PMK vs Congress

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?

84 0

தமிழ்நாட்டின் முக்கியமான கட்சிகளில் ஒன்று பாமக. இவர்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கும் இடையே நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்து கட்சி முழுவதும் அன்புமணி கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

பெரும்பான்மை இல்லாத காரணத்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தவெக ஆட்சி நடந்து வருகிறது.

காங்கிரசை குறிவைக்கும் அன்புமணி:

கூட்டணி கட்சிகள் சிலர் குடைச்சல் அளித்து வரும் சூழலில், தவெக அரசு பாமக-வுடன் இணக்கம் காட்டி வருகிறது. கட்சி முழுவதும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகு அன்புமணி காங்கிரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். காவிரி விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரசை அன்புமணி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேகதாது அணை கட்டக்கூடாது என்று ராகுல்காந்தி பேசினால் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறத் தயார் என்று  அன்புமணி பேசியுள்ளார்.

காரணம் என்ன?

அன்புமணியின் இந்த பேச்சிற்கு மற்றொரு முக்கிய காரணம் உள்ளது. மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த அன்புமணிக்கு இதுவரை எந்த கிரீன் சிக்னலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தங்களிடமும் 4 எம்எல்ஏ-க்கள் இருக்கும் சூழலில், காங்கிரஸ் விலகினால் அந்த வெற்றிடத்தை தாங்கள் நிரப்பலாம் என்றும், அதன்மூலம் அமைச்சரவையில் இடம்பிடிக்கலாம் என்று அன்புமணி வியூகம் வகுத்துள்ளார்.

ஆட்சி அமைந்த பிறகு சில சமயங்களில் விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ந்து முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், பாமக-வுடன் தவெக நெருங்கியதை கண்ட திருமாவளவன் அதன்பின்பு அமைதியானார். மேலும், தவெக ஆட்சியில் விசிக அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளும் திருமாவளவனுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கவனம் காட்டும் காங்கிரஸ்:

விசிக அமைதியாகியுள்ள சூழலில், கர்நாடகத்தில் ஆட்சியில் காங்கிரஸ் உள்ள சூழலில் காங்கிரசை அன்புமணி குறிவைத்து விமர்சித்து வருகிறார். அதேசமயம், காங்கிரசும் அமைச்சரவையில் இடம்கிடைத்துள்ள சூழலில் அதற்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், தற்போது முதலே அதற்கான கூட்டணி காய்களை ஒவ்வொரு கட்சிகளும் நகர்த்தி வருகின்றனர். தவெக-வும் வரும் மக்களவைத் தேர்தலை காங்கிரசுடன் இணைந்து சந்திக்க வேண்டும் என்றே ஆர்வம் காட்டி வருகிறது.

Related Post

தேர்தல் களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் இருக்கிறது

Posted by - செப்டம்பர் 25, 2025 0
அடுத்த ஆண்டு தேர்தலுக்கான களத்தில் அதிமுக தான் முதல் இடத்தில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் இரண்டாம் இடத்திற்கத் தான் போட்டி நடப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

“கடலில் பேனா நினைவு சின்னம் வைத்தால் நிச்சயம் உடைப்பேன்…” – மீண்டும் சீமான் பரபரப்பு பேச்சு..!

Posted by - ஏப்ரல் 7, 2023 0
குண்டு வைத்து கொல்வது மட்டும் இனப்படுகொலை அல்ல, குடிக்க வைத்து கொள்வதும் இனப்படுகொலைதான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு. சென்னை துறைமுகத்தில் உள்ள…

இது அராஜகப்போக்கு: மகளிர் தினத்தில் தமிழக அரசை சரமாரியாக சாடிய விஜய்

Posted by - மார்ச் 8, 2025 0
மகளிர் தினத்தில் அடையாள போராட்டம் நடத்திய தவெகவினரை போலீசார் கைது செய்ததற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தில் அடையாள போராட்டம் நடத்திய தவெகவினரை…

”உதயநிதிக்கு அமைச்சர் பதவி… சமூக அநீதி” – வானதி சீனிவாசன் விமர்சனம்

Posted by - டிசம்பர் 17, 2022 0
பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீநிவாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது வாரிசு அரசியல் என்றும் பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்றும் விரிவாக அறிக்கை ஒன்றை…
Generated Image January 12 2026 5 19PM

கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்

Posted by - பிப்ரவரி 4, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பாக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கடன் தள்ளுபடி, முதியோர் ஓய்வூதியம், மானிய விலையில் சிலிண்டர் என பல…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன