழைத்து சொன்னேன், முதல்நாள்தான் அவரு (விஜய்) இங்கே வந்து பேசிவிட்டு போகிறார். அதே இடத்தில் கூட்டம் போடுகிறேன் என்கிறாயே? என்றேன். அதற்கு கலைவாணன் சொன்னா. ‘அதெல்லாம் ஒரு கூட்டமா? வா அண்ணே, அந்த கூட்டத்தை அடிச்சு காட்டுகிறேன்’ என்றார். அதே மாதிரி ஆயிரக்கணக்கான திமுகவினரை திரட்டி, நேற்று வந்த கூட்டம் ஒரு கூட்டமே இல்லை என்பதை அடித்துக் காட்டியிருக்கிறார் பூண்டி கலைவாணன் என்றார். அதோடு, அவர் (விஜய்) சொல்கிறார். தேர்தலில் அவருக்கும் திமுகவிற்கும்தான் போட்டி என்று, ‘தம்பி, திமுகவோடு போட்டிப் போட உனக்கெல்லாம் தகுதியே இல்லை’ என்று கே.என்.நேரு பேசியதும் கூடியிருந்த திமுகவினர் அனைவரும் உற்சாகமாக ஆர்ப்பரித்தனர்.

Related Post

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF %E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D

CM Vijay: அதிகாரிகளுக்கு நோ..! மக்கள் வரி பணத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கு ட்ரிப்பா? CM விஜய்க்கு சரமாரி கேள்வி

Posted by - மே 29, 2026 0
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய் தனி விமானத்தில் டெல்லிக்கு சென்ற பயணத்தில் முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் யாருமே இடம்பெறாதது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.…
tvk

CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க

Posted by - ஜூன் 1, 2026 0
CM Vijay Speech: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று அங்கு நடந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தான் அணியும் கோட் சூட்…
Generated Image January 07 2026 5 00PM

’DMK FILES’

Posted by - ஜனவரி 7, 2026 0
தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சி மீதான புகார்களை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது அதிமுக, அந்த வகையில் திமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் தொடர்பாக முக்கிய ஆதாரங்களோடு இன்று டெல்லி…

பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!

Posted by - ஜூலை 23, 2025 0
அதிமுக கூட்டணிக்குள் விஜய்யை கொண்டு வருவதற்காக பாஜக-வை கூட்டணியில் இருந்து வெளியேற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற…
ChatGPT Image Feb 18 2026 10 50 45 AM

📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள் அதிகரிப்பு – நிர்வாக அதிகாரிகளின் பொறுப்பு என்ன?

Posted by - பிப்ரவரி 18, 2026 0
📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள், மானியங்கள் – நிர்வாகத்தின் பொறுப்பு என்ன? சென்னை:தமிழ்நாட்டில் சமூகநலத் திட்டங்கள் மற்றும் மானிய செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் கடன்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன