10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது… 91.55% பேர் தேர்ச்சி- இம்முறையும் மாணவிகளே அதிக தேர்ச்சி!

249 0

தமிழ்நாட்டில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதற்காக, மாநிலம் முழுவதும் 4107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்ட சூழலில், ஏப்ரல் 12- ஆம் தேதி முதல் 22- ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன. இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55% ஆக உள்ளது. வழக்கம் போலவே மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 94.53% ஆகவும் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 88.58% உள்ளது. மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவ, மாணவிகள் ஏற்கெனவே தேர்வுத்துறைக்கு தெரிவித்திருந்த செல்போன் எண்களுக்கு தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டன. இதுதவிர, அரசுத் தேர்வு இயக்ககத்தின் இணைய தளங்களான www.results.nic.in, www.dge.tn.gov.in ஆகியவற்றின் மூலமும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

Related Post

பசிக்கு சாப்பாடு போட்டவரையே துடிதுடிக்க கொன்ற வாலிபர்கள்- போலீசில் வாக்குமூலம்

Posted by - மார்ச் 30, 2023 0
கோவை: கோவை அன்னூர் அடுத்த கரைப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது60). விவசாயி. இவரது மனைவி தங்கமணி (54). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து…
mks

’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!

Posted by - ஜூன் 9, 2026 0
ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல  ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா? திமுக கேள்வி தவெக தலைவர் விஜய் தலைமையிலான…

துணிவு இருந்தால்… – அஜித் படத்துக்கு ஆதரவாக மாறிய கருணாநிதி ட்வீட்- கொண்டாடும் ரசிகர்கள்

Posted by - ஜனவரி 9, 2023 0
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ட்வீட் ஒன்றை அஜித் ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர் துணிவு படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன்கள்…
tn

CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?

Posted by - ஆகஸ்ட் 8, 2026 0
DMK and AIADMK boycotted : முதலமைச்சர் விஜய் தலைமையிலான திமுக எம்பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளது. அந்த வகையில் மொத்தமுள்ள…

ஒரே சாய்ஸ் அதிமுக கூட்டணி தான்…தவெக நிர்வாகிகளிடம் விஜய் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.?

Posted by - ஏப்ரல் 26, 2025 0
அதிமுகவிடம் ஓவராக டிமாண்ட் செய்து, கூட்டணியை கோட்டைவிட்டு விட்டதாக தவெக நிர்வாகிகளிடம் விஜய் புலம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் யார் என்று தெரியுமா.? உங்க பேச்சை எல்லாம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன