2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க இலக்கு.. தவெக அறிவிப்பு

268 0

சென்னை பனையூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் கூட்டத்திற்கு பிறகு அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்ட உடனேயே கட்சியை கட்டமைக்கும் பணிகளை விறுவிறுவென மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விஜய் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து கூட்டம் முடிந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் உறுப்பினர் சேர்க்கைக்காக ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அதனுடன் இணைந்து நிர்வாகிகள் அனைவரும் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், உறுப்பினர் சேர்க்கைக்காக சிறப்பு செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதை பயன்படுத்தியே உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பாக செய்து 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

CM Vijay: நெருங்கும் இடைத்தேர்தல்; தாராபுரத்தில் இன்று விஜய் பரப்புரை…! என்ன பேசப்போகிறார் முதலமைச்சர்?

Posted by - செப்டம்பர் 30, 2026 0
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக விஜய் இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு…
Generated Image November 20 2025 10 31AM

மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு

Posted by - நவம்பர் 20, 2025 0
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட பரிந்துரையை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மெட்ரோ ரயிலும் மக்களின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து…

கரூர் துயரம்; உயர் நீதிமன்ற நீதிபதி கருத்தை நீக்க வேண்டும்… உச்ச நீதிமன்றத்தில் தவெக முறையீடு

Posted by - அக்டோபர் 9, 2025 0
விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை எனக் கூறியதை நீக்க உச்ச நீதிமன்றத்தில் தவெக தாக்கல் செய்துள்ள மனுவில் வலியுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தவெக தாக்கல் செய்த மனுவில்…

”இந்து மதம் என்று ஒன்று கிடையாது, அதில் சகோதரத்துவமே இல்லை” – இறங்கி அடித்த திருமா, பேசுமா பாஜக?

Posted by - ஜூன் 25, 2025 0
இந்து மதம் என்பதே 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இல்லை என, விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். இந்து மதத்தில் சகோதரத்துவம் இல்லை என அரசியலமைப்பு சட்டம்…

காக்கியால் விழிபிதுங்கும் அறிவாலயம்….

Posted by - ஜூலை 1, 2025 0
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் கனவை, அவரது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையே கலைத்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையினர் மீது…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன