%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D

Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு

170 0

Minister Ramesh: திருச்செந்தூர் கோயிலில் தன்னிடம் லஞ்சம் வாங்கிய நபரை மன்னித்து விட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Minister Ramesh: அமைச்சர் ரமேஷிடமே லஞ்சம் வாங்கியிருந்தாலும் பிரமாணர் என்பதற்காக மன்னிப்பு கடிதம் வாங்கிக் கொண்டு விட்டுவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளன.

அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை இல்லையா?

திருச்செந்தூர் முருகன் கோயிலில், பொதுமக்களில் ஒருவராக டி-ஷர்ட் அணிந்தபடி எளிய முறையில் இந்து சமய அறநிலைய அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை அடையாளம் காணாத அர்ச்சகரில் சிலர் அமைச்சரின் உதவியாளரை அணுகி, 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் விஐபி தரிசன வழியில் அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். இதையடுத்து அந்த ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்கும் நோக்கில், ஜி-பே வழியாக பணத்தை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பிறகு அர்ச்சகர்கள் அனைவரையும் கையும் களவுமாக பிடித்து, அவர்கள் கைப்படி விளக்க மற்றும் மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கியுள்ளார். இதனிடையே, தவறு செய்தவர்களும், அமைச்சரும் ஒரே பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நடவடிக்கை எதுவும் எடுக்காமல், மன்னிப்பு கடிதம் மட்டுமே பெறப்பட்டுள்ளதாக இணையத்தில் குற்றசாட்டுகள் எழுந்தன.

 

அர்சகர்கள் மீது பாகுபாடு காட்டினேனா? – அமைச்சர் ரமேஷ் 

கோயில் ஆய்வு பணிகளுக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம், இணையத்தில் எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “பக்தர்கள் தரப்பிலிருந்து பல்வேறு வழிகளில் என்னிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதன்படியே யாரும் எதிர்பாராத விதமாக இன்று விடியற்காலையில் ஆய்வு செய்தேன். அப்போது பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நேரடியாக தரிசனதிற்கு அழைத்துச் செல்லப்படுவதை கண்டுபிடித்தோம். அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து தான் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அது யாராக இருந்தாலும், எந்த பாகுபாடும், பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குள் மன்னிப்பு கடிதம் வாங்கிக்கொண்டு மன்னித்துவிட்டு விட்டோம் என இணையத்தில் ஒரு தவறான தகவல் பரவுகிறது. ஆனால், அவர்களிடம் விளக்கம் கேட்டு விளக்க கடிதம் மட்டுமே வாங்கியுள்ளோம். எப்படி, எதற்காக பணம் வாங்கிக் கொண்டு மக்களை உள்ளே அனுமதித்தீர்கள் என விளக்கக் கடிதம் வாங்குவது ஒரு நடைமுறை. இதன் பேரில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

”பொய்களை பரப்பும் கும்பல்”

கட்டண வசூல் மட்டுமின்றி அன்னதான கூடங்கள், கோயில் சொத்துகள் பற்றிய ஆவணங்கள், கோயிலுக்கு வரவேண்டிய வருமானம் எங்கெல்லாம் தடைபட்டுள்ளன? தேவையான அடிப்படை வசதிகள் என்ன? தூய்மையாக பராமரிக்க செய்ய வேண்டியது என்ன? பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிகள் என்ன? என்பது பற்றியும் ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். இதன் முடிவில் தொடர்புடைய, உண்மையிலேயே குற்றம்செய்த யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். அதற்கு முன்பாக தவறான தகவலை வெளியிட்டு, ஒருசாரார் மீது மிருதுவாக நடந்துகொள்வதாக பரப்பி வருகின்றனர். அப்படி எந்த விஷயமும் நடக்கவில்லை” என அமைச்சர் ரமேஷ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அமைச்சர் போட்ட ட்வீட்

இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு மத்தியில் அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்” என பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

கள்ளிப்பால் ஊத்தி கொன்னிருக்கணுமா.. நிக்சனை வறுத்தெடுத்த அர்ச்சனாவின் அப்பா

Posted by - டிசம்பர் 20, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டுக்கு இன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். பூர்ணிமா, அர்ச்சனா, விக்ரம் உள்ளிட்ட போட்டியாளர்களின் பெற்றோர் வர அவர்கள் எமோஷ்னல் ஆனார்கள். பல்வேறு…

பட்டினி கிடப்பதால் உடல் எடை குறையுமா..? இதிலுள்ள ஆபத்துகள் என்ன?

Posted by - ஜூலை 23, 2025 0
நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதால், உணவின் மீதான ஏக்கம், அதிகமாக சாப்பிடுதல் மற்றும் இரத்த சர்க்கரை ஏற்றத்தாழ்வுகளை தூண்டுகிறது. காலப்போக்கில், இது கொழுப்பு சேமிப்பை ஊக்குவிக்கும் கார்டிசோல்…

ஜீவானந்தத்தை முடிக்க திட்டம் போடும் குணசேகரன்..எதிர்நீச்சல் சீரியலில் என்ன நடக்க போகிறது..???

Posted by - ஜூலை 24, 2023 0
எதிர்நீச்சல் சீரியலில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை தெரிவிக்கும் விதமாக தற்போது ஒரு குட்டி புரோமோ வெளியாகியுள்ளது. அப்பத்தாவின் சொத்துக்கள் தன்னுடைய கையை விட்டு சென்றதை…

ப்ராக்கோலியை எப்படி சமைப்பது-ன்னு தெரியலையா? இப்படி குருமா செய்யுங்க.. சூப்பரா இருக்கும்…

Posted by - நவம்பர் 3, 2023 0
நீங்கள் மார்கெட்டுகளில் காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியை பார்த்திருப்பீர்கள். அதைப் பார்த்ததும், பலருக்கும் எப்படி இதை சமைப்பது என்று ஒரு கேள்வி எழும். நீங்கள்…
Poolan Kilangu Benefits in Tamil

பூலான் கிழங்கு சாப்பிட்டால் என்ன பலன்கள்? உடலுக்கு தரும் அற்புத நன்மைகள்!

Posted by - ஜூன் 15, 2026 0
தமிழகத்தின் பல கிராமப்புற பகுதிகளில் இயற்கையாக கிடைக்கும் பாரம்பரிய உணவுப் பொருட்களில் ஒன்று பூலான் கிழங்கு. மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் இந்தக் கிழங்கு, சுவை மட்டுமல்லாமல் பல்வேறு…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன