India Post GDS Recruitment 2026

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு: என்ன தகுதி? சம்பளம்? விவரங்கள் உள்ளே!

125 0

India Post GDS Recruitment 2026: மத்திய அரசின் இந்திய அஞ்சல் துறையில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரங்களை கீழே விரிவாக அறியலாம்.

இந்திய அஞ்சல் துறை GDS வேலைவாய்ப்பு 2026: முழு விவரங்கள்

இந்திய அஞ்சல் துறையானது, கிராமின் தக் சேவக் (GDS) ஆன்லைன் பணிநியமன அட்டவணை-II, ஜூலை 2026-க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) மற்றும் தக் சேவக் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பாணை அண்மையில் வெளியிடப்பட்டது.

முக்கிய தேதிகள் என்னென்ன?

  • ஒருமுறை பதிவு: ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 19, 2026 வரை (மாலை 5 மணிக்குள்).

  • ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்துதல்: செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 21, 2026 வரை (மாலை 5 மணிக்குள்).

  • விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான அவகாசம்: செப்டம்பர் 23 மற்றும் 24, 2026 (மாலை 5 மணிக்குள்).

சம்பள விவரங்கள் (TRCA அடிப்படை)

தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு TRCA (Time Related Continuity Allowance) அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM): ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை.

உதவி கிளை போஸ்ட்மாஸ்டர் (ABPM) மற்றும் தக் சேவக்: ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை.

இந்த TRCA ஊதியத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆண்டுதோறும் 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். இது தவிர, அகவிலைப்படி, GDS பணிக்கொடை மற்றும் சேவை விடுவிப்பு பலன் திட்டம் போன்ற சமூக பாதுகாப்பு பலன்களுக்கும் இவர்கள் தகுதியுடையவர்கள்.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
இந்த GDS பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கும் கோட்டத்தில் உள்ள அனைத்து பணியிடங்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும்.

கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்

  • பெண் விண்ணப்பதாரர்கள்

  • பட்டியலினத்தவர்

  • பழங்குடியினர் 

  • மாற்றுத்திறனாளிகள் 

  • திருநங்கைகள்

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கிரெடிட்/ டெபிட் கார்டுகள், நெட் பேங்க்கிங் மற்றும் UPI போன்ற ஆன்லைன் முறைகள் மூலமாகத் தங்களது கட்டணத்தைச் செலுத்தலாம். ஒருமுறை செலுத்தப்பட்ட கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய தேர்வர்களின் கல்வித் தகுதி, பணியிடங்கள், தேர்வு முறை, அறிவிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாகக் காண https://www.indiapost.gov.in/gdsonlineengagement/pdf/descriptive-notification.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

Related Post

ரூ.10-க்கு ரீசார்ஜ் திட்டம்: டிராய் உத்தரவு!

Posted by - ஜனவரி 17, 2025 0
365 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய பத்து ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருமாறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் இன்றளவும் 15 கோடி பேர்…

Jio-க்கு இனி சிக்கல்.. இந்தியாவில் தனது கடையை விரிக்கும் டாப் பணக்காரர் எலான் மஸ்க்

Posted by - நவம்பர் 9, 2024 0
இந்தியாவின் அம்பானியின் ஜியோ நெட்வொர்க் தான் லீடிங்கில் உள்ள நிலையில் அம்மானிக்குப் போட்டியாக எலான் மஸ்க் இந்திய மார்க்கெட்டுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகிறது. இந்தியா மிகப்பெரிய மக்கள்…
techers protest

இந்திய அளவில் “X” தளத்தில் டிரெண்டிங்: #TeachersProtest

Posted by - ஜனவரி 2, 2026 0
“சம வேலைக்கு சம ஊதியம்” – 8 நாட்களாக சென்னை போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்** சென்னை:தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், “சம வேலைக்கு சம…

மகாராஷ்டிராவில் சோகம் – 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி

Posted by - ஆகஸ்ட் 14, 2023 0
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மாநகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே…

தட்கல் டிக்கெட் முன்பதிவில் OTP கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Posted by - டிசம்பர் 25, 2025 0
இந்தியா ரயில்வே, தட்கல் (Tatkal) டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது OTP (One…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன