விவசாயம் குறித்து விவாதிக்கத் தயாரா..?

239 0

கொடுத்த வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தைக் கூட திமுக நிறைவேற்றவில்லை – எடப்பாடி பழனிசாமி

விவசாயம் பற்றி என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 3) பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பச்சைத்துண்டு பழனிசாமி என்று மு.க. ஸ்டாலின் கிண்டல் செய்கிறார். விவசாயம் பற்றி அவருக்கு என்ன தெரியும்?

அ.தி.மு.க. கொடுத்த தொடர் அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகையை தி.மு.க.அரசு வழங்குகிறது.வீட்டில் சுவர் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் உரிமைத்தொகையை நிறுத்துவோம் என தி.மு.க.,வினர் மிரட்டி வருகின்றனர். தி.மு.க.,வினர் மிரட்டினால் பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம். ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது நான் பொறுப்பு. உரிமைத்தொகையை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.ஒரே ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்த ஒரே கட்சி அ.தி.மு.க., தான். ஸ்டாலின் மட்டுமல்ல யாராலும் அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களை பற்றி யோசிக்காமல் தன் குடும்பத்தினர் பதவிக்கு வரவேண்டும் என்று மட்டுமே மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். தி.மு.க. ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.கரூரில் செந்தில் பாலாஜி பினாமிகள் 3 ஆயிரம் பார்களில் கள்ள மது விற்றனர். ஆயுட்காலம் வரையில் சிறையில் இருக்கும் அளவுக்கு ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி. இந்தியாவில் ஊழல் செய்வதிலும் போதை பொருள் விற்பனையிலும் தமிழகம் முதன்மையாக உள்ளது. வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றி விட்டதாக தி.மு.க. பச்சை பொய் கூறுகிறது. தி.மு.க. வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றவில்லை. 95% நிறைவேற்றியதாக பேசுகின்றனர். இந்தியாவிலேயே ஊழல் புகாரில் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. அரசுதான். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Post

DMK 2

MK Stalin: யாரை கேட்டு இப்படி பண்ணீங்க? உதயநிதி, சபரீசனுக்கு மு.க.ஸ்டாலின் வார்னிங்! நடந்தது என்ன?

Posted by - ஜூலை 4, 2026 0
தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசனை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது விஜய் தலைமையிலான…
pmk

PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?

Posted by - மே 24, 2026 0
பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பாமக தங்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு…

2026-ல் கப்பு முக்கியம் பிகிலு.. அரசியல் என்ட்ரி பற்றி மறைமுகமாக சொன்னாரா விஜய்?

Posted by - நவம்பர் 2, 2023 0
லியோ விஜய் அரசியலுகு வர போகிறார் என நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து…

“அண்ணாமலையை சும்மா விடுவோமா…? – உதயநிதி ஸ்டாலின்

Posted by - ஏப்ரல் 18, 2023 0
அண்ணாமலை மீது தானும் மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி. DMK Files என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து பட்டியலை…
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95

TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு

Posted by - ஜூன் 2, 2026 0
TN By-Election: தம்ழிநாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேதலில் ஆளுங்கட்சியான தவெகவை வீழ்த்த, ஒருங்கிணைந்து செயல்பட திமுக மற்றும் அதிமுக திட்டமிட்டுள்ளனவாம். TN By-Election: தம்ழிநாட்டில் நடைபெற உள்ள…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன