%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF %E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF %E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95

CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?

88 0

முதலமைச்சர் விஜய் இன்று மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட உள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் தவெக-விற்கு இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

மதுராந்தகத்தில் இன்று விஜய்:

இந்த இடைத்தேர்தலில் தவெக – திமுக – அதிமுக – நாம் தமிழர் – இந்திய கம்யூனிஸ்ட் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், ஆளுங்கட்சியான தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் விஜய் இன்று மதுராந்தகத்தில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

3 மணிக்கு பரப்புரை:

அதிமுக-வில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் வேட்பாளராக களமிறங்கும் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக விஜய் இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார்.  செங்கல்பட்டு, மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3 மணியளவில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.

முதலமைச்சர் விஜய்யின் இந்த பரப்புரையில் பங்கேற்க 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகமான அளவிலான மக்களை காவல்துறை அனுமதிக்காது. முதலமைச்சர் விஜய்யின்  இந்த பரப்புரையில் கர்ப்பிணி, சிறுவர், சிறுமிகள் ஆகியோருக்கு அனுமதி கிடையாது. மேலும், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் ஆகியோருக்கு அனுமதி கிடையாது.

கட்டாய வெற்றி நெருக்கடியில் தவெக?

முதலமைச்சர் விஜய் சாலை வலம் வந்த பிறகு தனது பரப்புரையை மேற்கொள்கிறார். முதலமைச்சர் விஜய் இன்று மதுராந்தகம் தொகுதிக்கு வருவதால் தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை இல்லாத தவெக அரசுக்கு இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றி மிக மிக முக்கியமாக அமைந்துள்ளது.

இன்று பரப்புரையில் ஈடுபட உள்ள முதலமைச்சர் விஜய் தற்போது தமிழ்நாட்டையே உலுக்கி வரும் ஜெம் வீரமணி விவகாரம் குறித்து பேசுவார் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் கடந்த கால திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் இடைத்தேர்தல்:

முதலமைச்சர் விஜய் மதுராந்தகம் தொகுதியில் மட்டுமின்றி தாராபுரத்திற்கும் விரைவில் பரப்புரையில் ஈடுபட உள்ளார். ஆளுங்கட்சியாக தவெக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது விஜய்க்கு மிக மிக முக்கியமான தேர்தல் ஆகும்.

இந்த தேர்தலைப் பொறுத்தமட்டில் அதிமுக எம்எல்ஏ-க்களாக பொறுப்பேற்றவர்கள் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் போட்டியிடுவது பெரும் எதிர்ப்பை, பின்னடைவை தவெக-விற்கு ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆளுங்கட்சியான தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் அக்டோபர் 9ம் தேதி வெளியாக உள்ளது.

 

Related Post

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் 4வது போர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Posted by - மே 31, 2023 0
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என உரையாற்றினோம் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நான்காவது போர் என விளையாட்டு…

பெண்களுக்கு இலவச கல்வி..20 லட்சம் புதிய வேலை.. பொது சிவில் சட்டம் – குஜாரத்தில் பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதி

Posted by - நவம்பர் 26, 2022 0
குஜராத் மாநில தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட பாஜக பெண்களுக்கு இலவச கல்வி, மாநிலத்தில் பொது சிவில் சட்டம் போன்றவற்றை வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல்…

விசிகவை ரவுண்டு கட்டி பொளக்கும் தவெக.. ”முட்டு கொடுப்பதை நிறுத்திட்டு கட்சியை காப்பத்துங்க பாஸ்”

Posted by - செப்டம்பர் 22, 2025 0
 திமுக மீதான விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தந்த விசிக எம்.எல்.ஏ., ஆளுர் ஷா நவாஸை தவெகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முழு நேரமும் திமுகவிற்கு முட்டுக் கொடுப்பதை…

“கடலில் பேனா நினைவு சின்னம் வைத்தால் நிச்சயம் உடைப்பேன்…” – மீண்டும் சீமான் பரபரப்பு பேச்சு..!

Posted by - ஏப்ரல் 7, 2023 0
குண்டு வைத்து கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல, குடிக்க வைத்து கொள்வதும் இனப்படுகொலைதான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு. சென்னை துறைமுகத்தில் உள்ள…

மத்திய அரசின் திட்டங்களை டப்பிங் செய்து சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது…

Posted by - பிப்ரவரி 21, 2024 0
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, விளம்பர ஆட்சி மட்டுமே நடத்திக் கொண்டிருக்கும் திமுக, மீண்டும் ஒரு முறை, வாக்களித்த மக்களை பட்ஜெட் மூலம் நட்டாற்றில் நிறுத்தி உள்ளதாக…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன