Hero Splendor Electric: இந்தியாவின் நம்பர் ஒன் பைக்.. ஸ்ப்ளெண்டரை மின்சார எடிஷனில் களமிறக்கும் ஹீரோ – 180KM ரேஞ்ச்

305 0

Hero Splendor Electric: இந்திய பைக் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்ப்ளெண்டர் மாடலை, மின்சார எடிஷனில் அறிமுகப்படுத்த ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Hero Splendor Electric: ஸ்ப்ளெண்டர் மோட்டார் சைக்கிளை மின்சார எடிஷனில், 2027ம் ஆண்டில் சந்தைக்கு கொண்டு வர ஹீரோ நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளதாம்.

ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் மின்சார எடிஷன்:

இந்தியாவில் பயனர்களால் மிகவும் நம்பத்தகுந்த மற்றும் விரும்பக்கூடிய மோட்டார் சைக்கிளான ஸ்ப்ளெண்டர் விரைவில் புதிய அவதாரம் எடுக்க உள்ளது. குறைந்த பராமரிப்பு செலவு, அட்டகாசமான மைலேஜிற்கு பெயர் பெற்ற, இந்த மோட்டார் சைக்கிளை மின்சார எடிஷனிற்கு அப்க்ரேட் செய்ய ஹீரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், அதற்கான பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளாசிக் லுக், மாடர்ன் அம்சங்கள்:

மின்சார எடிஷன் ஸ்ப்ளெண்டர் மோட்டார் சைக்கிளின் வடிவமைப்பானது, தற்போது விற்பனையில் உள்ள வாகனத்தின் டிசைனை அப்படியே தொடரும் என கூறப்படுகிறது. அதேநேரம், மாடல் அம்சங்கள் பலவும் கூடுதலாக இணைக்கப்படக்கூடும். அதன்படி, வட்டவடிவிலான எல்இடி முகப்பு விளக்குகள், மேட் ஃபினிஷ் பேனல், டேங்க் மாதிரியான சேமிப்பு இடம் ஆகியவை வழங்கப்படலாம். இந்த மோட்டார் சைக்கிளானது மேட் ப்ளாக், ப்ளூ ஆக்செண்ட், சில்வர் மற்றும் பேர்ட்ல் ஒயிட் ஆகிய வண்ண விருப்பங்களில் வழங்கப்படலாம். சுமார் 110 கிலோ எடைக்குள் அடங்குவதால், போக்குவரத்து நெரிசலிலும் இந்த வாகனத்தை எளிதாக கையாளக்கூடும்.

பேட்டரி, செயல்திறன்

புதிய மின்சார எடிஷன் ஸ்ப்ளெண்டரானது 3KW BLDC மோட்டாரை கொண்டு, 255Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகபட்சமாக மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த வாகனம், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 7 விநாடிகளில் எட்டும் வகையில் வடிவமைக்கப்படுகிறதாம். 4KWh லித்தியம் – அயன் ரிமூவல் பேட்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாம். அதன்படி, முழுமையாக சார்ஜ் செய்யும்போது சிங்கிள் பேட்டரி எடிஷன் 120 கிலோ மீட்டர் ரேஞ்சையும், இரண்டு பேட்டரிகளை கொண்ட எடிஷன் 180 கிலோ மீட்டர் ரேஞ்சையும் வழங்கக் கூடும் என கூறப்படுகிறது. சாதாரண சார்ஜரில் 4 முதல் 5 மணி நேரத்தில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகும் என்றும், ஃபாஸ்ட் சார்ஜரில் வெறும் ஒன்றரை மணி நேரத்தில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்ஜின் அடிப்படையிலான ஹீரோவின் ஸ்ப்ளெண்டர் பைக்கானது, லிட்டருக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட அம்சங்கள்:

ஸ்ப்ளெண்டரின் புதிய மின்சார எடிஷனானது பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பெறக்கூடும் என கூறப்படுகிறது. அதில்,

  • செமி டிஜிட்டல் க்ளஸ்டர்  & 4.59 இன்ச் எல்இடி ஸ்க்ரீன் (டாப் வேரியண்ட்களில்)
  • ப்ளூடூத் கனெக்டிவிட்டி  & லொகேஷன் ட்ராக்கிங்
  • ரியல் டைம் டயக்னாஸ்டிக்ஸ் & யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்
  • எல்இடி லைட்டிங் & சைட் – ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப்
  • சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் & ரிஜெனரேடிவ் ப்ரேக்கிங் ஆகிய அம்சங்கள் வழங்கப்படலாம்

ஸ்ப்ளெண்டர் மின்சார எடிஷன் – விலை விவரங்கள்

மின்சார வாகனங்களுக்கான மானியம் ஆகியவற்றை கடந்த பிறகு, புதிய ஸ்ப்ளெண்டர் மோட்டர் சைக்கிளின் விலையானது, ரூ.1.05 லட்சத்தில் தொடங்கி ரூ. 1.30 லட்சம் வரை நீள வாய்ப்புள்ளது. ஆன் – ரோட் விலை ரூ.1.15 லட்சம் முதல் ரூ.1.45 லட்சம் வரை இருக்கும். தற்போதைய இன்ஜின் அடிப்படையிலான ஸ்ப்ளெண்டர் பைக்கின் ஆன் – ரோட் விலை, 95 ஆயிரத்து 987 ரூபாயில் தொடங்கி 97 ஆயிரத்து 814 ரூபாய் வரை நீள்கிறது. 2027ம் ஆண்டு வாக்கில் ஸ்ப்ளெண்டரின் புதிய மின்சார எடிஷனானது சந்தைப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

Related Post

ஹார்ட் அட்டாக் வந்தாலும் இந்த கார் உங்கள காப்பாத்தும்… அசத்தலான எலெக்ட்ரிக் கார்!

Posted by - டிசம்பர் 10, 2022 0
முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் காரான இதில், ஓட்டுநரின் அறிகுறிகளைக் கண்காணிக்கக்கூடிய சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. சீனாவைச் சேர்ந்த பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனமான பியான்கா,…

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

Posted by - ஜூலை 11, 2023 0
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக புவியியல்…

Whatsapp | இனி வாட்ஸ் அப்பில் இந்த சேவைகளை பயன்படுத்த கட்டணம்..! வெளியான அதிர்ச்சி தகவல்

Posted by - ஜூன் 19, 2025 0
சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை ஒளிபரப்ப மெட்டா திட்டமிட்டுள்ளதாகவும் அதன் மூலம் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் வணிக வாய்ப்புகளை பெருக்க முடியும் என்றும் மெட்டா கருதுவதாக…

ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு: 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Posted by - ஆகஸ்ட் 8, 2023 0
19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன.…

மங்கோலியாவில் தீவிரமாக பரவி வரும் பிளேக் நோய்

Posted by - ஜூன் 28, 2023 0
உலன்பேட்டர் :  மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய் வேகமாக பரவி வருகிறது. இது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆகும். இதற்கு தகுந்த சிகிச்சை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன