TVK vs DMK

TVK vs DMK: களேபரமான விவாதம் – அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு

114 0

DMK TVK: விவாத நிகழ்ச்சியில் தவெக செய்தி தொடர்பாளர் மீது திமுகவினர் நாற்காலியை தூக்கி வீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DMK TVK: விவாத நிகழ்ச்சிகளில் தவெகவினருக்கு எதிராக திமுகவினர் மிரட்டல் மற்றும் தாக்குதலில் ஈடுபடுவது என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

களேபரமான விவாத நிகழ்ச்சி

சென்னையில் தனியார் யூட்யூப் சேனல் சார்பில் நேற்று விவாத நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆளுங்கட்சியான தவெக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுகவை சேர்ந்தவர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை காரசாரமாக பகிர்ந்தனர். அந்த வகையில் தவெகவைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதனை ஏற்க முடியாது என கூறி பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து இருந்த திமுகவினர் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். நாஞ்சில் சம்பத் இதற்கு மேல் பேசக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தை சமாளிக்க எவ்வளவோ முயன்றுள்ளனர். ஆனால் கீழே இருந்தவவர்கள் அநாகரீகமான சொற்களை பயன்படுத்தி வசைபாட தொடங்கினர்.

 

நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல்:

காவல்துறையினரும் அரங்கிற்குள் வந்து திமுகவினரை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் சிலர் திடீரென விவாத மேடையின் மீது ஏற, பவுன்சர்கள் நாஞ்சில் சம்பத்தை சூழ்ந்து காப்பாற்ற முயன்றனர். அதற்குள் கீழே இருந்த சிலர் நாற்காலியை தூக்கி வீச, அது பவுன்சர்கள் மற்று நாஞ்சில் சம்பத் ஆகியோர் மீது பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்பு நீண்ட போராட்டத்திற்கு பிறகு இரண்டு தரப்புகளும் சமாதானம் செய்யப்பட்டு அங்கு இயல்பு நிலை மீட்கப்பட்டது.

தொடரும் தவெக – திமுக மோதல்:

விவாத நிகழ்ச்சிகளில் தவெக மற்றும் திமுக இடையே கைகலப்புகள் என்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் தி டிபேட் எனும் தனியார் யூட்யூப் சேனல் நடத்திய விவாதத்தின் போதும் தவெக செய்தி தொடர்பாளர் ராவுத்தருக்கு எதிராக, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த திமுகவினர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளை கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அநாகரீகமாகவும் பேசி கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். இதனால் அங்கு ஒரு மோசமான சூழல் நிலவியது.

 

தவெகவினர் கடும் கண்டனம்:

நாஞ்சில் சம்பத் மீதான தாக்குதலுக்கு தவெகவினர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாகி 3 மாதங்களை கடந்த பிறகும் கூட, தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமின்றி இத்தகைய அராஜக போக்கில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக சாடுகின்றனர். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர அதை வன்முறையாக்க கூடாது. ஒவ்வொரு மேடையிலும் திமுகவினர் முதலமைச்சரையும், தவெக அரசையும் மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர். அதை தங்கள் தரப்பு கருத்துகளால் மட்டுமே எதிர்க்கிறது. ஆனால், ஆட்சியை இழந்த பிறகும் கூட தங்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என திமுகவினர் இறுமாப்புடன் உள்ளனர்.ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தங்களுக்கு எதிராக பேசியவர்களை ஒடுக்கும் எதேச்சதிகார போக்குடன் இருந்ததால் தான், தொடங்கி இரண்டே ஆண்டுகளான கட்சியிடம் திமுக தோல்வி கண்டது. அதை இன்றும் உணராமல் அராஜகத்தில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல எனவும், நாஞ்சில் சம்பத்தை தாக்கியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Post

கருவை கலைக்க சொல்கிறார், இரண்டு முறை தாக்கினார்.. CWC நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி புகார்

Posted by - ஆகஸ்ட் 29, 2025 0
குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக இருப்பவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை…

எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி

Posted by - நவம்பர் 30, 2022 0
ரச்சிதாவை விமர்சித்த ஜனனி விஜய் டிவி சரவணன் மீனாட்சி சீரியல் புகழ் ரச்சிதா பிக் பாஸ் ஆறாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் இதற்கு முன்பு சீரியல்களில் நடிக்கும் போது…

பிரபாகரன் மகள் துவாரகா உருவம் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது? சர்வதேச உளவு அமைப்புகள் சந்தேகம்

Posted by - நவம்பர் 28, 2023 0
சென்னை: இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தனி தமிழ்நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடியது. 90 சதவீத வெற்றியை பெற்றிருந்த நிலையில் உலகின் பல நாடுகள்…
%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95 %E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81 100 %E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4 %E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D %E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9

தவெக அரசு 100 நாட்களில் செய்த சாதனைகள் என்னென்ன?: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க

Posted by - ஆகஸ்ட் 17, 2026 0
விஜய் தலைமையிலான தவெக அரசு 100 நாட்களில் செய்த சாதனைகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம். தமிழ்நாட்டில் தாங்கள் சந்தித்த முதல் தேர்தல் களத்திலே வெற்றி பெற்று…

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்: மருமகனை விருந்துக்கு அழைத்து சென்று காரில் இருந்து தள்ளிவிட்ட மாமனார்

Posted by - செப்டம்பர் 7, 2023 0
திருமங்கலம்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மணி. இவர் தனது குடும்பத்தினருடன் மதுரை கே.கே.நகரில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரியவரதன் (வயது 22). இவரும், மதுரை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன